தெமித்திரஸ்
முதலாம் தெமித்திரஸ் | |
---|---|
மன்னர், கிரேக்க பாக்திரியா பேரரசு & இந்தோ கிரேக்க நாடு | |
![]() | |
முதலாம் தெமித்திரஸ் நாணயம் | |
ஆட்சிக்காலம் | கிமு 200 – 180 |
முன்னையவர் | முதலாம் ஐதிதெமஸ் |
தந்தை | முதலாம் ஐதிதெமஸ் |
மரபு | ஐதிதெமஸ் வம்சம் |
பிறப்பு | {வார்ப்புரு:Place of birth |
சமயம் | பௌத்தம், ஹெல்லியனிசம் |
தெமித்திரஸ் Demetrius I of Bactria) (ஆட்சிக் காலம் கிமு 200 – 180) பேரரசர் அலெக்சாண்டரின் இந்தியப் படையெடுப்புக்குப் பின்னர், காந்தாரத்தை மையமாகக் கொண்டு நடு ஆசியாவின் கிரேக்க பாக்திரியா பேரரசு மற்றும் இந்தோ கிரேக்க நாடுகளின் நிலப்பரப்புகளை கிமு 200 முதல் 180 முடிய ஆட்சி செய்தவர்.
கிரேக்கப் படைத்தலைவர் முதலாம் ஐதிதெமசின் மகனான தெமித்திரஸ் கிமு 200ல் தற்கால ஆப்கானித்தான் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளை வென்று, இந்தோ கிரேக்க நாட்டை நிறுவி, தட்சசீலம் மற்றும் சகலா நகரங்களை நிர்மாணித்தவர்.[1]
இந்தியா மீதான படையெடுப்புகள்[தொகு]

கிரேக்க மன்னர் தெமித்திரஸ், மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், கிமு 180ல் இந்தியாவின் வடமேற்கு பகுதிகளை கைப்பற்றினார்.

தெமித்திரசின் கிரேக்கப் படையெடுப்புகள் இந்தியாவில் சகேதம் (அயோத்தி), பாஞ்சாலம், மதுரா மற்றும் மகத நாட்டின் தலைநகரான தற்கால பாட்னா வரை நீடித்தது.

கிரேக்க பாக்திரியா பேரரசு மற்றும் இந்தோ கிரேக்க நாடுகளில் பௌத்தம் பரவியதால், கிரேக்கர்கள் பௌத்த சமயத்தை தழுவி, கிரேக்க-காந்தாரக் கலையில் கௌதம புத்தர் மற்றும் பிறரின் சிற்பங்களை வடித்தனர். பிக்குகள் தங்குவதற்கான விகாரைகளும், புத்தரை தியானப்பதற்கு சைத்தியங்களும் நிறுவப்பட்டது.[2]
தெமித்திரஸ் ஐந்து வகை நாணயங்களை கிரேக்கம் மற்றும் கரோஷ்டி எழுத்துமுறைகளில் வெளியிட்டார்.
இதனையும் காண்க[தொகு]
- செலூக்கியப் பேரரசு
- கிரேக்க பாக்திரியா பேரரசு
- இந்தோ கிரேக்க நாடு
- இந்தோ சிதியன் பேரரசு
- இந்தோ-பார்த்தியன் பேரரசு
- குசான் பேரரசு
அடிக்குறிப்புகள்[தொகு]
- ↑ Demetrius is said to have founded Taxila (archaeological excavations), and also சகலா in the Punjab, which he seemed to have called Euthydemia, after his father ("the city of Sagala, also called Euthydemia" (Ptolemy, Geographia, VII 1))
- ↑ Thapar, Romila (1960). Aśoka and the Decline of the Mauryas. Oxford University Press. பக். 200.
மேற்கோள்கள்[தொகு]
- McEvilley, Thomas (2002). The Shape of Ancient Thought. Comparative Studies in Greek and Indian Philosophies. Allworth Press and the School of Visual Arts. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-58115-203-5.
- Puri, B. N. (2000). Buddhism in Central Asia. Motilal Banarsidass Pub. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-208-0372-8.
- Tarn, W. W. (1951). The Greeks in Bactria and India. Cambridge University Press.