தென்னை கொழுக்கட்டை உணவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தென்னைக் கொழுக்கட்டை, இந்தியாவில்  தென் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பிரபலமான  இனிப்பு உணவுகளில் ஒன்று. 

தயாரிப்பு[தொகு]

தென்னைக் கொழுக்கட்டை பொதுவாக சிறப்பு நிகழ்ச்சிகளின் பொழுது குடும்பமே இணைந்து தயாரிப்பது. சாதாரண கொழுக்கட்டைக்கு தேவையான பொருள்களே  இதையும் தயாரிக்கத் தேவைப்படுகிறது. ஆனால்  கொழுக்கட்டையை தயாரித்த பிறகு அதனை  இளம்தென்னை ஓலையினுள் வைத்து வேக வைக்க வேண்டும்.(இளம் இலை வெளிர் பச்சை நிறத்திலும்,  முதிர் இலை அடர்  பச்சை நிறத்திலும் இருப்பதை கொண்டு அடையாளம் காணலாம்). இளம்தென்னை ஓலையின் நுனிப் பகுதியும்,  தண்டு பகுதியையும் நீக்கிவிட்டு பயன்படுத்த வேண்டும். அரிசி  கலவையை  ஓலையினுள் வைத்து வேக வைக்க வேண்டும். உணவுக்குத்  தேவையான வெப்பம், கலனிலிருந்து வெளிவரும்  ஆவியிலிருந்து  பெறப்படுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்னை_கொழுக்கட்டை_உணவு&oldid=3522396" இலிருந்து மீள்விக்கப்பட்டது