தென்கிழக்கு அலாஸ்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்கிழக்கு அலாஸ்காவும் அலாஸ்கா கடல்சார் பெருவழி நாவாய் தடங்களும்

தென்கிழக்கு அலாஸ்கா (Southeast Alaska) சிலநேரங்களில் அலாஸ்கா சட்டிப்பிடி (Alaska Panhandle) எனக் குறிப்பிடப்படும் நிலப்பகுதி அமெரிக்க மாநிலம் அலாஸ்காவின் தென்கிழக்கில் உள்ளது. இதன் கிழக்கே கனடிய மாகாணமான பிரிட்டிசு கொலம்பியாவின் வடக்குப் பாதி எல்லையாக அமைந்துள்ளது. தென்கிழக்கு அலாஸ்காவின் பெரும்பான்மையான பகுதியும் ஐக்கிய அமெரிக்காவின் மிகப்பெரிய தேசிய வனப்பகுதியான டோங்காசு தேசிய வனம் அமைந்துள்ளது. பல இடங்களில் இதன் பன்னாட்டு எல்லைக்கோடு கடலோர மலைத்தொடரின் எல்லைத் தொடர்களின் சிகரங்களை ஒட்டியே செல்கிறது. இந்தப் பகுதி இயற்கை எழிலுக்காகவும் மிதமான மழைபொழியும் தட்பவெப்பநிலைக்காகவும் குறிப்பிடத்தக்கது.

பனிசூழ் யோர்ட்சு நீர்வீழ்ச்சியும் பனிக்கடற் படகும்
தென்கிழக்கு அலாஸ்காவின் கோப்பென் காலநிலை வகைப்பாடுகள்
டோங்காசு தேசிய வனம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்கிழக்கு_அலாஸ்கா&oldid=2528022" இலிருந்து மீள்விக்கப்பட்டது