தெமாகமைட்டு
தெமாகமைட்டு Temagamite | |
---|---|
![]() | |
பொதுவானாவை | |
வகை | தெலூரைடு கனிமம் |
வேதி வாய்பாடு | Pd3HgTe3 |
இனங்காணல் | |
நிறம் | பிரகாசமான வெள்ளை முதல் சாம்பல் வரை |
படிக இயல்பு | நுண் மணிகள் |
படிக அமைப்பு | நேர்ச்சாய்சதுரம் அறியப்படாத இடக்குழு |
மோவின் அளவுகோல் வலிமை | 2.5 |
மிளிர்வு | உலோகப் பளபளப்பு |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
ஒப்படர்த்தி | 9.5 |
பலதிசை வண்ணப்படிகமை | பலவீனம் |
மேற்கோள்கள் | [1][2][3] |
தெமாகமைட்டு (Temagamite) என்பது Pd3HgTe3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும்.
மோவின் கடினத்தன்மை அளவுகோலில் 2 1⁄2 என்ற கடினத்தன்மை கொண்ட ஒரு பிரகாசமான வெள்ளை நிற பலேடியம் பாதரச தெலூரைடு கனிமமாக வகைப்படுத்தப்படுகிறது. 1973 ஆம் ஆண்டு தெமாகமி ஏரியிலுள்ள தெமாகமி தீவின் தெமாகமி சுரங்கத்தில் தெமாகமைட்டு கனிமம் கண்டுபிடிக்கப்பட்டது. [3] மேலும் இக்கனிமம் கனடா நாட்டின் தெமாகமி கிரீன்சுடோன் பட்டைபகுதியிலுள்ள ஓர் அரிய கனிமத்தைக் குறிக்கிறது.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் தெமாகமைட்டு கனிமத்தை Tem[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
தெமாகமைட்டு கனிமம் தெமாகாமியில் உள்ள பாரிய சால்கோபைரைட்டுக்குள் நுண்ணிய சேர்க்கைகளாகவும், மற்ற அரிய தெலூரைடுகளான மெரென்சுகியைட்டு, சுடுட்சைட்டு, எசைட்டு மற்றும் பெயரிடப்படாத Pd-Hg-Ag தெலூரைடு ஆகியவற்றுடன் இணைந்தும் தோன்றுகிறது.[5] கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு கூடுதலாக, மொண்டானாவில் உள்ள சுடில்வாட்டர் இக்னியசு வளாகம் மற்றும் வயோமிங்கின் மெடிசின் போ மலைகளில் உள்ள நியூ ராம்ப்ளர் செப்பு-நிக்கல் சுரங்கத்திலும் கிடைப்பதாகப் பதிவாகியுள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://webmineral.com/data/Temagamite.shtml Webmineral data
- ↑ 2.0 2.1 http://rruff.geo.arizona.edu/doclib/hom/temagamite.pdf Mineral Handbook
- ↑ 3.0 3.1 http://www.mindat.org/min-3908.html Temagamite: Temagamite mineral information and data Retrieved on 2007-08-30
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- ↑ http://rruff.geo.arizona.edu/doclib/cm/vol12/CM12_193.pdf Canadian Mineralogist, Vol. ll pp. 193-198 (1973)