தெங் சுரங்கப் பாதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தெங் சுரங்கப் பாதை (Theng Tunnel) இந்தியாவின் வடக்கு சிக்கிமில் இருக்கும் சுங்தாங்-மங்கன் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு சுரங்கப்பாதையாகும். 578 மீட்டர் நீளமுள்ள இச்சுரங்கப்பாதை சிக்கிம் மாநிலத்தின் மிக நீளமான சுரங்கப்பாதையாக கருதப்படுகிறது. [1] சீன-இந்திய எல்லையில் சுவசுதிக் திட்டத்தின் ஒரு பகுதியாக எல்லை சாலை அமைப்பால் இப்பாதை கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டுமானம் அனைத்திந்திய இரயில்வே பொறியாளர்கள் கூட்டமைப்பால் மேற்கொள்ளப்பட்டு 2018 ஆம் ஆண்டு சூன் 7 அன்று திறக்கப்பட்டது. [2].

இரட்டை வழிச் சுரங்கப்பாதையான இது சிக்கிமின் தலைநகர் காங்டாக் மற்றும் சுங்தாங்கிற்கு இடையில் ஓர் அபாயகரமான சாலையைக் கடந்து செல்கிறது. நில சரிவுகள் மற்றும் துப்பாக்கிச் சூடு காரணமாக அடிக்கடி இப்பாதை மூடப்பட்டிருக்கும். சுரங்கப்பாதை ஒளி உமிழும் இருமுனைய விளக்குகளால் ஒளியூட்டப்பட்டுள்ளது. அவசர காலங்களில் வெளியேற ஒரு பாதுகாப்பு வெளியேறும் வழி மற்றும் தீ அணைப்பு வசதிகள் தண்ணீரை சேமிப்பதற்கான ஒரு பெரிய தொட்டி போன்ற பாதுகாப்பு அம்சங்கள் சுரங்கப்பாதையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. [3].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sikkim gets its longest tunnel". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-07-24.
  2. "Sikkim: Theng tunnel on Chungthang-Mangan highway inaugurated". NORTHEAST NOW (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-24.
  3. "Sikkim's Longest Tunnel Inaugurated: Why It's a Big Deal for Locals, Armed Forces!". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-06-08. பார்க்கப்பட்ட நாள் 2020-07-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெங்_சுரங்கப்_பாதை&oldid=3066713" இலிருந்து மீள்விக்கப்பட்டது