தெனீப்பர் மேல்நிலம்

ஆள்கூறுகள்: 49°07′00″N 30°37′00″E / 49.1167°N 30.6167°E / 49.1167; 30.6167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Ukraine Dnepr highland en.jpg

தெனீப்பர் மேல்நிலம் (Dnieper Upland, உக்ரைனியன்: Придніпровська височина) என்பது தெனீப்பர் மற்றும் தெற்கு பூக் ஆகிய இரு ஆறுகளுக்கு இடையே அமைந்திருக்கும் இடமாகும். இது மத்திய உக்ரைனில் சைத்தோமிர், கீவ், வின்னீத்சா, செர்க்காசி, கிரோவோராத், தினேப்ரொபெத்ரொவ்சுக் ஆகிய மாகாணங்களுக்கிடையே அமைந்துள்ளது.

வடக்குப் பகுதி பொலேசியன் தாழ்நிலத்திலும், தெற்குப் பகுதி கருங்கடல் தாழ்நிலத்திலும், கிழக்கு ஓரம் தெனீப்பர் ஆறும் அமைந்துள்ளது. மேற்குப் பகுதி வோல்ஹினியன்-பொடோலியன் மேல்நிலமும் உள்ளது. வடக்குப் பகுதி சராசரியாக 220-240 மீ (720-790 அடி) உயரமும், தென் பகுதி 150-170 மீ (490-560அடி) உயரமாகவும் உள்ளது. அதிகபட்சமாக வடமேற்குப் பகுதியில் 323மீ (1060அடி) உயரமாகவும் உள்ளது. மேட்டுநிலத்தின் முக்கிய அம்சங்களாக கீவ் மலைகள், கனிவ் மலைகள் மற்றும் பிற உள்ளன.

இவ்விடம் ஆழமான அருவிகள், மற்றும் சில நேரங்களில் பள்ளத்தாக்குகள் கொண்டும் வகைப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக அடர்த்தியான ராவின்-குல்ச் தொடர், சிஸ்-தெனீப்பர் பகுதியில் கனிவ் மலைகளுக்குள் அமைந்துள்ளது.

இந்த மேட்டு நிலம் இரும்பு, மாங்கனீசு, கிரானைட், கிராபைட்டு, பழுப்பு நிலக்கரி, கயோலின் உள்ளிட்ட பல தாது வளங்களை கொண்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Small Mining Encyclopedia, Vol. 1,2/Edited by V.S. Biletsky. – தோனெத்ஸ்க்: தொன்பாஸ், 2004. 2007.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெனீப்பர்_மேல்நிலம்&oldid=2979941" இருந்து மீள்விக்கப்பட்டது