தெங்கு ரசாலி அம்சா
தெங்கு ரசாலி அம்சா Tengku Razaleigh Tengku Mohd Hamzah تڠكو غزالي حمزة | |
|---|---|
| மலேசிய நிதி அமைச்சர் | |
| பதவியில் 1976–1984 | |
| முதலீடு, வணிகம், தொழில்துறை அமைச்சர் | |
| பதவியில் 1984–1987 | |
| உலு கிளாந்தான் மக்களவைத் தொகுதி | |
| பதவியில் 1974 – ஆகத்து 1986 | |
| குவா மூசாங் மக்களவைத் தொகுதி | |
| பதவியில் ஆகத்து 1986 – நவம்பர் 2022 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | தெங்கு ரசாலி தெங்கு முகமது அம்சா ஏப்ரல் 13, 1937 பிரித்தானிய மலாயா |
| குடியுரிமை | மலேசியர் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | பாரிசான் நேசனல் (1962–1988; 1996–தற்போது வரையில்) அம்னோ (1962–1988; 1996–தற்போது) |
| துணைவர்(கள்) | நூர் இவோன் அப்துல்லா (தி. 1993; இற. 2015) |
| உறவினர் | தெங்கு அப்துல் அசீஸ் தெங்கு முகமது அம்சா (சகோதரர்) தெங்கு முகமது ரிசாம் தெங்கு முகமது அம்சா தெங்கு அனீஸ் தெங்கு அப்துல் அமீது சுல்தான் ஐந்தாம் முகமது (பேரன்) |
| முன்னாள் மாணவர் | குயின்ஸ் பல்கலைக்கழகம், பெல்பாஸ்ட் |
| பணி | அரசியல்வாதி |
தெங்கு ரசாலி அம்சா (ஆங்கிலம்: Tengku Razaleigh Hamzah; மலாய்: Tengku Razaleigh bin Tengku Mohd Hamzah; ஜாவி: تڠكو غزالي حمزة) (பிறப்பு: 13 ஏப்ரல் 1937) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; மற்றும் 1974-ஆம் ஆண்டு தொடங்கி 2022-ஆம் ஆண்டு வரையில் தொடர்ச்சியாக 48 ஆண்டுகள், மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராகப் பணியாற்றியவர் ஆவார்.[1]
மலேசியாவின் பொருளாதாரத்தில் முக்கியமான அடித்தளங்களை அமைத்தது; மற்றும் மாற்றுக் கொள்கைகளை நிறுவிச் செயல்படுத்தியது போன்ற காரணங்களுக்காக இவர் மலேசியப் பொருளாதார வளர்ச்சியின் தந்தை (Father of Malaysian Economic Development) என்று புகழப்படுகிறார்.[2][3][4] மலாய் அரச குடும்பத்தின் வழித்தோன்றலான இவர், தற்போதைய கிளாந்தான் சுல்தான் ஐந்தாம் சுல்தான் முகமதுவின் கொள்ளு மாமா ஆவார்.
மக்களின் இளவரசர்
[தொகு]மலேசிய நிதி அமைச்சர் (1976–1984); மலேசிய முதலீடு, வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் (1984–1987); ஆசிய வளர்ச்சி வங்கியின் முன்னாள் தலைவர்; இசுலாமிய வளர்ச்சி வங்கியின் முன்னாள் தலைவர்; மலேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸின் நிறுவனர்; உலக வங்கி மற்றும் பன்னாட்டு நாணய நிதியத்தின் 33-ஆவது ஆளுநர்கள் குழுவின் தலைவர் (Board of Governors of the World Bank) ஆகிய பதவிகளை வகித்தவர் ஆவார்.[5]
மலேசிய மக்களிடையே நன்கு அறியப்பட்ட இவருக்கு மக்களின் இளவரசர் (The People's Prince) என்றும்; "கு கித்தா" (Ku Kita) என்றும் புனைப்பெயர்கள் கிடைத்துள்ளன. இவர் கு லி (Ku Li) என்று அன்பாக அழைக்கப்படுகிறார். தெங்கு ரசாலி அம்சா எனும் அவருடைய பெயரின் கடைசி எழுத்துக்களில் இருந்து கு லி எனும் சொல்தொடர் பெறப்பட்டது.
வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]தெங்கு ரசாலி அம்சா, 1937 ஏப்ரல் 13-ஆம் தேதி, கோத்தா பாரு, தெங்கு செரி மகாராஜா தெங்கு முகமது அம்சா இப்னி ராஜா தேவா தெங்கு சைனல் அபிடின் (Tengku Sri Maharaja Tengku Muhammad Hamzah) என்பவருக்கு மகனாகப் பிறந்தார். அவரின் தந்தை ஒரு காலத்தில் கிளாந்தான் மாநில மந்திரி பெசாராக ப்ணி புரிந்தவர் ஆவார். தெங்கு ரசாலி அம்சா, தன்னுடைய தொடக்கநிலைக் கல்வியை ஆங்கில மொழிப் பள்ளிகளில் பெற்றார்.
பின்னர் சுல்தான் இசுமாயில் கல்லூரி; கோலா கங்சார் மலாய் கல்லூரி (Malay College Kuala Kangsar) போன்ற கல்லூரிகளில் உயர்க்கல்வி பெற்றார். கோலாகங்சார் மலாய் கல்லூரியின் உறைவிடப் பள்ளி சூழலை அவர் விரும்பாததால், அந்தக் கல்லூரியை விட்டு வெளியேறி, பேராக் ஈப்போவில் உள்ள ஆண்டர்சன் பள்ளிக்குச் சென்றார்.
உயர்க்கல்வி
[தொகு]1959-இல் பெல்பாஸ்ட் குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். பின்னர் லிங்கன்ஸ் இன்னில் சட்டத்துறையில் பட்டம் பெற்றார். இருப்பினும், அவருடைய தந்தையின் இறப்பிற்குப் பிறகு, அவர் மலாயாவுக்கு திரும்பி வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, மேலும் தன்னுடைய படிப்பைத் தொடர இயலவில்லை.[6][7]
அதன் பின்னர் தெங்கு ரசாலி குடும்பத் தொழிலை ஏற்றுக்கொண்டார், பின்னர் ஐக்கிய மலாய் தேசிய அமைப்பில் (UMNO) சேர்ந்தார்.[6]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகியும்; நீண்டகால நண்பியுமான யுவோன் லா (Yvonne Law) என்பவரை தெங்கு ரசாலி திருமணம் செய்து கொண்டார்.
யுவோன் லா சீனர் இனத்தைச் சேர்ந்தவர். யுவோன் லா, இசுலாத்திற்கு மாறிய பிறகு தன்னுடைய பெயரை நூர் யுவோன் அப்துல்லா என்று மாற்றிக்கொண்டார். திசம்பர் 9, 1993-இல் அவர்களின் திருமணம் நடைபெற்றது. மல்டிபிள் மைலோமா (Multiple Myeloma) எனும் எலும்பு புற்றுநோய் காரணமாக சூன் 5, 2015 அன்று யுவோன் லா உயிர் நீத்தாதார்.[8]
தேர்தல் முடிவுகள்
[தொகு]மாநிலத் தேர்தல்
[தொகு]| ஆண்டு | தொகுதி | வேட்பாளர் | வாக்குகள் | % | எதிரணி | வாக்குகள் | % | ||
|---|---|---|---|---|---|---|---|---|---|
| 1969 | N30 உலு கிளாந்தான் பாராட் | தெங்கு ரசாலி அம்சா (அம்னோ) | 4,061 | 63.57% | இசின் அப்துல்லா (பாஸ்) | 2,327 | 36.43% | ||
பொதுத் தேர்தல்
[தொகு]| ஆண்டு | தொகுதி | வேட்பாளர் | வாக்குகள் | % | எதிரணி | வாக்குகள் | % | |||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| 1974 | P027 உலு கிளாந்தான் மக்களவைத் தொகுதி | தெங்கு ரசாலி அம்சா (அம்னோ) | போட்டியின்றி தேர்வு | |||||||||
| 1978 | தெங்கு ரசாலி அம்சா (அம்னோ) | 10,267 | 64.28% | கைதிர் கதிப் (பாஸ்) | 5,705 | 35.72% | ||||||
| 1982 | தெங்கு ரசாலி அம்சா (அம்னோ) | 15,573 | 61.35% | அசன் மாட் சமான் (பாஸ்) | 9,810 | 38.65% | ||||||
| 1986 | P029 குவா மூசாங் | தெங்கு ரசாலி அம்சா (அம்னோ) | 12,538 | 70.61% | வான் அப்துல் ரகீம் வான் அப்துல்லா (பாஸ்) | 5,219 | 29.39% | |||||
| 1990 | தெங்கு ரசாலி அம்சா (S46) | 18,973 | 76.82% | வான் இசுமாயில் இப்ராகிம் (அம்னோ) | 5,724 | 23.18% | ||||||
| 1995 | தெங்கு ரசாலி அம்சா (S46) | 13,716 | 74.33% | நிக் இசுமாயில் வான் இட்ரிசு (அக்கிம்) | 4,736 | 25.67% | ||||||
| 1995 | தெங்கு ரசாலி அம்சா (S46)1 | 13,144 | 61.02% | உசைன் அகமது (அம்னோ) | 8,398 | 38.98% | ||||||
| 1999 | தெங்கு ரசாலி அம்சா (அம்னோ) | 12,825 | 56.44% | ரசாக் அப்பாஸ் (பாஸ்) | 9,900 | 43.56% | ||||||
| 2004 | P029 குவா மூசாங் | தெங்கு ரசாலி அம்சா (அம்னோ) | 13,570 | 66.06% | சுல்கிப்லி முகமது (பாஸ்) | 6,972 | 33.94% | |||||
| 2008 | தெங்கு ரசாலி அம்சா (அம்னோ) | 14,063 | 59.10% | சுல்கிப்லி முகமது(பாஸ்) | 9,669 | 40.64% | ||||||
| 2013 | தெங்கு ரசாலி அம்சா (அம்னோ) | 21,367 | 62.14% | வான் அப்துல் ரகீம் வான் அப்துல்லா (பாஸ்) | 12,954 | 37.67% | ||||||
| 2018 | தெங்கு ரசாலி அம்சா (அம்னோ) | 19,426 | 48.64% | அப்துல்லா உசைன் (பாஸ்) | 15,513 | 38.84% | ||||||
| மொகத் நோர் உசின் (பெர்சத்து) | 4,997 | 12.51% | ||||||||||
| 2022 | தெங்கு ரசாலி அம்சா (அம்னோ) | 21,663 | 44.78% | முகமது அசிசி அபு நயிம் (பெர்சத்து) | 21,826 | 45.12% | ||||||
| அசாருன் அஜி(பி.கே.ஆர்) | 4,517 | 9.34% | ||||||||||
| சம்சு அதாபி மாமாத் (பெஜுவாங்) | 371 | 0.77% | ||||||||||
குவா மூசாங் தேர்தல் முடிவுகள்
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ∆% | |
|---|---|---|---|---|---|
| மலேசிய இசுலாமிய கட்சி | முகமது அசிசி அபு நாயிம் (Mohd Azizi Abu Naim) |
21,826 | 45.12% | + 6.28% | |
| பாரிசான் நேசனல் | தெங்கு ரசாலி அம்சா (Tengku Razaleigh Hamzah) |
21,663 | 44.78% | - 3.82% ▼ | |
| பாக்காத்தான் அரப்பான் | அசாருன் உஜி (Asharun Uji) |
4,517 | 9.34% | - 3.17% ▼ | |
| தாயக இயக்கம் | சம்சு அப்தபி மாமத் (Samsu Abdabi Mamat) |
371 | 0.77% | + 0.77% | |
| செல்லுபடி வாக்குகள் (Valid) | 48,377 | 100% | |||
| செல்லாத வாக்குகள் (Rejected) | 743 | ||||
| ஒப்படைக்காத வாக்குகள் (Unreturned) | 549 | ||||
| வாக்களித்தவர்கள் (Turnout) | 49,699 | 68.86% | - 9.59% ▼ | ||
| பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) | 70,254 | ||||
| பெரும்பான்மை (Majority) | 163 | 0.34% | - 19.46% ▼ | ||
| மலேசிய இசுலாமிய கட்சி | வெற்றி பெற்ற கட்சி (Hold) | ||||
| சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[16] | |||||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ku Li now longest-serving MP The Star
- ↑ British Business in Post-Colonial Malaysia, 1957-70 Neo-colonialism Or Disengagement?, Nicholas J. White, Page 78, Routledge
- ↑ Malaysiaís foreign policy the first fifty years Alignment neutralism Islamism 1957-70: Neo-colonialism Or Disengagement?, Johan Saravanamuttu, Page 141, Institute of Southeast Asian Studies
- ↑ The Straits Times, 7 July 1975, Page 10, National Library, Singapore
- ↑ "President Carter's speech at the 33rd Annual Meetings of IBRD and IMF Board of Governors".
- ↑ 6.0 6.1 Tan, Chee Khoon & Vasil, Raj (ed., 1984). Without Fear or Favour, p. 45. Eastern Universities Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 967-908-051-X.
- ↑ "Pulang Dari England Kerana Ayah Sakit". Berita Harian (Singapore: Straits Times Singapore): p. 5. 22 February 1962. http://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/beritaharian19620222-1.2.48.aspx?q=razaleigh&mode=advanced&f_df=19620101&f_dt=19621231&page=1&sort=relevance&token=razaleigh&sessionid=daea94638c1a42aa863694217932aef6.
- ↑ "Ku Li's wife passes away - The Rakyat Post". The Rakyat Post. Retrieved 2015-10-18.
- ↑ "Kelantan Dalam Sejarah: Kerana Cina S'pura, Menteri Besar PAS Dan PM Bersumpah Di Masjid, Menjelang 13 Mei 1969". sokmo.net.
- ↑ "Berita Wilayah". bernama.com.
- ↑ "Pilihan Raya Umum Malaysia". pmo.gov.my. Archived from the original on 18 திசம்பர் 2014.
- ↑ "Keputusan Pilihan Raya Umum Parlimen/Dewan Undangan Negeri" (in மலாய்). Election Commission of Malaysia. Retrieved 4 February 2017. Percentage figures based on total turnout.
- ↑ "Malaysia General Election". undiinfo Malaysian Election Data. Malaysiakini. Retrieved 4 February 2017. Results only available from the 2004 election.
- ↑ {{cite web|url=https://election.thestar.com.my/%7Ctitle=The Star Online GE14|work=[[The Star (Malaysia)|access-date=24 May 2018}} Percentage figures based on total turnout.
- ↑ "The Star Online GE15 Kelantan". The Star (Malaysia). Retrieved 10 July 2022.
- ↑ "MySPRSemak". mysprsemak.spr.gov.my. Retrieved 1 June 2024.
வேறு மேற்கோள்கள்
[தொகு]- Kamarudin, Raja Petra (9 November 2005). "The Anwar Factor". Malaysia Today.
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் Tengku Razaleigh Hamzah தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.- Tengku Razaleigh Hamzah's Official Site பரணிடப்பட்டது 6 ஆகத்து 2020 at the வந்தவழி இயந்திரம் updated with speeches, news, press releases.
- Tengku Razaleigh Hamzah's Official Facebook Page updated with public addresses and events
- யூடியூபில் Tengku Razaleigh Hamzah காணொளி video archives of speeches, dialogues, Q&A sessions. Also included videos of Malaysia's past prime ministers