தென்னிந்தியக் கருப்பு சின்னான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்னிந்தியக் கருப்பு சின்னான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கெப்சிபெட்டசு
இனம்:
கெ. கணேசா
இருசொற் பெயரீடு
கெப்சிபெட்டசு கணேசா
சைக்கீசு, 1832

தென்னிந்தியக் கருப்பு சின்னான் (Square-tailed bulbul)(கெப்சிபெட்டசு கணேசா) என்பது கொண்டைக்குருவி குடும்பத்தில், பைக்னோனோடிடேயில் உள்ள பறவை சிற்றினமாகும். இது தென்மேற்கு இந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். இது முன்பு கருப்புசின்னானின் துணையினமாக வகைப்படுத்தப்பட்டது.

வகைப்பாட்டியல்[தொகு]

சதுர வால் சின்னானின் மாற்றுப் பெயராகத் தென்னிந்தியக் கருப்பு சின்னான் மற்றும் சதுர வால் கருப்பு சின்னான் உள்ளன.

துணை இனங்கள்[தொகு]

இரண்டு துணையினங்கள் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவை:[2]

  • இலங்கை சின்னான் (கெ. க. குமீ) - (விசிலர் & கைனீயர், 1932) : இலங்கை சிற்றினம் இந்திய சின்னானைவிட எடை தடித்த அலகினை கொண்டது. இலங்கையில் காணப்படும்
  • இந்திய சின்னான் (கெ. க. கணீசா) - சைக்சு, 1832: தென்மேற்கு இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது

விளக்கம்[தொகு]

சதுர வால் சின்னான் கருப்பு சின்னானில் இருக்கும் கண்ணின் பின்புறம் மற்றும் காது மறைப்புகளில் கருப்பு கோடு இல்லை.[3][4][5]

நடத்தை மற்றும் சூழலியல்[தொகு]

தென்னிந்தியாவில், கூடு கட்டுதல் பிப்ரவரியில் தொடங்கி மே மாதத்தில் உச்சத்தை அடைகிறது. முட்டைகள் 12 முதல் 13 நாட்கள் அடைகாக்கும் காலத்திற்குப் பிறகு குஞ்சு பொரிக்கின்றன. குஞ்சுகள் சுமார் 11 அல்லது 12 நாட்களுக்குப் பிறகு கூட்டைவிட்டுப் பறந்துசெல்லும். பருவமழை காலத்தில் வலசை செல்கின்றன. கூடு வேட்டையாடுபவர்களில் இரையின் பறவைகள் மற்றும் கருப்பு சிறகு விசிறிவால் மற்றும் சாரப்பாம்பு போன்றவை இவற்றின் எதிரிகள் ஆகும்.[6] முதிர்ந்த சதுர வால் சின்னான் கொன்றுண்ணி பறவைக்கு இரையாவது அறியப்படுகிறது.[7]

கெப்சிபெட்டசு கணேசாவின் குரலோசை

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2017). "Hypsipetes ganeesa". IUCN Red List of Threatened Species 2017: e.T103824080A113107743. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T103824080A113107743.en. https://www.iucnredlist.org/species/103824080/113107743. பார்த்த நாள்: 20 November 2021. 
  2. Gill, Frank; Donsker, David, eds. (2017). "Bulbuls". World Bird List Version 7.3. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 2 November 2017.
  3. Handbook of the birds of India and Pakistan. Oxford University Press. 1996. 
  4. The Fauna of British India, Including Ceylon and Burma. Birds. Volume 1. Taylor and Francis, London. 1889. https://archive.org/stream/birdsindia01oaterich#page/260/mode/1up/. 
  5. The Fauna of British India, Including Ceylon and Burma. Birds. Taylor and Francis, London. 1924. https://archive.org/stream/faunaofbritishin01bake#page/369/mode/1up/. 
  6. Balakrishnan Peroth (2010). "Reproductive biology of the Square-tailed Black Bulbul Hypsipetes ganeesa in the Western Ghats, India". Indian Birds 5 (5): 134–138. 
  7. Davison, William (1883). "Notes on some birds collected on the Nilghiris and in parts of Wynaad and southern Mysore". Stray Feathers 10 (5): 329–419. https://archive.org/stream/strayfeathersjou101887hume#page/n357/mode/1up/. 
  • Rasmussen, P.C., and J.C. Anderton. 2005. Birds of South Asia. The Ripley guide. Volume 2: attributes and status. Smithsonian Institution and Lynx Edicions, Washington D.C. and Barcelona.