தென்னாட்டுப் போர்க்களங்கள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தென்னாட்டுப் போர்க்களங்கள்
நூல் பெயர்:தென்னாட்டுப் போர்க்களங்கள்
ஆசிரியர்(கள்):கா. அப்பாத்துரை
வகை:வரலாற்றாராய்ச்சி நூல்
மொழி:தமிழ்
பக்கங்கள்:480
பதிப்பகர்:ஔவை நூலகம்
பதிப்பு:1961
ஆக்க அனுமதி:ஆசிரியருடையது

தென்னாட்டுப் போர்க்களங்கள் என்பது கா. அப்பாத்துரை எழுதிய போர்க்களங்கள் (போர் நடந்த இடங்கள்) பற்றிக்கூறும் வரலாற்றாராய்ச்சி நூலாகும். இதில் சங்ககாலம் நடந்த போர்கள், வரலாற்று காலப்போர்கள் நடந்த போர்களும் கல்வெட்டுகளையும், சங்கத்தமிழ் பாடல்களையும் சான்று காட்டி எழுதப்பட்டுள்ளது.

சிறப்புகள்[தொகு]

  • இதில் சங்கப்பாடல்களையும் சிலப்பதிகாரத்தையும் கொண்டு பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில் அரண்மனையில் அமைக்கப்பட்ட பொறிகளையும், போர்கருவிகளையும் அதன் உபயோகங்களையும் பற்றி எழுதப்பட்டுளது குறிப்பிடத்தக்கது.
  • இதை படித்த முன்னால் தமிழக முதல்வர் அண்ணா பின்வருமாறு உரைத்தார்.

"இந்நூல் என்னை மிகவும் கவர்ந்த நூலாகும். அந்த நூலின் ஒரே ஓர் ஏட்டை எழுத, அவர் எத்தனை ஆயிரம் ஏடுகளைத் தேடிப் பார்த்திருக்க வேண்டும். எத்தனை ஆயிரம் கவிதைகள், இலக்கியங்களைத் திரட்டிப் பார்த்திருக்க வேண்டும் என்பதை எண்ணி வியந்தேன்"

- அறிஞர் அண்ணா[1]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. பி. தயாளன் (ஆகத்து 2009). "பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார்". தினமணி. (Web link). Retrieved on 22 சனவரி 2015.