தென் இந்திய ரயில்வே சதி வழக்கு
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி 1928 தென்னிந்திய ரயில்வே போராட்டம் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
தென் இந்திய ரயில்வே சதி வழக்கு(South Indian Railway Conspiracy Case) என்பது 1928 தென்னிந்திய ரயில்வே போராட்டத்தைத் தொடர்ந்து ஆங்கிலேய ஆட்சியாளர்களால் பொதுவுடைமைத் தலைவர்கள் மீது புணையப்பட்ட வழக்காகும்.1928ல் நாகையில் ரயில்வே தொழிலாளர் போராட்டம் நடைபெற்றது. ஆலையை திருச்சிக்கு மாற்றுவதால் ஐயாயிரம் தொழிலாளர் வேலை போகும் என்பதால் ஏற்பட்ட போராட்டம் , 10 நாட்களாக நீடித்தது.ஆங்கிலேய ஆட்சி அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது. ஆங்கிலேய ஆட்சியின் உளவுத்துறை கம்யூனிஸ்ட்டுகளே இப்போராட்டத்தின் பின்னால் இருந்து இயக்குவதாகவும்; ஆட்சியைக் கவிழ்க்கும் சதியின் ஒரு பகுதி என்றும் குற்றம்சாட்டியது.[1]பதினெட்டு நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 120- பி மற்றும் ரயில்வே சட்டத்தின் 126 மற்றும் 128 பிரிவுகளின் கீழ் கிரிமினல் சதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.டி.கிருஷ்ணசாமி, ம.சிங்காரவேலர், முகுந்தலால் சர்க்கார் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.இவ்வழக்கில் லட்சுமணராவ் எனும் நீதிபதி 29 ஏப்ரல் 1929 அன்று தீர்ப்பு வழங்கினார்.கிருஷ்ணசாமி, சிங்காரவேலர், முகுந்தலால் சர்க்கார் ஆகியோருக்கு பத்தாண்டு சிறையும்; பெருமாள் என்கிற ரயில்வே தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை அதுவும் அந்தமான் சிறையில் எனத் தீர்ப்பாகியது.[2]தமிழ்நாடு, சுதேசமித்திரன்,லோகோபகாரி, சுவராஜ்யா, மாத்ரூபூமி மற்றும் குடி அரசு ஆகிய தமிழ் பத்திரிக்கைகள் இத் தண்டனை மிகவும் கடுமையானது என விமர்சித்தன . [3]
மேற்கோள்கள்
[தொகு]- "South Indian Railway Strike". The Labour Monthly 10 (6): 636–639. October 1928. http://www.marxists.org/history/international/comintern/sections/britain/periodicals/labour_monthly/1928/10/india.htm.