உள்ளடக்கத்துக்குச் செல்

தெபாலினா மசூம்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெபாலினா மசூம்தர்

தெபாலினா மஜூம்தர் (Debalina Majumder பிறப்பு 1972, கல்கத்தா, இந்தியா) என்பவர் ஒரு இந்திய திரைப்படப் படைப்பாளி, ஒளிப்படக் கலைஞர், எழுத்தாளர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் ஆவார். [1] இவர் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு இலக்கியம் பயின்றார். தெபாலினா நீண்ட ஆவணப் படங்கள், குறும்படங்கள், பயணக் குறிபுப் படங்கள், இசைக் காணொளிகள், பெருநிறுவன படங்கள், தொலைப்படங்கள், சோதனைத் திரைப்படங்கள் போன்றவற்றில் பணியாற்றியுள்ளார். இவர் சுற்றுச்சூழல் பிரச்சினைகள், பாலினம், பாலுணர்வு ஆகிய துறைகளில் ஆர்வமுள்ளவர். மேலும் எப்போதாவது செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு எழுதுகிறார். ஒளிப்பதிவாளராகவும் கூடுதலான அளவில் பணியாற்றியுள்ளார்.

2005 இல், கொல்கத்தாவில் சேற்று கால்பந்தைப் பற்றிய இவரது குறும்படம், ( Sar..r..ra/ Joy Run) பெர்லினில் நடந்த குறும்படப் போட்டியான Berlinale Talent Campusக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் பிபா 2006 உலகக் கோப்பைத் தொகுப்பிலும் சேர்க்கப்பட்டது. அப்போதிருந்து, இவரது அறிமுகப் பக்கம் பெர்லினேல் டேலண்ட் கேம்பசின் இணையதளத்தில் இடம்பெற்று வருகிறது.

2010 ஆம் ஆண்டில் இவர் உருவாக்கிய ஒரு புனைவு ஆவணப்படமான, தார் சேயே சே அனேக் ஆரோ (ஒரு நண்பரைக் காட்டிலும்), வினோதமான உறவை அடிப்படையாகக் கொண்டது. இது குயர் சினிமா இன் தி வேர்ல்டின் இந்தியத் திரைப்படப் பகுதியில் கார்ல் ஷூனோவர் மற்றும் ரோசாலிண்ட் கால்ட் ஆகியோரின் புத்தகம். 'பயர்' படம் ஆகியவற்றுடன் விவாதிக்கப்பட்டது.

நந்திகிராமம் (இந்தியா, மேற்கு வங்கம்) கிராமத்தில் தற்கொலை செய்து கொண்ட இரண்டு காதலர்களின் கதையை அடிப்படையாகக் கொண்டு, தெபாலினாவின் திரைப்படமானது "... ebang bewarish " ("...and the Unclaimed"), தற்பாலின உறவு தொடர்பாக சமூகத் தடைகள், குடும்பம் ஏற்றுக் கொள்ளாத நிலை போன்றவற்றைக் கேள்விக்குள்ளாக்கியது. [2] "அதே நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு, தெபலினாவின் புனைகதை திரைப்படமான " அபார் ஜோடி இச்சா கோரோ " (இஃப் யூ டேர் டிசையர்) 2017 இல் வெளியானது.

பின்னர் இவர் " டின் சோட்டி ..."(உண்மையில்...), மூன்று இயல்பிலா வாழ்க்கைகளின் கொண்டாட்டங்களை ஆவணப்படுத்தியது, கே இந்தியா மேட்ரிமோனி - ஒரே பாலின திருமண சமத்துவத்தை மையமாகக் கொண்ட ஒரு திரைப்படமாகும். திருமண உறவைத் தேடும் மூன்று ஓரினச்சேர்க்கை நபர்களின் பயணத்தை ஆவணப்படுத்துகிறது. போர்ஷி நீலர் அர்ஷிநகர் ( Beyond The Blues ), இது மாற்றுப் பாலினத்தவர் ஒருவரின் பயணத்தை ஆவணப்படுத்துகிறது. சிட்டிசன் நகர் தற்போது அதன் தயாரிப்புக்குப் பிந்தைய கட்டத்தில் உள்ளது, அதே போல் ஒரு சோதனை படமான அமர் ஜிபோனி படத்தின் பணிகளும் நடந்து வருகிறது.

தெபாலினாவின் மற்றோரு படைப்பான எபோங் பெவாரிஷ் (…and the unclaimed) பெல்ஃபாஸ்ட்டில் 2021 இல் நடந்த அவுட்பர்ஸ்ட் கியூயர் கலை விழாவின் ஒரு பகுதியாக, "மாஸ்" என்ற தலைப்பில் ஒரு குழுவாக இடம்பெற்றுள்ள உலகெங்கிலும் உள்ள வினோதமான ஆறு சோதனைப் படங்களில் ஒன்றாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Filmography by type for Debalina Majumder". IMDb.com. பார்க்கப்பட்ட நாள் 9 November 2013.
  2. "Rabibasariya Magazine". Anandabazar.com. Archived from the original on 9 November 2013. பார்க்கப்பட்ட நாள் 9 November 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெபாலினா_மசூம்தர்&oldid=3894783" இலிருந்து மீள்விக்கப்பட்டது