தென்கலம்

ஆள்கூறுகள்: 8°49′05″N 77°41′57″E / 8.81806°N 77.69917°E / 8.81806; 77.69917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்கலம்
தென்குளம், தென்கலம்
கிராமம்
தென்கலம் is located in தமிழ் நாடு
தென்கலம்
தென்கலம்
இந்தியா, தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 8°49′05″N 77°41′57″E / 8.81806°N 77.69917°E / 8.81806; 77.69917
நாடு இந்தியா
Stateதமிழ்நாடு
Districtதிருநெல்வேலி
அரசு
 • வகைகிராம பஞ்சாயுத்து
 • நிர்வாகம்தாளையுத்து பஞ்சாயுத்து, தென்கலம் பஞ்சாயுத்து
ஏற்றம்79 m (259 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்5,000 approx
இனங்கள்தன்கலத்தார், தென்கலத்துகாரர், தென்கலத்துகாரம்மா
மொழிகள்
 • NativeTamil
 • அலுவல்தமிழ்
 • கூடுதல் அலுவலர்English[1]
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்627357
வாகனப் பதிவுTN-72

தென்கலம் (Thenkalam) அதிகாரப்பூர்வமாக தென்குளம் என அழைக்கப்படும் கிராமமாகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. இது திருநெல்வேலி நகரத்திலிருந்து சுமார் 13 கிலோமீட்டர்கள் (8.1 mi) தொலைவிலும், தேசிய நெடுஞ்சாலை 44ல் திருநெல்வேலியின் புறநகர்ப் பகுதியான சங்கர்நகரிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர்கள் (3.1 mi) தொலைவில் மதுரை செல்லும் வழியில் அமைந்துள்ளது.

சொற்பிறப்பியல்[தொகு]

இந்த கிராமம் இப்போது தென்கலம் என்று பரவலாக அறியப்பட்டாலும், அதிகாரப்பூர்வ பதிவுகள் மூலம் இது ஒரு காலத்தில் தெங்குளம் என்று அழைக்கப்பட்தாகத் தெரிவிக்கின்றன. தென்கலம் தென்குளத்தின் ஆங்கில வடிவமாக இருக்க வேண்டும். இதை அனுமானித்து, தென்குளத்தினை இரண்டு சொற்களாகப் பிரிக்கலாம். தென் = தெற்கு & குளம். எனவே, தென்குளத்தை ஆங்கிலத்தில் 'தெற்கில் குளம்' அல்லது 'தெற்கின் மக்கள்' என்று மொழிபெயர்க்கலாம். கிராமத்தின் தென்கிழக்கில் தாளையுத்து குளம் என்ற பெரிய குளம் உள்ளது.

கிராமத்து குளத்தில் மீன்பிடிக்கும் ஆண்கள், தாளையுத்து குளம்

நிலவியல்[தொகு]

தென்கலம் இரண்டு பெரிய மலைகளால் சூழப்பட்டு மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ளது. மலை ஒன்று கிழக்கிலும் மற்றொன்று தெற்கிலும் அமைந்துள்ளது. கிழக்கு மலையை கீழமலை என்று அழைக்கப்படுகிறது, தெற்கு குன்றை இதேபோல் தெற்குமலை என்று அழைக்கப்படுகிறது. தெற்குமலை காலனி இங்கு அமைந்துள்ளது அருகில் உள்ள பகுதியாகும். இரண்டு குன்றுகளுக்கும் இடையே கிராம குளம், தாளையுத்து குளம் ஒன்று இணைக்கின்றது. இக்குளம் மழைநீரால் நிரம்பும் வகையில் அமைந்துள்ளது. இது கீழபத்தில் விவசாய நிலங்களின் நீர்ப்பாசனத்தின் நேரடி ஆதாரமாகச் செயல்படுகிறது. மேலும் சுற்றியுள்ள கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டத்தினை அதிகரித்து மறைமுகமாக விவசாயத்திற்கு உதவுகிறது.

அக்கம்பக்க கிராம்[தொகு]

  • காமராஜ் நகர்
  • கீழத்தென்கலம்
  • மேலத் தென்கலம்
  • பெரியார் நகர்
  • தெற்குமலை காலனி

பயன்பாடுகள்[தொகு]

தென்கலத்தில் தபால் அலுவலகம், வங்கி, கால்நடை மையம் மற்றும் பொதுவான இணைய வழி சேவை மையம் ஒன்றும் உள்ளன. எனவே இப்பகுதி முக்கியமான வணிக மையமாக உள்ளது. இப்பகுதிக்குத் தேவையான மின்சாரத்தைத் தமிழ்நாடு மின்சார வாரியம் (டி.என்.இ.பி.) வழங்குகிறது. டி.என்.இ.பியின் தாளையுத்து துணை மின்நிலையம் கிராமத்தில் மின்சாரம் வழங்குவதற்கான உள்ளாட்சி அமைப்பு ஆகும்.

போக்குவரத்து[தொகு]

திருநெல்வேலி பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்து மூலம் தென்கலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சராசரி பயண நேரம் 40 நிமிடங்கள் ஆகும். இப்பகுதிக்குச் செல்லும் பேருந்துகள்:

  1. தென்கலம் புதூர்
  2. அலவந்தான்குளம்
  3. தெற்கு செழியநல்லூர்
  4. நாஞ்சங்குளம்
  5. ரஸ்தா/நல்லமல்லபுரம் (வழித்தடம் 40 மட்டும்)
  6. மாதவகுறிச்சி/மானூர் (வழித்தடம் 33சி) மட்டுமே
  7. பள்ளமடை (வழித்தடம் 3ஜே)

கிராமத்திற்குச் செல்லும் பேருந்துகளாகும். தெற்கு செழியநல்லூர் தனியார் பேருந்து 33ஏ ஒரு நாளைக்கு இரண்டு முறை தென்கலம் வரை செல்கிறது.

அருகிலுள்ள ரயில் நிலையம் தாளையுத்து ஆகும். இங்குப் பயணிகள் ரயில்கள் மட்டுமே நிறுத்தப்படுகின்றன. திருநெல்வேலி சந்திப்பு இரயில் நிலையம் முக்கிய இரயில் நிலையமாக அருகில் உள்ளது. இங்கிருந்து சென்னை, பெங்களூரு, மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருவனந்தபுரம், கொச்சி, கோவை போன்ற பகுதிகளிக்குத் தினசரி இரயில்கள் இயக்கப்படுகின்றன. ஹைதராபாத், கொல்கத்தாவுக்கு வாராந்திர ரயில்களும், வாரந்தோறும் டெல்லிக்கு (திருக்குறள் விரைவுவண்டி) ரயில்களும் திருநெல்வேலியிலிருந்து இயக்கப்படுகின்றன.

அருகிலுள்ள விமான நிலையமான தூத்துக்குடி விமான நிலையம் ஆகும். இது சென்னையுடன் தினசரி இரண்டு விமானங்களால் இணைக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள சர்வதேச விமான நிலையம் மதுரையில் உள்ளது.

பள்ளிகள்[தொகு]

  1. பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி
  2. டி.டி.டி.ஏ நடுநிலைப் பள்ளி
  3. செயின்ட் பால்ஸ் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி
  4. நட்சத்திர பள்ளி

டி.டி.டி.ஏ பள்ளியை தவிர மற்ற அனைத்து பள்ளிகளும் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படிப்பை வழங்குகின்றன; அதற்கு மேல் ஒருவர் அண்டை கிராமங்கள் அல்லது நகரங்களில் உள்ள பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும்.

குறிப்பிடத்தக்க நபர்கள்[தொகு]

  1. டேனியல் செல்வராஜ், சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர். [2]
  2. எஸ். அசோக் குமார் பல்வேறு நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றியவர், தென்கலம் புதூரில் பிறந்தார் - இது தென்கலம் பஞ்சாயத்து நிர்வாகத்தின் குக்கிராமம். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "52nd report of the Commissioner for Linguistic Minorities in India (July 2014 to June 2015)" (PDF). Ministry of Minority Affairs (Government of India). 29 மார்ச்சு 2016. Archived from the original (PDF) on 25 மே 2017.
  2. http://www.thehindu.com/features/metroplus/skin-deep/article5048748.ece
  3. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Former-judge-Ashok-Kumar-dead/article16502158.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்கலம்&oldid=3114665" இலிருந்து மீள்விக்கப்பட்டது