தென்கரைக்கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்கரைக்கோட்டை
பகுதி: தமிழ்நாடு
இந்தியா, தமிழ்நாடு, தர்மபுரி மாவட்டம்
தென்கரைக்கோட்டை is located in இந்தியா
தென்கரைக்கோட்டை
தென்கரைக்கோட்டை
ஆள்கூறுகள் 12°04′N 78°10′E / 12.07°N 78.16°E / 12.07; 78.16
வகை கோட்டை
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது தமிழ்நாடு அரசு
நிலைமை சிதைவு

தென்கரைக் கோட்டை என்பது தமிழ்நாட்டின், தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டையாகும்.[1][2] இக்கோட்டை தருமபுரியில் இருந்து ஏறக்குறைய நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அரூர் செல்லும் சாலையில் இராமியம்பட்டிக்கு அருகில் உள்ளது.

கோட்டையின் அமைப்பு[தொகு]

இக்கோட்டை ஒரு தரைக்கோட்டையாகும். கோட்டையின் வாயில் கிழக்கு நோக்கியுள்ளது. கோட்டையின் மேற்கே இராமியம்பட்டி என்ற ஊரும், தெற்கே ஒரு ஏரியும், வடக்கே சலகண்டேசுவரர் ஆறும் எல்லைகளாக உள்ளன. கோட்டை சலகண்டேசுவரர் ஆற்றின் தெற்கு கரையில் உள்ளதால் தென்கரைக் கோட்டை எனப் பெயர்பெற்றது.

கோட்டை 39.43 ஏக்கர் பரப்பளவில் உள்ளது, கோட்டையைச் சுற்றி இருபதடி அகலத்துடன் ஆழமான அகழி உள்ளது. அகழியை அடுத்து உள்ளே 25 அடி உயர கோட்டை மதில் உள்ளது, கோட்டை மதிலின் அடிப்பாகம் இருபது அடி அகலத்துடனும் உச்சியில் பத்து அடி அகலமாக குறுகியும், பீரங்கி மேடைகளுடன் உள்ளது. கோட்டையின் உள்ளே பாழடைந்த அரண்மனையும், 75 அடிக்கு 150 அடி பரப்பளவில் பெரிய குளமும், மேலும் கோட்டையின் நான்கு மூலைகளில் நான்கு குளங்களுடன், நீராழி மண்டபம், குதிரை லாயம் ஆகியவற்றுடன் உள்ளது. மேலும் கோட்டையின் உள்ளே கல்யாண ராமர் கோயில், நஞ்சுண்டேசுவரர் கோயில், விநாயகர் கோயில், சஞ்சீனராயன் கோயில், முருகன் கோயில் ஆகிய கோயில்கள் உள்ளன.

வரலாறு[தொகு]

கிபி 14 ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் மன்னர்கள் சீலப்ப நாயக்கர் சென்னப்ப நாயக்கர் ஆகியோரால் கட்டப்பட்டது தான் தென்கரை கோட்டை.பின் இந்தக்கோட்டையை 1652 இல் மைசூர் அரசர் உடையார் கைபற்றினார். பின் ஐதர் அலி காலத்தில் 1768 ஆம் ஆண்டு கர்னல் உட் என்ற பிரித்தானிய தளபதியால் கோட்டை கைப்பற்றப்பட்டு மீண்டும் அதே ஆண்டு ஐதர் அலியால் மீண்டும் கைப்பற்றப்பற்றப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "விட்டல்ராவின் "தமிழகக் கோட்டைகள்"". ஓர்ல்ட் பிரஸ். 1 செப்டம்பர் 2012. 5 ஆகத்து 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தர்மபுரி - தமிழக மாவட்டங்கள்". diamondtamil.com. 5 ஆகத்து 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. இரா இராமக்கிருட்டிணன் (2016). தகடூர் நாட்டுத் திருக்கோயில்கள். சென்னை: நாம்தமிழர் பதிப்பகம். பக். 117- 120. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்கரைக்கோட்டை&oldid=3611863" இருந்து மீள்விக்கப்பட்டது