தென் திருவாங்கூர் இந்துக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தென் திருவாங்கூர் இந்துக் கல்லூரி கன்னியாகுமரி மாவட்டத் தலைநகர் நாகர்கோவிலில் உள்ளது. இக்கல்லூரி பொதுவாக, எஸ்.டி. இந்துக் கல்லூரி என்று அழைக்கப்படுகிறது. இக்கல்லூரி நாகர்கோவிலில் உள்ள பழைமையான கல்லூரி ஆகும்.இது சுய நிதியுதவி படிப்புகளை வழங்குகிறது. இந்தக் கல்வி நிறுவனம், மாவட்டத்தின் இரண்டு பழமையான கல்லூரிகளில் ஒன்றாகும். மற்றொன்று ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரி ஆகும். இக்கல்லூரியில் இளங்கலை, முதுகலை மற்றும் பட்டயப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.[1] இருபாலரும் படிக்கும் இப்பள்ளி 1952 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.  

மேற்கோள்கள்[தொகு]

  1. "இந்துக் கல்லூரி". இந்துக்கல்லூரி இணையத்தளம். பார்த்த நாள் 3 சூலை 2017.