தென் செர்சி போக்குவரத்து ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தென் செர்சி போக்குவரத்து ஆணையம்
Sjta logo.gif
அமைப்பு மேலோட்டம்
அமைப்பு 1991
Preceding agencies நியூசெர்சி விரைவுச்சாலை ஆணையம்
அட்லாண்டிக் கௌன்டி போக்குவரத்து ஆணையம்
ஆட்சி எல்லை தென் செர்சி
தலைமையகம் அஞ்சல் பெட்டி எண் 351, ஹம்மான்டன், நியூசெர்சி 08037
அமைப்பு தலைமைs இசுடீபன் டில்ட்ஸ், தலைவர்
பர்ட் முல்லர், செயல் இயக்குனர்
இணையத்தளம்
http://www.sjta.com/

தென் செர்சி போக்குவரத்து ஆணையம் (South Jersey Transportation Authority, SJTA) 1991ஆம் ஆண்டில் நியூசெர்சி சட்டமன்றம் தென் செர்சி கௌன்டிகளான அட்லாண்டிக், காம்டென், கேப் மே, கம்பர்லாந்து, குளோசெஸ்டர் மற்றும் சேலம் கௌன்டிகளில் போக்குவரத்து சேவைகளை மேலாண்மை செய்வதற்காக உருவாக்கிய ஓர் தனியார் முகமை போன்ற நிறுவனமாகும

இந்த ஆணையம் இதற்கு முன்னர் செயலாற்றிய நியூ செர்சி விரைவுச்சாலை ஆணையம் (New Jersey Expressway Authority) மற்றும் அட்லாண்டிக் கௌன்டி போக்குவரத்து ஆணையங்களுக்கு (Atlantic County Transportation Authority) மாற்றாக உருவாக்கப்பட்டுள்ளது.இது நெடுஞ்சாலைகள், வானூர்தி நிலையங்கள், மற்றும் பிற போக்குவரத்து தேவைகளை ஒருங்கிணைப்பு செய்யும் தென் செர்சியின் போக்குவரத்து அமைப்பாக விளங்குகிறது. இதன் மேலாண்மையில் அட்லாண்டிக் நகர விரைவுச்சாலை உள்ளிட்ட பொதுச்சாலைகள் மற்றும் அட்லாண்டிக் நகர பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளிட்ட போக்குவரத்து திட்டங்கள், உந்து நிறுத்தற் பூங்காக்கள் அடங்கும். தென் செர்சியின் பொருளாதார வளர்ச்சிக்கான வசதிகளை உருவாக்குதலும் இதன் பணியாகும்.

தென் செர்சி போகுவரத்து ஆணையம் பர்லிங்க்டன், காம்டென் மற்றும் குளோசெஸ்டர் கௌன்டிகளில் உள்ள வேலையிடங்களுக்கு இருமுனை போய்வரு பேருந்துகளையும் வேன்களையும் இயக்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]