தென்மேற்கு கட்டளையகம் (இந்தியத் தரைப்படை)
தோற்றம்
| தென்மேற்கு கட்டளயகம் (சப்த சக்தி கட்டளையகம்) | |
|---|---|
| File:South Western Command (India).png தென்மேற்கு கட்டளையகத்தின் இலச்சினை | |
| சேவையில் | 2005 - தற்போது வரை |
| நாடு | இந்தியா |
| பிரிவு | இந்தியத் தரைப்படை |
| வகை | கட்டளையகம் |
| தலைமையகம் | ஜெய்ப்பூர், இராஜஸ்தான் |
| தளபதிகள் | |
| கட்டளையகத் தளபதி (General officer commanding) | லெப். ஜெனரல் மஞ்சிந்தர் சிங் |
| சின்னங்கள் | |
| கொடி | |
தென்மேற்கு கட்டளையகம் (South Western Command), இந்தியத் தரைப்படையின் 7 கட்டளையகங்களில் ஒன்றாகும். லெப். ஜெனரல் தலைமையிலான இதன் தலைமையிடம் ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ளது. இக்கட்டளையகம் 15 ஏப்ரல் 2005 அன்று நிறுவப்பட்டது.[1]தென்மேற்கு கட்டளையகத்தின் கீழ்10வது பெரும்படையணி மற்றும் பீரங்கிப் படை டிவிசனும் இயங்குகிறது.
செயல்படும் பகுதிகள்
[தொகு]இந்தியாவின் பஞ்சாப், இராஜஸ்தான், அரியானா, தில்லி மற்றும் ஜம்முவின் தெற்குப் பகுதிகள்.
அமைப்பு
[தொகு]தற்போது தென்மேற்கு கட்டளையகத்தின் கீழ் 10வது பெரும் படையணி (X Corps) மற்றும் 42வது பீரங்கிப் படை டிவிசனும் உள்ளது. இக்கட்டளையகத்தின் கீழ் கீழ்கண்ட படைப்பிரிவுகள் உள்ளது.
- 3 தரைப்படை டிவிசன்கள் (அதில் 1 மலைப் போர் பிரிவு), 1 கவச வாகன டிவிசன், 1 பீரங்கிப் படை டிவிசன், 2 அதிரடி படை டிவிசன்கள், 1கவசப் பிரிகேட், 1 வான்படை பிரிகேட் மற்றும் 1 இராணுவப் பொறியாளர் பிரிகேடு
2021ஆம் ஆண்டில் தென்மேற்கு கட்டளையகத்தில் 33வது கவச டிவிசன் தவிர பிற படைப்பிரிவுகள் அனைத்தும் வடக்கு கட்டளையகத்திற்கு மாற்றப்பட்டது.
| தென்மேற்கு கட்டளையகத்தின் அமைப்பு | ||||
|---|---|---|---|---|
| பெரும் படையணி | தலைமையகம் | கட்டளையகத் தளபதி
(Corps Commander) |
ஒதுக்கப்பட்ட அலகுகள் | அலகின் தலைமையிடம் |
| 10வது பெரும் படையணி (X Corps)
(சேடாக்) |
பட்டிண்டா, பஞ்சாப் Bathinda, Punjab]] | லெப். ஜெனரல் | 16வது தரைப்படை டிவிசன் | சிறீ கங்காநகர், இராஜஸ்தான் |
| 18வது விரைவுப் படை டிவிசன் | கோட்டா, இராஜஸ்தான் | |||
| 24வது விரைவுப் படை டிவிசன் | பிகானேர், இராஜஸ்தான் | |||
| 6 கவசப் படை பிரிகேட் | பட்டிண்டா, பஞ்சாப் | |||
| 615வது வான்படை பிரிகேட் | ஆக்ரா, உத்தரப் பிரதேசம் | |||
| 471வது பொறியாளர் படை பிரிகேட் | N/A | |||
| N/A | N/A | N/A | 42வது பீரங்கிப் படை டிவிசன் | ஜெய்ப்பூர், இராஜஸ்தான் |
| N/A | N/A | N/A | 33 கவசப் படை டிவிசன் | ஹிசார், அரியானா |
குறிப்புகள்
[தொகு]- ↑ Renaldi and Rikhye 2011, 21
மேற்கோள்கள்
[தொகு]- Richard A. Renaldi and Ravi Rikhe, 'Indian Army Order of Battle,' Orbat.com for Tiger Lily Books: A division of General Data LLC, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9820541-7-8, 2011.