தென்மேற்கு பப்புவா
தென்மேற்கு பப்புவா
Southwest Papua | |
---|---|
Province of Southwest Papua Provinsi Papua Barat Daya | |
![]() பிண்டிட்டோ மலை | |
ஆள்கூறுகள்: 0°52′S 131°15′E / 0.867°S 131.250°E | |
நாடு | ![]() |
பகுதி | ![]() |
மாநிலம் | தென்மேற்கு பப்புவா |
நிறுவல் | 25 சூலை 2022 |
தலைநகரம் | சோரோங்[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 39,122.95 km2 (15,105.46 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 6,27,127 |
• அடர்த்தி | 16/km2 (42/sq mi) |
மக்கள் தொகை | |
• சமயம் (2023)[5] | கிறிஸ்தவம் 61.65% - சீர்திருத்தம் 54.05% - கத்தோலிக்கம் 7.16% இசுலாம் 38.14%; இந்து 0.1%; பௌத்தம் 0.1% |
• மொழிகள் | அபுன், அயமரு, கோகோடா, மியா, மியான், மபுரான், தெகித், எகித் |
நேர வலயம் | இந்தோனேசிய நேரம் +9 |
தொலைபேசி | +62 0951; 0952 |
போக்குவரத்து | PY |
HDI (2024) | ![]() |
- வளர்ச்சி[7] | ![]() மத்திமம் [8] |
இணையதளம் | papuabaratdayaprov |
தென்மேற்கு பப்புவா (இந்தோனேசியம்: Provinsi Papua Barat Daya; ஆங்கிலம்: Province of Southwest Papua) என்பது நியூ கினி தீவில்; இந்தோனேசியா, மேற்கு நியூ கினியின், தெற்குப் பகுதியில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். திசம்பர் 8, 2022 அன்று மேற்கு பப்புவா மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.[9]
மேற்கு நியூ கினி நிலப் பகுதி இந்தோனேசிய நியூ கினி அல்லது இந்தோனேசிய பப்புவா என்றும் அழைக்கப்படுகிறது. பப்புவா மாநிலத்தின் முன்னாள் எட்டு பகுதிகளில் இருந்து சூலை 25, 2022 அன்று இந்த மாநிலம், இந்தோனேசியாவின் 38-ஆவது மாநிலமாக நிறுவப்பட்டது.[10]
"தென்மேற்கு" என்று பெயரிடப்பட்டிருந்தாலும், இது உண்மையில் பப்புவா நியூகினி தீவின் வடமேற்கு விளிம்பில், டோபராய் தீபகற்பத்தின் (Doberai Peninsula) வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.[11] இந்த மாநிலத்தின் மேற்குப் பகுதியில் இராஜா அம்பாட் தீவுகள் (Raja Ampat Islands) எனும் பாதுகாக்கப்பட்ட பகுதி உள்ளது. பாதுகாக்கப்பட்ட பவளப்பாறைகள் பகுதியில், பேராமை, ஆனைத்திருக்கை மற்றும் திமிங்கலச் சுறா உள்ளிட்ட பல்வேறு வகையான கடல்வாழ் உயிரினங்கள் உள்ளன.[12][13]
பொது
[தொகு]இந்த மாநிலம் 39,122.95 கிமீ2 பரப்பளவைக் கொண்டது; மற்றும் 2024-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அதன் மக்கள் தொகையின் அதிகாரப்பூர்வ மதிப்பீடு 627,127-ஆக இருந்தது. தெற்கு பப்புவா மற்றும் மேற்கு பப்புவாவிற்கு அடுத்த நிலையில், இந்தோனேசியாவில் மூன்றாவது குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமாக விளங்குகிறது.[14]
தென்மேற்கு பப்புவா மாநிலம், அதன் தலைநகரான சோரோங் மாநகரை மையமாகக் கொண்டுள்ளது. சோரோங் நகரம் தென்மேற்கு பப்புவா மாநிலத்தின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறைக்கு ஒரு முக்கிய மையமாகவும், பப்புவா தீவிற்கு ஒரு நுழைவாயிலாகவும் செயல்படுகிறது.
நவீன துறைமுகம்; மற்றும் வானூர்தி நிலைய வசதிகளைக் கொண்ட சோரோங் நகரம், பப்புவா தீவில் மிகவும் வளர்ச்சி பெற்ற நகரங்களில் ஒன்றாகும்.[15]
தென்மேற்கு பப்புவா மாநிலம், வெப்பமண்டல மழைக்காடுகள் மற்றும் மலைகள் உட்பட பல்வேறு பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு தாயகமாக உள்ளது. குறிப்பாக, தம்பராவ் பிராந்தியம் (Tambrauw Regency) ஒரு பிரபலமான பறவை நோக்கல் இடமாகும். மேலும் சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, அந்தப் பிராந்தியம் பாதுகாப்பு பிராந்தியமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.[16][17]
நிலவியல்
[தொகு]

பறவைத் தலை தீபகற்பத்தின் (Bird's Head Peninsula) மேற்குப் பகுதியில் அமைந்துள்ள தென்மேற்கு பப்புவா மாநிலம், கடலோரப் பகுதிகள் மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்புகள் போன்ற பல்வேறு நிலப்பரப்புகளை உள்ளடக்கியது. சோரோங் மற்றும் தெற்கு சோரோங் பிராந்தியங்களின் தெற்கு கடற்கரையில், சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகள் செழித்துக் காணப்படுகின்றன. அந்தச் சுற்றுச்சூழல் அமைப்புகள், பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் மீள்தன்மைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றன.[18]
தெற்கு சோரோங்கின் கடலோரப் பகுதி, பப்புவா தீவில் மிகப்பெரிய சதுப்புநிலக் காடுகளையும்; சவ்வூடு காடுகளையும் கொண்டுள்ளது. அந்த வளமான சுற்றுச்சூழல் அமைப்பிற்குள், ஏராளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் செழித்து வளர்கின்றன. அவை உள்ளூர்ப் பழங்குடிகளின் வாழ்வாதாரத்திற்கு பெரும் பங்காற்றுகின்றன. அதையும் தாண்டிய நிலையில், இலாபகரமான முக்கிய ஏற்றுமதிப் பொருட்களையும் வழங்குகின்றன.[19]
அவற்றில் சவ்வரிசி பனை மரங்கள், சதுப்புநில நண்டுகள் மற்றும் இறால் ஆகியவை அடங்கும். அவை இப்பகுதியின் பொருளாதார உயிர்ச்சக்தியாக விளங்குகின்றன; மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்திற்கும் பங்களிக்கின்றன.[20]
இராஜா அம்பாட் தீவுகள்
[தொகு]

தென்மேற்கு பப்புவாவின் மேற்குப் பகுதியில், வைகியோ தீவு (Waigeo), சலாவதி தீவு (Salawati), மிசூல் தீவு (Misool) மற்றும் பத்தாந்தா தீவு (Batanta) போன்ற குறிப்பிடத்தக்க தீவுகள் உள்ளன. அவை அழகிய இராஜா அம்பாட் தீவுகள் (Raja Ampat Islands) கூட்டத்தில் உள்ள்ன. அகுள்ள பல அதிசயங்களில், வாயாக் தீவு (Wayag Island) ஓர் அதிசயத் தீவாக அறியப்படுகிறது. அதன் செங்குத்தான சுண்ணாம்புக் கரடு மலைகளுக்குப் பெயர் பெற்றது.
இராஜா அம்பாட் தீவுகளின் அசாதாரண இயற்கைக் கூறுகள்; அதற்கு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளன. இது இந்தோனேசியாவில் உள்ள யுனெஸ்கோ உலகளாவிய புவிசார் பூங்காக்களில் (UNESCO Global Geopark) ஒன்றாக உச்சத்தை எட்டியுள்ளது.
பவளப்பாறைகள்
[தொகு]இராஜா அம்பாட்டைச் சுற்றியுள்ள கடல்கள், பல்லுயிர் பெருக்கத்தின் புகலிடங்களுக்குப் புகழ்பெற்றவை. உலகின் சிறப்புமிகு பவளப்பாறை சுற்றுச்சூழல் அமைப்புகளில் இந்தக் கடல்பகுதியும் ஒன்றாகும்.
இந்த நீர்நிலைகள் 500-க்கும் மேற்பட்ட பவளப்பாறை இனங்கள்; 1,400 வகையான பவளப்பாறை மீன்கள்; மற்றும் 600 வகையான மெல்லுடலிகள் உட்பட வியக்கத்தக்க கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வியல் அமைப்பைக் கொண்டுள்ளன.
இராஜா அம்பாட்டின் வடக்குப் பகுதியில் அயாவ் தீவுகள் (Ayau Islands) உள்ளன. அவை அவற்றின் பவளப்பாறை அமைப்புகளால் வேறுபடுகின்றன. அந்தப் பவளப்பாறைகள் கடல் தளத்திலிருந்து உயர்ந்து, ஒரு மையக் குளத்தைச் சுற்றிலும் பவளப்பாறைகளால் உருவாக்கப்பட்ட தீவுகளாகக் கட்சி அளிக்கின்றன.[21]
தென்மேற்கு பப்புவா மாநில பிராந்தியங்கள்
[தொகு]தென்மேற்கு பப்புவா மாநிலம் 6 பிராந்தியங்களைக் கொண்டுள்ளது.

குறியீடு பிராந்தியம் |
பெயர் | தலைநகரம் | பரப்பு கிமீ2 |
மக்கள் தொகை 2010 |
மக்கள் தொகை 2020 |
மக்கள் தொகை 2024 |
மாவட்டம் | கிராமம் | ம.மே.சு[22] 2023 |
---|---|---|---|---|---|---|---|---|---|
92.71 | ![]() |
205.26 | 190,625 | 284,410 | 298,742 | 10 | 41 | 0.797 (உயர்வு) | |
92.01 | ![]() |
அயிமாஸ் | 7,564.65 | 70,619 | 118,679 | 123,126 | 30 | 252 | 0.675 (மத்திமம்) |
92.04 | ![]() (தெற்கு சோரோங்) |
தெமினாபுவான் | 6,570.23 | 37,900 | 52,469 | 56,292 | 15 | 123 | 0.639 (மத்திமம்) |
92.05 | ![]() |
வாய்சாய் | 7,442.31 | 42,507 | 64,141 | 60,061 | 24 | 121 | 0.653 (மத்திமம்) |
92.09 | ![]() |
பெவ் | 11,954.82 | 6,144 | 28,379 | 31,354 | 29 | 218 | 0.556 (மத்திமம்) |
92.10 | ![]() |
அயிபாட் | 5,385.68 | 33,081 | 42,991 | 47,542 | 24 | 260 | 0.613 (மத்திமம்) |
மொத்தம் | 39,122.95 | 380,876 | 591,069 | 627,1267 | 132 | 1,015 |
மக்கள்
[தொகு]தென்மேற்கு பப்புவாவில் சமயம் (2022)
2020 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தென்மேற்கு பப்புவாவின் மக்கள் தொகை 591,617-ஆக இருந்தது, அதே வேளையில் 2024-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அதிகாரப்பூர்வ மதிப்பீடு 627,127 ஆக இருந்தது, இது தெற்கு பப்புவா மற்றும் மேற்கு பப்புவாவிற்குப் பிறகு இந்தோனேசியாவில் மூன்றாவது குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமாக அமைந்தது.[25]
இனக்குழுக்கள்
[தொகு]தென்மேற்கு பப்புவா பகுதியில் இனக்குழுக்களில் பன்முகத்தன்மை உள்ளது. தென்மேற்கு பப்புவா 52 இனக்குழுக்களைக் கொண்ட டோபராய் அல்லது டோம்பராய் எனும் வழக்கமான பிரதேசத்தில் (Domberai Customary Territory) சேர்க்கப்பட்டுள்ளது.[26]
நியூ கினி
[தொகு]நியூ கினி என்பது ஒரு தீவு; உலகின் இரண்டாவது பெரிய தீவு.
- நியூ கினி தீவின் மேற்குப் பகுதியில் இந்தோனேசியாவின் 6 மாநிலங்கள் உள்ளன.
- நியூ கினி தீவின் கிழக்குப் பகுதியில் பப்புவா நியூ கினி எனும் தனி ஒரு நாடு உள்ளது. 1975-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவிடம் இருந்து விடுதலை பெற்று பப்புவா நியூ கினி என்ற ஒரு தனி நாடானது.
காட்சியகம்
[தொகு]- தென்மேற்கு பப்புவா காட்சிப் படங்கள்
பொதுவகத்தில் Southwest Papua தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pembentukan Tiga Provinsi Baru di Papua". setkab.go.id. 20 August 2022. Retrieved 28 June 2024.
- ↑ 2.0 2.1 "Visualisasi Data Kependudukan - Kementerian Dalam Negeri 2024" (visual). www.dukcapil.kemendagri.go.id. Retrieved 13 February 2025.
- ↑ Badan Pusat Statistik, Jakarta, 28 February 2025, Provinsi Papua Barat Daya Dalam Angka 2025 (Katalog-BPS 1102001.92)
- ↑ Ananta, Aris; Arifin, Evi Nurvidya; Hasbullah, M Sairi; Handayani, Nur Budi; Pramono, Agus (2015). Demography of Indonesia's Ethnicity. Institute of Southeast Asian Studies. ISBN 978-981-4519-87-8. P. 102.
- ↑ "Visualisasi Data Kependudukan - Kementerian Dalam Negeri 2024" (Visual). www.dukcapil.kemendagri.go.id (in இந்தோனேஷியன்). Retrieved 25 July 2024.
- ↑ "Indeks Pembangunan Manusia 2024" (in இந்தோனேஷியன்). இந்தோனேசிய புள்ளிவிவரங்கள். 2024. Retrieved 15 November 2024.
- ↑ Badan Pembangunan Nasional (2023). "Capaian Indikator Utama Pembangunan". Jakarta: Badan Pembangunan Nasional.
- ↑ "Indeks Pembangunan Manusia (Umur Harapan Hidup Hasil Long Form SP2020), 2023-2024". www.bps.go.id. Badan Pusat Statistik. 15 November 2024. Retrieved 16 November 2024.
- ↑ Paramadwya, Adryan Yoga (17 November 2022). Widiantoro, Wisnu (ed.). "DPR Sahkan RUU Pembentukan Papua Barat Daya". kompas.id. Retrieved 2022-11-17.
- ↑ "Sah! Indonesia Kini Punya 38 Provinsi, Ini Daftarnya" (in id). Jakarta: Kompas Cyber Media. 17 November 2022. https://nasional.kompas.com/read/2022/11/17/17275541/sah-indonesia-kini-punya-38-provinsi-ini-daftarnya.
- ↑ Ruhmana, Uma (1 September 2022). "Tim Percepatan Pemekaran Tegaskan Cakupan Wilayah dan Letak Ibukota Calon Provinsi Papua Barat Daya". jagaindonesia.com.
- ↑ "Kawasan Konservasi Perairan di Raja Ampat". kkprajaampat.com. BLUD UPTD Pengelolaan Kawasan Konservasi Perairan di Raja Ampat. Retrieved 2022-11-17.
- ↑ Majid, Abdul (1 May 2021). "Raja Ampat, Surga Penyelam dari Timur Indonesia". detik.com. Retrieved 2022-11-17.
- ↑ "Visualisasi Data Kependudukan – Kementerian Dalam Negeri 2023". Retrieved 2024-05-27.
- ↑ Nauly, Yacob (27 February 2021). "Usia 21 Tahun, Kota Sorong Termaju Di Tanah Papua". suarakarya.
- ↑ "Kaya Akan Keindahan Alam, Tambrauw Perlu Kedepankan Konservasi". Kementerian Pariwisata dan Ekonomi Kreatif. 23 August 2020.
- ↑ Nugroho, Hari; Awal, Riyanto; Wantoro, Sigit; Yessi, Santika; Irham, Muhammad (2020). Ekspedisi Tambrauw: Sepotong Surga di Tanah Papua. Jakarta: LIPI Press. ISBN 978-602-496-059-9. கணினி நூலகம் 1160197476.
- ↑ "Kirab Pemilu 2024 di Sorong Selatan, Ulik Potensi Udang dan Kepiting". kompas.id. KOMPAS. 2023-11-12. Retrieved 2024-02-13.
- ↑ Dhani, Arya Kusuma (2018-11-06). "RIMBUNNYA HUTAN MANGROVE SORONG SELATAN MENJADI SARANA MASYARAKAT UNTUK BERBURU RUPIAH". wwf.id. WWF – INDONESIA.
- ↑ Setiawan, Azhari (2021-10-25). "Menparekraf Tinjau Taman Wisata Mangrove Klawalu Pertama di Tanah Papua". kemenparekraf.go.id. Kementerian Pariwisata dan Ekonomi Kreatif.
- ↑ Ambari, M. (2019-08-20). "Aneka Potensi dari Kawasan Pulau Terluar Samudera Pasifik". mongabay.co.id. MONGABAY.
- ↑ "[Metode Baru] Indeks Pembangunan Manusia Menurut Kabupaten/Kota 2021–2023". papuabarat.bps.go.id.
- ↑ Undang-Undang Nomor 56 Tahun 2008 tentang Pembentukan Kabupaten Tambrauw di Provinsi Papua Barat (Law Number 56 of 2008 regarding the Formation of Tambrauw Regency in West Papua Province).
- ↑ "Jumlah Penduduk Menurut Agama" (in இந்தோனேஷியன்). Ministry of Religious Affairs (Indonesia). 31 August 2022. Retrieved 29 October 2023.
Muslim 241 Million (87), Christianity 29.1 Million (10.5), Hindu 4.69 million (1.7), Buddhist 2.02 million (0.7), Folk, Confucianism, and others 192.311 (0.1), Total 277.749.673 Million
- ↑ "Visualisasi Data Kependudukan – Kementerian Dalam Negeri 2023". Retrieved 2024-05-27.
- ↑ "Wilayah Kerja – Jerat Papua". www jeratpapua.org. Retrieved 22 December 2022.
சான்றுகள்
[தொகு]- L, Klemen (2000). "Forgotten Campaign: The Dutch East Indies Campaign 1941–1942".
- Lumintang, Onnie; Haryono, P. Suryo; Gunawan, Restu; Nurhajarini, Dwi Ratna (1997). Biografi Pahlawan Nasional Marthin Indey dan Silas Papare (PDF). Indonesia: Ministry of Education and Culture (Indonesia).
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் Central Papua தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.