தென் கொரியாவில் ஆற்றல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தென் கொரியாவில் ஆற்றல் (Energy in South Korea) இறக்குமதி செய்கின்ற நிலைமையே அதிகமாகக் காணப்படுகிறது. நாட்டின் எண்ணெய்த் தேவைகள் அனைத்தும் கிட்டத்தட்ட இறக்குமதியே செய்யப்படுகின்றன. உலகின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு இறக்குமதியாளர்கள் வரிசையில், தென் கொரியா இரண்டாமிடத்தைப் பிடிக்கிறது. நாட்டின் மின்னுற்பத்திக்குப் பிரதானமாக இருப்பது அனல்மின் நிலையங்களில் உற்பத்தி செய்யும் மின்சாரமாகும். நாட்டின் மொத்த மின்னுற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு மின்சாரம் அனல் மின் நிலையங்களிலும் அணுக்கரு ஆற்றலில் இருந்தும் கிடைக்கிறது[1]

தனியார் நிலக்கரிச் சுரங்கங்கள், மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் இக்காலகட்டத்தில் இயக்கப்பட்டன என்றாலும் கூட, ஆற்றல் தயாரிப்பாளர்கள், அரசாங்க நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருந்தனர், கொரிய தேசிய சட்டமன்றத்தில் 2000 ஆம் ஆண்டில் ஒரு பரந்த மின்சாரத் துறை மறுசீரமைப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த மறுசீரமைப்பு செயல்முறைத் திட்டம் 2004 இல் அரசியல் சர்ச்சைகள் காரணமாக நிறுத்தப்பட்டது. தீவிரமான அரசியல் விவாதத்திற்குரிய ஒரு தலைப்பாக இப்பிரச்சினை இருந்துவருகிறது[2].

நிரூபிக்கப்பட்ட எண்ணெய் வளம் ஏதும் தென் கொரியாவில் காணப்படவில்லை. 1980 ஆம் ஆண்டுவரை மஞ்சள் கடலில் மேற்கொள்ளப்பட்ட பயணங்களிலும், கொரியா மற்றும் சப்பான் நாடுகளுக்கிடையிலான கண்டத் திட்டுகளிலும் எந்தவிதமான எண்ணெய் வளமும் கண்டறியப்படவில்லை. நாட்டின் நிலக்கரி ஆதாரம் போதுமானதாக இல்லை மற்றும் தரம் குறைந்ததாகவும் இருந்தது, வானிலை மற்றும் பருவகால வேறுபாடுகள் காரணமாக கோடை மழையின் செறிவு மிகவும் குறைவதால் வளமான நீர்மின்சார உற்பத்திக்கும் சாத்தியமில்லை. எனவே கொரிய அரசு அணுக்கரு ஆற்றல் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது[3]

மீள்பார்வை[தொகு]

2010 ஆம் ஆண்டின் ஆற்றல் நுகர்வு மூலங்கள்:[4]:

  • நிலக்கரி: 27.6 மில்லியன் டன் எண்ணெய்க்குச் சம அளவு (14.2%)
  • பெட்ரோலியம்: 100.5 மில்லியன் டன் எண்ணெய்க்குச் சம அளவு (51.6%)
  • திரவ இயற்கை எரிவாயு: 21.9 மில்லியன் டன் எண்ணெய்க்குச் சம அளவு (11.3%)
  • மின்சாரம் : 37.3 மில்லியன் டன் எண்ணெய்க்குச் சம அளவு (19.2%)
  • வெப்பம்: 1.7 மில்லியன் டன் எண்ணெய்க்குச் சம அளவு (0.9%)
  • புதுப்பிக்கதக்க ஆற்றல்: 5.8 மில்லியன் டன் எண்ணெய்க்குச் சம அளவு (3%)
தென் கொரியாவில் ஆற்றல்[5]
முதலீடு முதன்மை ஆற்றல் உற்பத்தி இறக்குமதி மின்சாரம் CO2-வெளியீடு
மில்லியன் டெ.வா.ம டெ.வா.ம டெ.வா.ம டெ.வா.ம மெ.ட
2004 48.08 2,478 442 2,140 355 462
2007 48.46 2,584 494 2,213 412 489
2008 48.61 2,639 520 2,269 430 501
2009 48.75 2,665 515 2,304 438 515
2010 48.88 2,908 522 2,571 481 563
2012 49.78 3,029 546 2,644 506 588
2012R 50.00 3,064 538 2,659 517 593
2013 50.22 3,068 507 2,723 524 572
Change 2004-10 1.7% 17.3% 18.1% 20.1% 35.5% 21.9%
மில்லியன் டன்னுக்குச் சமம் = 11.63 டெ.வா.ம, முதன்மை ஆற்றல், ஆற்றல் இழப்பையும் உள்ளடக்கியுள்ளது. அதாவது அணுக்கரு ஆற்றலுக்கு 2/3[6]

மின்னாற்றல்[தொகு]

வரலாறு[தொகு]

கொரியா மின்னாற்றல் நிறுமம் நாட்டில் (KEPCO) மின்சாரம் வழங்கும் பணியை மேற்கோள்கிறது. இந்நிறுமத்திற்கு முன்னோடித் திட்டமாக 1961 இல் நிறுவப்பட்ட கொரியா மின்சார நிறுமம் ஆண்டுக்கு 1770 கிகாவாட் குதிரைச்சக்தி அளவு மின் உற்பத்தி செய்தது. 1987 இல் இந்த மின்னுற்பத்தி அளவு 73,992 கிகாவாட் குதிரைச் சக்தி அளவை எட்டியது. அந்த ஆண்டின் மொத்த மின்னுற்பத்தியில் 17.9% மின்சாரத்தை, குடியிருப்பு வாடிக்கையாளர்களும், பொது மற்றும் சேவைத்துறை தொழில்கள் 16.2% மின்சாரத்தையும், தொழில்துறை துறை 65,9% மின்சாரத்தையும் பயன்படுத்தினர். முதன்மையான மின் உற்பத்தி ஆதாரங்களாக அணுக்கரு ஆற்றல், நிலக்கரி, எண்ணெய், மற்றும் இயற்கை எரிவாயு முதலியவை இருந்தன. 1985 இல் உற்பத்தி செய்யப்பட்ட 54,885 கிகாவாட் குதிரைச்சக்தி மின்னாற்றலில் 22% அணுக்கருவிலிருந்தும் எஞ்சிய 74% அணுக்கரு அல்லாத நிலக்கரி, எண்ணெய் ஆதாரங்களிலிருந்தும் 4% நீர்மின் சக்தியிலிருந்தும் பெறப்பட்டது. 2000 ஆம் ஆண்டில் இந்த அளவுகள் அணுக்கருவிலிருந்து 44.5%, இயற்கை எரி வாயுவிலிருந்து 10.2%, நிலக்கரியிலிருந்து 22.9%, எண்ணெயிலிருந்து 12.2%, நீரிலிருந்து 10.2% என்ற அமைப்பில் இருக்கலாம் என்று 1988 இல் முன்கணிக்கப்பட்டது.

புள்ளி விவரங்கள்[தொகு]

தென் கொரியாவில் மின்னுற்பத்தி, கி.வா.ம
மூலம் 2008 2009 2010 2011
அனல் 264,747 (62.7%) 278,400 (64.2%) 315,608 (66.5%) 324,354 (65.3%)
அணுக்கரு 150,958 (35.7%) 147,771 (34.1%) 148,596 (31.3%) 154,723 (31.1%)
நீர் 5,561 (1.3%) 5,641 (1.3%) 6,472 (1.4%) 7,831 (1.6%)
பிற 1,090 (0.3%) 1,791 (0.4%) 3,984 (0.8%) 9,985 (2.0%)
மொத்தம் 422,355 433,604 474,660 496,893

மூலங்கள்[தொகு]

அனல்மின்சாரம்[தொகு]

  • கொரியா மின்னாற்றல் நிறுமம் (한국전력공사)
  • கொரியா கிழக்கு-மேற்கு ஆற்றல் (한국동서발전㈜)
  • கொரியா மத்தியநில ஆற்றல் (한국중부발전㈜)
  • கொரியா தெற்கு-கிழக்கு ஆற்றல் (한국남동발전㈜)
  • கொரியா தென்னக ஆற்றல் (한국남부발전㈜)
  • கொரியா மேற்கு ஆற்றல் (한국서부발전㈜)
  • கொரியா வாயு நிறுமம் (한국가스공사)

இணை மின்னுற்பத்தி மற்றும் நீராவி வெப்பம்[தொகு]

கொரியா தொலை வெப்பமாக்கல் நிறுமம்: சியோல், தேய்கு நகரங்களுக்கு நீராவியை இந்நிறுமம் அனுப்புகிறது. மேலும் இந்நிறுமம், உலகின் மிகப்பெரிய தொலை வெப்பமாக்கல் நிறுமம் என்ற பெருமைக்குரியது ஆகும்.

அணுக்கரு ஆற்றல்[தொகு]

அணுக்கரு மின்னுற்பத்திக்கு தென்கொரியா ஒரு வலுவான அழுத்தத்தைக் கொடுக்கிறது. 1977 ஆம் ஆண்டு நாட்டின் முதலாவது அணுக்கரு உலையான கொரி எண் ஒன்று புசானுக்கு அருகில் அமைக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு நிலவரப்படி எட்டு அணுக்கரு உலைகள் தென் கொரியாவில் இயங்கின. 71,158 மில்லியன் கிலோவாட்டு ஆற்றல் இவ்வுலைகளில் இருந்து பெறப்பட்டது. மொத்த மின்னுற்பத்தியில் இது 53.1% ஆகும்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல்[தொகு]

வெளிநாட்டு எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் முயற்சியாக தென்கொரிய அரசாங்கம் 2008 இல் ஒரு முடிவை எடுத்தது. 'சூரிய மின்னுற்பத்தித் திட்டங்களைச் செயற்படுத்தும் பெரு நிறுவனங்களை ஊக்கப்படுத்த எண்ணியது.[7] சூரிய மின்னாற்றல் திட்டங்கள், உயிர் எரிபொருள் தொழில்நுட்பம் முதலானவற்றுக்காக 2008 ஆம் ஆண்டில் 193 மில்லியன் வோன்களை செலவிட்டது[7].

புவி வெப்பமாதல்[தொகு]

கார்பன் டை ஆக்சைடு பகுப்பாய்வு மையத்தின் தகவல்படி கார்பன் டை ஆக்சைடு வெளியிடுதலில் தென் கொரியா முதல் பத்து இடங்களுக்குள் இருக்கிறது. 1950 முதல் 2005 வரையிலான காலத்தில் கார்பண்டை ஆக்சைடு வெளியீட்டில் தென்கொரியா ஒன்பதாவது இடத்தில் இருந்தது. இதே காலகட்டத்தில் அமெரிக்கா (25%), சீனா (10%) மற்றும் உருசியா (8%) போன்ற நாடுகளும் அப்பட்டியலில் இருந்தன[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Korea, South". US Energy Information Administration. பார்க்கப்பட்ட நாள் 25 July 2013.
  2. "Which Direction for South Korean Electricity Policy?" (PDF). Korean Energy Economic Review 13 (2014) 145-178. பார்க்கப்பட்ட நாள் 6 June 2014.
  3. http://www.sciencediplomacy.org/article/2015/approaches-nuclear-cooperation
  4. http://www.polsoz.fu-berlin.de/polwiss/forschung/systeme/ffu/veranstaltungen_aktuell/veranstaltungen_downloads/11_salzburg/Leem.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
  5. IEA Key World Energy Statistics Statistics 2015 பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம், 2014 (2012R as in November 2015 பரணிடப்பட்டது 2015-04-05 at the வந்தவழி இயந்திரம் + 2012 as in March 2014 is comparable to previous years statistical calculation criteria, 2013 பரணிடப்பட்டது 2014-09-02 at the வந்தவழி இயந்திரம், 2012 பரணிடப்பட்டது 2013-03-09 at the வந்தவழி இயந்திரம், 2011 பரணிடப்பட்டது 2011-10-27 at the வந்தவழி இயந்திரம், 2010 பரணிடப்பட்டது 2010-10-11 at the வந்தவழி இயந்திரம், 2009 பரணிடப்பட்டது 2018-08-18 at the வந்தவழி இயந்திரம், 2006 பரணிடப்பட்டது 2018-06-15 at the வந்தவழி இயந்திரம் IEA October, crude oil p.11, coal p. 13 gas p. 15
  6. Energy in Sweden 2010 பரணிடப்பட்டது 2013-10-16 at the வந்தவழி இயந்திரம், Facts and figures, The Swedish Energy Agency, Table 8 Losses in nuclear power stations Table 9 Nuclear power brutto
  7. 7.0 7.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-12-16. பார்க்கப்பட்ட நாள் 2016-11-20.
  8. State of the World (book series), Worldwatch institute 2009, statistics 219-223, CDIAC Carbon dioxide information analysis center (http://www.cdiac.ornl.gov/trends[தொடர்பிழந்த இணைப்பு])
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்_கொரியாவில்_ஆற்றல்&oldid=3559094" இலிருந்து மீள்விக்கப்பட்டது