தென்சு சில்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்சு சில்லர்
மேட்ரிட், நவம்பர் 1995
22nd துருக்கியப் பிரதமர்
பதவியில்
25 ஜூன் 1993 – 6 மார்ச் 1996
குடியரசுத் தலைவர்Süleyman Demirel
DeputyMurat Karayalçın
Hikmet Çetin
Deniz Baykal
முன்னையவர்சுலைமான் டெமிரல்
பின்னவர்மீசுட் இல்மஸ்Yılmaz]]
Deputy Prime Minister of Turkey
பதவியில்
28 ஜூன் 1996 – 30 ஜூன் 1997
பிரதமர்Necmettin Erbakan
முன்னையவர்Nahit Menteşe
பின்னவர்İsmet Sezgin
36th Minister of Foreign Affairs
பதவியில்
28 ஜூன் 1996 – 30 ஜூன் 1997
பிரதமர்Necmettin Erbakan
முன்னையவர்Emre Gönensay
பின்னவர்İsmail Cem
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு24 மே 1946 (1946-05-24) (அகவை 77)
இசுதான்புல், துருக்கி
அரசியல் கட்சிTrue Path Party
துணைவர்Özer Uçuran Çiller
முன்னாள் கல்லூரிUniversity of New Hampshire
கனெடிகட் பல்கலைக்கழகம்
யேல் பல்கலைக்கழகம்
கையெழுத்து

டான்சு சில்லர் ( Tansu Çiller, துருக்கி: பிறப்பு: 24 மே 1946) ஒரு துருக்கிய கல்வியாளரும், பொருளியல் அறிஞரும், அரசியல்வாதியும் ஆவார். அவர் 1993 முதல் 1996 வரை துருக்கியின் 22 வது பிரதமராகப் பணியாற்றினார். இவர் துருக்கியின் ஒரே பெண் பிரதமர் ஆவார்.[1] உண்மைப் பாதை கட்சியின் தலைவர் என்ற முறையில், அவர் துருக்கிய துணை பிரதமராகவும் 1996 முதல் 1997 வரை துருக்கியின் வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றினார் .

பொருளியல் பேராசிரியரான, சில்லர் 1991 இல் பிரதமமந்திரி சுலைமான் டெமிரல் அமைச்சரவையில் பொருளாதாரப் பொறுப்போடு கூடிய மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1993 ஆம் ஆண்டில் டெமிரெல் துருக்கியின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது ,சில்லர் உண்மைப்பாதை கட்சியின் தலைவராகவும் அதே நேரம் பிரதம அமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்..

அப்பொழுது துருக்கிய ஆயுதப்படைகளுக்கும் குர்திஷ் பிரிவினைவாத அமைப்பான குர்திசியத் தொழிலாளர் கட்சிக்குமிடையேயான முரண்பாடுகள் தீவிரமாக இருந்தது. சில்லர் பதவியேற்றதும் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டார். தேசியப் பாதுகாப்புக்காக அவர் கோட்டைத் திட்டத்தை செயல்படுத்தினார்.

சிறப்பாக ஆயுதம் தாங்கிய இராணுவத்தைக் கொண்ட,சில்லர் அரசாங்கமானது குர்திசிய தொழிலாலர் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக பதிவு செய்ய அமெரிக்காவை இணங்க வைத்தது.

1994 உள்ளூர் தேர்தல்களில் வெற்றி பெற்ற சிறிது காலத்திற்குள், பெரிய அளவிலான திட்டங்களில் முதலீடு செய்ததும், சில்லரின் நம்பகத் தன்மையில்லாத இலக்குகளைக் கொண்ட வரவு-செலவுத் திட்டமும் துருக்கிய லிரா மற்றும் வெளிநாட்டு நாணய இருப்புக்களை கிட்டத்தட்ட சரியச் செய்துவிட்டன. அடுத்தடுத்த பொருளாதார நெருக்கடி மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு இடையே, அவருடைய அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றிய-துருக்கி சுங்க ஒன்றியத்தில் 1995 இல் கையெழுத்திட்டது.

சில்லருடைய அரசாங்கம் 1995 ஆம் ஆண்டு அஜீனிய ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை ஆதரித்தது என்றும், இமா / கார்டாக் தீவுகளின் இறையாண்மையைக் கூறி கிரேக்கத்துடன் பதட்டங்களை அதிகரித்தது என்றும் கூறப்பட்டது. 1995 பொதுத்தேர்தலில் இவரது உண்மைப்பாதைக் கட்சி மூன்றாவது வெற்றி பெற்றது எனினும் 1996 இல் நேமெஸ்ட்டின் ஏர்பாக்கன் தலைமையிலான சமூக நலக்கட்சி அமைச்சரவை பொறுப்பேர்க்கும் வரை சில்லர் பிரதமராக பதவியில் நீடித்து இருந்தார். இந்த அமைச்சரவையிலும் சில்லர் துணைப்பிரதமராகவும் வெளிவிவகாரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.[2]

1996 ல் சுசூர்லக் கார் விபத்து மற்றும் சுசூர்லக் ஊழல் ஆகியவை சில சட்ட நிறுவனங்களுடன் சில்லர் அரசாங்கத்தின் உறவுகளை வெளிப்படுத்தின. அப்துல்லா கட்லி போன்ற தனிநபர்களை ஷில்லர் பணியமர்த்திய விவகாரங்கள் சில்லரின் புகழ் குறைய வழிவகுத்தது. 1997 ஆம் ஆண்டில் எர்பாக்கனின் அரசாங்கம் ஒரு இராணுவநடவடிக்கையைத் தொடர்ந்து வீழ்ச்சியடைந்தது. மீண்டும் 1999 பொதுத் தேர்தலில் சில்லரின் உண்மைப்பாதைக் கட்சி மேலும் சரிந்தது. 2002 பொதுத் தேர்தலில் மூன்றாவது இடத்தைப் பெற்றபோதிலும், இக்கட்சி வாக்குகளில் 10% க்கும் குறைவான வாக்குகளைப் பெற்று, நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்தது. இது கட்சியின் தலைவமையிலிருந்தும், தீவிரமான அரசியலில் இருந்தும் சில்லர் வெளியேறுவதற்கு வழிவகுத்தது.[2]

பின்னணி மற்றும் ஆரம்ப வாழ்க்கை[தொகு]

கில்லர் இஸ்தான்புலில் 1946 இல் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை முதலில் ஒரு பத்திரிகையாளராகவும் பின்னர் 1950 களில் பிலேஸ்கிக் மாகாணத்தின் துருக்கிய ஆளுனராகவும் இருந்தார். தென்சு குடும்பத்தில் ஒரே குழந்தை ஆவார். அவர் இஸ்தான்புல்லில் உள்ள அமெரிக்க பெண்கள் கல்லூரியில் பட்டம் பெற்ற பின் , இஸ்தான்புல்லில் ராபர்ட் கல்லூரியில் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பட்டம் பெற்றார். ஐக்கிய அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்குச் சென்ற சில்லர், நியூ ஹாம்சயர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றபின் கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் அவர் யேல் பல்கலைக்கழகத்தில் தனது ஆய்வு முனைவர் படிப்பை முடித்தார்.[1] 1973 இல்துருக்கி திரும்பும் முன்பு வரை பென்சில்வேனியாவிலுள்ள பிராங்க்ளின் கல்லூரி[2] மற்றும் மார்ஷல் கல்லூரியில் பொருளாதாரம் போதித்து வந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Tansu Çiller". The Editors of Encyclopaedia Britannica. Encyclopaedia Britannica. Jan 1, 2019. பார்க்கப்பட்ட நாள் 16 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 2.2 "Tansu Çiller (Istanbul 1946- )". www.allaboutturkey.com. பார்க்கப்பட்ட நாள் 16 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Tansu çiller Facts". biography.yourdictionary.com. பார்க்கப்பட்ட நாள் 16 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்சு_சில்லர்&oldid=3480780" இலிருந்து மீள்விக்கப்பட்டது