உள்ளடக்கத்துக்குச் செல்

தென்கிழக்கு சுலாவெசி

ஆள்கூறுகள்: 3°57′00″S 122°30′00″E / 3.95000°S 122.50000°E / -3.95000; 122.50000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்கிழக்கு சுலாவெசி
Southeast Sulawesi
Province of Southeast Sulawesi
Provinsi Sulawesi Tenggara
அலுவல் சின்னம் தென்கிழக்கு சுலாவெசி
சின்னம்
தென்கிழக்கு சுலாவெசி அமைவிடம்
Map
தென்கிழக்கு சுலாவெசி is located in இந்தோனேசியா
தென்கிழக்கு சுலாவெசி
      தென்கிழக்கு சுலாவெசி

ஆள்கூறுகள்: 3°57′00″S 122°30′00″E / 3.95000°S 122.50000°E / -3.95000; 122.50000
பகுதிசுலாவெசி
மாநிலம்தென்கிழக்கு சுலாவெசி
தலைநகரம்கெண்டாரி
பரப்பளவு
 • மொத்தம்36,159.71 km2 (13,961.34 sq mi)
 • பரப்பளவு தரவரிசை24-ஆவது
உயர் புள்ளி
8,694 m (28,524 ft)
மக்கள்தொகை
 (31 திசம்பர் 2024)[1][2]
 • மொத்தம்28,24,589
 • அடர்த்தி78/km2 (200/sq mi)
மக்கள் தொகை
 • இனக்குழுக்கள்[3]36% தொலாக்கி
26% புத்தோனியர்
19% முனா
10% மொரோனீன்
5.2% வவோனியா
3.5% சீனர்கள்
0.3% வேறு
 • சமயம் (2023) [1]96% இசுலாம்
2.3% கிறிஸ்தவம்
1.1% இந்து சமயம்
0.4% பௌத்தம் வேறு
 • மொழிகள்இந்தோனேசியம்; பூகிஸ் மொழி; சியா-சியா, முனா, தொலாக்
நேர வலயம்இந்தோனேசிய நேரம் +8
HDI (2024)Increase 0.736[4]
 - வளர்ச்சி (2022)[5]Increase 5.25%
இணையதளம்sultraprov.go.id

தென்கிழக்கு சுலாவெசி (ஆங்கிலம்: Southeast Sulawesi; இந்தோனேசியம்: Sulawesi Tenggara) என்பது இந்தோனேசியா, சுலாவெசித் தீவின் தென்கிழக்கு தீபகற்பத்தில் உள்ள ஒரு மாநிலம் ஆகும். இந்த மாநிலம் புத்தோன் தீவு, முனா தீவு (Muna Island), கபேனா தீவு (Kabaena), வவோனி தீவு (Wawonii Island) போன்ற கடற்கரைத் தீவுகளையும்; மற்றும் பல சிறிய தீவுகளையும் கொண்டுள்ளது.

இதன் வடக்கில் தெற்கு சுலாவெசி மற்றும் மத்திய சுலாவெசி மாநிலங்கள் எல்லையாக உள்ளன; கிழக்கில் மலுக்கு மாகாணம், வடக்கு மலுக்கு மாகாணம்; மற்றும் தெற்கில் கிழக்கு நுசா தெங்காராவுடன் கடல் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது; மேலும் தெற்கில் கிழக்குத் திமோர் மாநிலத்துடன் மிகக் குறுகிய கடல் எல்லையையும் கொண்டுள்ளது.

இதன் தலைநகரம் கெண்டாரி. சுலாவெசி தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள இந்த நகரம், தென்கிழக்கு சுலாவெசி மாநிலத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகவும் விளங்குகிறது.

தென்கிழக்கு சுலாவெசி மாநிலத்திற்கு, சுலாவெசி தீவின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் நெடுஞ்சாலை சாலைகள் எதுவும் இல்லை. இந்த மாநிலத்திற்கான முதன்மை போக்குவரத்து இணைப்பு என்பது தெற்கு சுலாவெசியில் உள்ள வட்டம்போன் (Watampone) நகரத்திற்கும்; தென்கிழக்கு சுலாவெசியின் கோலாக்கா துறைமுகத்திற்கும் (Kolaka) இடையிலான போன் வளைகுடா (Bone Gulf) படகுப் போக்குவரத்து மட்டுமே ஆகும்.

2024-ஆம் ஆண்டின் இறுதியில், தென்கிழக்கு சுலாவெசியின் மக்கள் தொகை 2,824,589 ஆக இருந்தது.

வரலாறு

[தொகு]

தென்கிழக்கு சுலாவெசி, 14-ஆம் நூற்றாண்டு வரை சுமாத்திராவின், சிறீ விஜயப் பேரரசின் ஒரு பகுதியாகவும்; 15-ஆம் நூற்றாண்டின் இறுதி வரை கிழக்கு ஜாவாவின், மஜபாகித் பேரரசின் ஒரு பகுதியாகவும் இருந்தது. 15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் மஜபாகித் பேரரசில் ஏற்பட்ட படிப்படியான சிதைவுகளினால், சுலாவெசி தீவு முழுவதும் பல குறுமாநிலங்கள் உருவாகின.[6]

அந்தக் காலக்கட்டத்தில், தெற்கு சுலாவெசியின் ஆட்சி அதிகாரம், மக்காசார் மற்றும் பூகிஸ் எனும் இரண்டு இனக்குழுக்களுக்கு இடையே ஏற்ற இறக்கமாக இருந்தது. பின்னர் 1530-ஆம் ஆண்டுகளில் மக்காசார் மாநிலம் வலிமையான மாநிலமாக உருவெடுத்தது. அதன் ஆட்சியாளர் 1605-இல் இசுலாத்தை ஏற்றுக்கொண்டார்.[6]

இடச்சுக்காரர்கள்

[தொகு]
வக்காதோபி கடற்கரை (2006)
புலாவ் கொன்டோ கடற்கரை (2019)
போலாங் செலாத்தான் பிரதான சாலையில் பஜோங்காங் புல்வெளி (2019)



தென்கிழக்கு சுலாவெயில் சமயம் (2022)[7]

1600-ஆம் ஆண்டுகளில், இடச்சுக்காரர்கள் மக்காசார் நகரில் ஒரு வணிக நிலையத்தை நிறுவினர். இந்த நிகழ்வு, கோவா இராச்சியத்துடன் ஒரு போருக்கும் வழிவகுத்தது. இதன் தொடர்ச்சியாக, இடச்சுக்காரர்களுக்கும் போன் இராச்சியத்தின் பூகிஸ் இளவரசர் அருங் பலக்கா (Arung Palakka) என்பவருக்கும் இடையே ஒரு நட்புக் கூட்டணிக்கு வழிவகுத்தது.[8]

பூகிஸ் இளவரசர் அருங் பலக்கா உதவியுடன், இடச்சுக்காரர்கள் இறுதியில் 1669-இல் கோவா இராச்சியத்தின் தலைவரைத் தோற்கடித்தனர். அதன் பின்னர், தெற்கு சுலாவெசி பிராந்தியத்திற்குள் தங்களின் நிலைப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டனர். இதற்கிடையில், அருங் பலக்கா, போன் இராச்சியத்தின் ஆட்சியாளரானார். தெற்கு சுலாவெசியின் பெரும்பகுதியைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். 1696-இல் அவர் இறக்கும் போது, ​​சுலாவெசி தீவின் பெரும்பாலான குறுமாநிலங்கள் மீது தமூடைய அதிகாரத்தை விரிவுபடுத்தி இருந்தார் என அறியப்படுகிறது.[8]

17-ஆம் நூற்றாண்டிலிருந்து 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, இந்தப் பகுதி புத்தோன் சுல்தானகத்தின் (Buton Sultanate) ஆட்சியின் கீழ் இருந்தது.

நெப்போலியப் போர்கள்

[தொகு]

18-ஆம் நூற்றாண்டில் மக்காசார் மற்றும் பூகிஸ் மாநிலங்களுக்கு இடையே தொடர்ச்சியான இராணுவப் போட்டிகள் நடைபெற்றன. இடச்சுக்காரர்கள் அந்தப் போர்களில் தலையிட்டனர். 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில், இடச்சுக்காரர்கள் மக்காசார் மற்றும் போன் இராச்சியங்கள் மீது தங்களின் காலனித்துவ மேலாதிக்கத்தை நிறுவினர்.

நெப்போலியப் போர்களின் போது, ​​சுலாவெசி தீவு, பிரித்தானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது (1810–16). 1817-ஆம் ஆண்டில் இந்தப் பகுதி இடச்சுக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டபோது, ​​சில தெற்கு சுலாவெசி மாநிலங்கள் இடச்சு மேலாதிக்கத்தை அங்கீகரிக்க மறுத்தன. 1825-இல் போன் இராச்சியம் கிளர்ச்சி செய்தது. மேலும் அந்தக் கிளர்ச்சி, இடச்சுக்காரர்கள் மற்றும் மககாசாரின் ஒருங்கிணைந்த படைகளால், தற்காலிகமாக அடக்கப் பட்டாலும், 1860-ஆம் ஆண்டு வரை முழுமையாக அடக்கப்படவில்லை.

1905-ஆம் ஆண்டு வாக்கில் இடச்சுக்காரர்கள் முழு சுலாவெசி தீவிலும் தங்கள் ஆட்சியை உறுதிப்படுத்தினர்.[9]

நிலவியல்

[தொகு]

தென்கிழக்கு சுலவேசியில் உள்ள இரண்டு முக்கிய மலைத்தொடர்கள் தாங்கேசினுவா மலைத்தொடர் (Tanggeasinua Range); மற்றும் மீகோங்கா மலைத்தொடர் (Mekongga Range) ஆகும்.[10]

முக்கிய ஆறுகள் இலலிண்டா ஆறு (Lalindu River), இலாசோலோ ஆறு (Lasolo River) மற்றும் சம்பாரா ஆறு (Sampara River) ஆகும்.[10][11]

இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனம்

[தொகு]
மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
2000 18,20,379—    
2010 22,32,586+22.6%
2015 24,95,248+11.8%
2020 26,24,875+5.2%
2024 27,93,070+6.4%
Source: (Statistics Indonesia)

இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனம் (இடச்சு: Vereenigde Oostindische Compagnie) 17-ஆம் நூற்றாண்டில் இந்தப் பகுதியில் காலடி வைத்தது. பூகிஸ் இளவரசர் அருங் பலக்கா என்பவருடன் கூட்டணி வைத்துக் கொண்டது.

பின்னர் மக்காசர் இராச்சியத்தை இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனம் தோற்கடித்தது. அதன் பின்னர், கோவா இராச்சியத்தின் அரசர் அசானுதீன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அந்த ஒப்பந்தம், கோவா சுல்தானகத்தின் அதிகாரத்தை வெகுவாகக் குறைத்தது.[12]

போக்குவரத்து

[தொகு]

வானூர்தி நிலையங்கள்

[தொகு]

காட்சியகம்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Visualisasi Data Kependuduakan - Kementerian Dalam Negeri 2020". www.dukcapil.kemendagri.go.id. Retrieved 14 August 2021.
  2. "Provinsi Sulawesi Tenggara Dalam Angka 2023" (pdf). BPS. p. 86. Retrieved 29 July 2023.
  3. Indonesia's Population: Ethnicity and Religion in a Changing Political Landscape, Institute of Southeast Asian Studies, 2003
  4. "Indeks Pembangunan Manusia 2024" (in இந்தோனேஷியன்). Statistics Indonesia. 2024. Retrieved 15 November 2024.
  5. Badan Pembangunan Nasional (2023). "Capaian Indikator Utama Pembangunan". Jakarta: Badan Pembangunan Nasional.
  6. 6.0 6.1 "The area was part of the Buddhist Srivijaya empire of Sumatra until the 14th century and of the Majapahit empire of eastern Java until the end of the 15th century". www.britannica.com (in ஆங்கிலம்). Retrieved 21 March 2025.
  7. "Jumlah Penduduk Menurut Agama" (in இந்தோனேஷியன்). Ministry of Religious Affairs. 31 August 2022. Retrieved 29 October 2023. Muslim 241 Million (87), Christianity 29.1 Million (10.5), Hindu 4.69 million (1.7), Buddhist 2.02 million (0.7), Folk, Confucianism, and others 192.311 (0.1), Total 277.749.673 Million
  8. 8.0 8.1 Druce, Stephen C. (2009). "The lands west of the lakes; A history of the Ajattappareng kingdoms of South Sulawesi 1200 to 1600 CE". OAPEN (in English). Brill. Retrieved 21 March 2025.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  9. Hays, Jeffrey. "SOUTH EAST SULAWESI | Facts and Details". factsanddetails.com (in ஆங்கிலம்). Retrieved 21 March 2025.
  10. 10.0 10.1 "Tanggeasinua Mountains". Encyclopædia Britannica. 
  11. TPC M-12 AG, Indonesia (Map) (first ed.). 1:500,000. Director of Military Survey, Ministry of Defence, United Kingdom. 1972.
  12. Sewang, Ahmad M. (2005). Islamisasi Kerajaan Gowa: abad XVI sampai abad XVII. Yayasan Obor Indonesia. ISBN 978-9-794615300.

சான்றுகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்கிழக்கு_சுலாவெசி&oldid=4232431" இலிருந்து மீள்விக்கப்பட்டது