தெனிசு சுட்டீபன்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தெனிசு சி. நட்டால் சுட்டீபன்சு (Denise C. Nuttall Stephens) பிரிகாம் யங் பல்கலைக்கழக இயற்பியல், வானியல் துறையின் இயற்பியல், வானியல் கல்லூரியில் வானியல் இணைப்பேராசிரியர் ஆவார்.[1]

கல்வியும் ஆய்வும்[தொகு]

இவர் 1996 இல் பிரிகாம் யங் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளவல் பட்டம் பெற்றார். இவர் தன் முதுவர், முனைவர் பட்டங்களை வானியலில் நியூமெக்சிகோ அரசு பல்கலைக்கழகத்தில் பெற்றார். இவர் தன் முதுமுனைவர் பட்டத்தை விண்வெளித் தொலைநோக்கி அறிவியல் நிறுவனத்திலும் ஜான் ஆப்கிப்ன்சு பல்கலைக்கழகத்திலும் முடித்துள்ளார். இவர் 2007 இல் பிரிகாம் யங் பல்கலைக்கழகத்தில் புல உறுப்பினராகச் சேர்ந்தார்.[2] இவர் பழுப்புக் குறுமீன்களின் வளிமண்டலங்களை ஆய்வு செய்கிறார். இரும விண்மீன்களைத் தேடி வகைபடுத்துகிறார். மேலும் நெப்டியூன் கடப்பு வான்பொருள்களையும் தரை, விண்வெளித் தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி அகச்சிவப்புக் கதிர்த் தரவுகளையும் பதிவு செய்கிறார்.[1] இவரும் இளவல் பட்ட மாணவர் குழுவும் இணைந்து 2017 இல் கெல்ட்16b எனும் புதிய கோளைக் கண்டுபிடித்தனர். இது கில்லோபாகை மீச் சிறு தொலைநோக்கித் திட்ட்த்தின் வழியக்க் கண்டுபிடிக்கப்பட்டது.[3]

சமூக ஈடுபாடு[தொகு]

இவர் பிரிகாம் யங் பல்கலைக்கழக வானியல் கழகத்தை ஒருங்கிணைக்கிறார்.[4] இவர் ஒவ்வோராண்டும் பொதுமக்களுக்கான வானியல் விழாவை நட்த்தி அதில் வானியலையும் இயற்பியலையும் சிறுவருக்கு விளையாட்டாக விளக்குகிறார்.[5] இவர் பிரிகாம் யங் பல்கலைக்கழக வளாகப் புல உறுப்பினர் கொடிக்கால்பந்து மகளிர் விளையாட்டுக் குழு தலைவர் ஆவார்.[6]

சொந்த வாழ்க்கை[தொகு]

இவர் திருமணம் ஆனவர். இவருக்கு ஏழு குழந்தைகள் உண்டு..[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Astronomy, BYU Physics and. "Faculty/Staff Directory" (en).
  2. "ChronicleVitae" (en).
  3. "Planet discovery a lesson in persistence, BYU astronomy students say" (in en-US). The Salt Lake Tribune. http://archive.sltrib.com/article.php?id=5266333&itype=CMSID. 
  4. "BYU Astronomical Society | Night Sky Network".
  5. BYU, Jessilyn Gale. "BYU professors lead next generation of female scientists" (in en). Daily Herald. http://www.heraldextra.com/news/local/education/college/byu/byu-professors-lead-next-generation-of-female-scientists/article_58f82e2a-0f74-5c4a-9536-b340ca43873e.html. 
  6. 6.0 6.1 Murphy, Jen (2017-11-25). "The Football Team Full of Ph.Ds" (in en-US). Wall Street Journal. https://www.wsj.com/articles/the-football-team-full-of-ph-ds-1511611201. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெனிசு_சுட்டீபன்சு&oldid=2720244" இருந்து மீள்விக்கப்பட்டது