தென்றல் (கோட்டை)

ஆள்கூறுகள்: 13°00′57″N 80°15′46″E / 13.015855°N 80.262857°E / 13.015855; 80.262857
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1939-ல் பிராடி கோட்டை

தென்றல், முன்பு பிராடி கோட்டை என்று அழைக்கப்பட்டது, இந்தியாவின் சென்னையில் உள்ள ஒரு வீடு ஆகும். இதனை 1796-ல் கட்டிய அரசு ஊழியர் ஜேம்ஸ் பிராடி (1769-1801) நினைவாகப் பெயரிடப்பட்டது. இங்கு தற்போது கருநாடக இசைப் பள்ளி செயல்படுகிறது.[1][2]

வரலாறு[தொகு]

பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவன ஊழியரும், தொழிலதிபருமான ஜேம்ஸ் பிராடி என்பவரால், சென்னை நகர எல்லைக்கு வெளியே அமைந்திருந்த, அடையாறு நகரத்தில், கிவிப்பில் தீவில், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பதினொரு ஏக்கர் நிலத்தில், பிராடி கோட்டை கட்டப்பட்டது.[3] பிராடி சிறிது காலம் இங்கு வசித்து வந்தார். பின்னர், அவரது வீழ்ச்சி காரணமாக, குத்தகைதாரர்களுக்கு வீட்டை வாடகைக்குக் கொடுத்தார். வாடகைதாரர்களில் முதன்மையானவர் சர் தாமஸ் ஸ்ட்ரேஞ்ச், சென்னை உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி ஆவார்.[3]

1801ஆம் ஆண்டில் படகு விபத்து ஒன்றில் பிராடி இறந்ததைத் தொடர்ந்து, அர்புத்நாட் குடும்பத்தினர் இந்த சொத்தை வாங்கினர்.[1] பிராடி, இசுகாட்லாந்தின் மொரேஷையரில் உள்ள பிராடி கோட்டையின் இருக்கையான பிராடி குலத்தின் தலைவரின் வாரிசாக இருந்தார். பிராடி கோட்டை இப்போது இசுகாட்லாந்து தேசிய அறக்கட்டளைக்குச் சொந்தமாக உள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 S. Muthiah (2004). Madras Rediscovered. East West Books (Madras) Pvt Ltd. பக். 187. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-88661-24-4. 
  2. Making of Madras.
  3. 3.0 3.1 Diwan Bahadur S. E. Runganadhan, தொகுப்பாசிரியர் (1939). "Some Old Madras Houses by A. D. Raghavan". Madras Tercentenary Celebration Committee Commemoration Volume. Indian Branch, Oxford Press. பக். 112, 116–117. 
  4. National Trust for Scotland
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்றல்_(கோட்டை)&oldid=3414052" இலிருந்து மீள்விக்கப்பட்டது