உள்ளடக்கத்துக்குச் செல்

தென்கரை (கோயம்புத்தூர்)

ஆள்கூறுகள்: 10°56′47″N 76°50′39″E / 10.946332°N 76.844044°E / 10.946332; 76.844044
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்கரை
—  பேரூராட்சி  —
தென்கரை
இருப்பிடம்: தென்கரை

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°56′47″N 76°50′39″E / 10.946332°N 76.844044°E / 10.946332; 76.844044
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
வட்டம் பேரூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

7,349 (2011)

612/km2 (1,585/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 12 சதுர கிலோமீட்டர்கள் (4.6 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/thenkarai-coimbatore

தென்கரை (ஆங்கிலம்:(en:Thenkarai,_Coimbatore), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

பெயர்க்காரணம்[தொகு]

நொய்யல் ஆற்றங்கரையின் தென் பகுதியில் அமைந்த இயற்கை எழில் கூடிய கிராமம்.நொய்யலாற்றின் தென் கரையில் அமைந்த ஊர் என்பதே பெயர் காரணம்.சேர நாடு மற்றும் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக அறியப்பட்ட இக்கிராமம் வளர்ச்சி பெற்றபின் 'சென்னனூர் , புதூர், தண்ணீர்ப்பந்தல் , கரடிமடை, குப்பனூர், அப்பச்சிமார் கோவில், சள்ளிக்குழி , மத்திபாளையம் மற்றும் சித்திரைச்சாவடி' உள்ளிட்ட பகுதிகளை கொண்டதாக வளர்ந்துள்ளது.இப்பகுதி சாலை மூலம் கோவை பெரு-நகருடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

கல்வி, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு[தொகு]

சென்னனூர் அரசு மேல் நிலைப்பள்ளி இப்பகுதியில் அமைந்துள்ளது, இப்பகுதி மக்கள் வேளாண்மை மற்றும் வேளாண் சார்-தொழில் முதன்மை தொழிலாக கொண்டுள்ளனர். வேளாண் மக்கள் தாங்கள் விளைவித்த வேளாண்-பொருட்களை பூளுவப்பட்டி காய்-கனி சந்தையில் வியாபாரிகளிடம் விற்கும் நடைமுறை உள்ளது.

இது தவிர்த்த குப்பனூர் பகுதி மக்கள் சிலர் கூடை-முடைதல் போன்ற பாரம்பரிய தொழிலில் ஈடுபடுகின்றனர்.இப்பகுதி வேளாண் நிலங்கள் "தென்-மேற்கு பருவ மழை"யை மட்டுமே நம்பியே உள்ளது.

அமைவிடம்[தொகு]

கோவை - சிறுவாணி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இப்பேரூராட்சி, கோயம்புத்தூரிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

12 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 31 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, தொண்டாமுத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 2,093 வீடுகளும், 7,349 மக்கள்தொகையும் கொண்டது.[5]

புவியியல்[தொகு]

கோயம்புத்தூர் மாநகரிலிருந்து 17 கி.மீ. தொலைவில் சிறுவாணி சாலையில் அமைந்துள்ளது. இதன் தென் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையும் வட பகுதியில் நொய்யலாறும் உள்ளது. சித்திரை சாவடி பகுதியில் பழங்கால கதவணை உள்ளது. சிறுவாணி ஆறு இப்பகுதியில் இருந்து கிமீ தொலைவில் அமைந்துள்ளது. தென்பகுதியில் சிறியதும் பெரியதுமான கரடுகள் (மலைக்குன்றுகள்) காணப்படுகின்றன.

குறிப்பு: சிறிய மலைக்குன்றுகளை கரடு என்று விளிக்கும் நடைமுறை காணப்படுகிறது.

மொழி மற்றும் கலாச்சாரம்[தொகு]

தமிழ் மொழியே பெருவாரியாக பயன்பாட்டில் உள்ளது. விஜயநகர பேரருசுவின் காலத்தில் இந்த பகுதியில் குடியேறிய கன்னட மற்றும் தெலுங்கு மக்கள் , அவரவர் மொழியை வீட்டு மொழியாக பயன்படுத்துகின்றனர். வீட்டில் தெலுங்கு பேசினாலும் தன்னை தமிழராகவே வெளியில் அடையாளப்படுத்தி கொள்கின்றனர் பெரும்பாலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் , இளையதலைமுறையினரால் பயன்படுத்தப்படுகிறது. தமிழர்களே இந்த நிலத்தின் ஆதார பூர்வகுடிகள் ஆவர்

இதர[தொகு]

அரசால் அங்கீகரிக்கபடாத உள்ளூர் மக்கள் புழக்கத்திலுள்ள பெயர்கள் : புதூர் மற்றும் சென்னனூர் கிராமங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள சிறு குடியிருப்பு பகுதி தற்போதுவரை உள்ளூர் மக்களால் புலவையார் பள்ளம் என்றே அறியப்படுகிறது. அது போலவே சென்னனுர் மேற்கு பகுதியில் உள்ள வேளாண் மக்கள் வாழும் பகுதி முறையே செங்காடு மற்றும் நாத்துப்பட்டி என்றே அறியப்படுகிறது. புலவையார் பள்ளம் உள்ள பகுதி தப்போது வீடுகள் அதிகம் கொண்ட பகுதியாக மாறி வருகிறது.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. இப்பேரூராட்சியின் இணையதளம்
  5. [ https://www.census2011.co.in/data/town/803992-thenkarai-tamil-nadu.html Thenkarai Town Panchayat Population Census 2011]

விக்கி மேப்பியாவில் தென்கரை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்கரை_(கோயம்புத்தூர்)&oldid=3398589" இலிருந்து மீள்விக்கப்பட்டது