தெக்கினீசியம்(IV) ஆக்சைடு
| பெயர்கள் | |
|---|---|
வேறு பெயர்கள்
| |
| இனங்காட்டிகள் | |
| 12036-16-7 | |
| ChEBI | CHEBI:26864 |
| ChemSpider | 5256775 |
Gmelin Reference
|
873611 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 6857437 |
| |
| பண்புகள் | |
| TcO2 | |
| வாய்ப்பாட்டு எடை | 130.00 கி/மோல் |
| தோற்றம் | கருப்பு நிறத் திண்மம் |
| அடர்த்தி | 6.9 கி/செ.மீ3[1] |
| உருகுநிலை | 1,100 °C (2,010 °F; 1,370 K)[3] (பதங்கமாகும்) |
| கரையாது | |
| கரைதிறன் | அமிலத்தில் சிறிதளவு கரையும் (இருநீரேற்று)[2] |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | MoO2 போன்ற சமகட்டமைப்பு[1] |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | தெக்கினீசியம்(IV) குளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தெக்கினீசியம்(IV) ஆக்சைடு (Technetium(IV) oxide) என்பது TcO2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தெக்கினீசியம் ஈராக்சைடு, டெக்னீசியம் டையாக்சைடு என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. TcO2·2H2O என்ற இருநீரேற்றாக உருவாகும்போது தெக்கினீசியம் ஐதராக்சைடு என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு கதிரியக்கப்பண்பு கொண்ட கருப்பு நிறத் திடப்பொருளாகும். காற்றில் மெதுவாக ஆக்சிசனேற்றம் அடையும்.[1][4]
தயாரிப்பு
[தொகு]தெக்கினீசியம்(IV) ஆக்சைடு முதன்முதலில் 1949 ஆம் ஆண்டு அம்மோனியம் பெர்டெக்னிடேட்டின் கரைசலை அம்மோனியம் ஐதராக்சைடுடன் சேர்த்து மின்னாற்பகுப்பு செய்து உற்பத்தி செய்யப்பட்டது. இந்த முறை மாலிப்டினம் மற்றும் இரேனியத்திலிருந்து தெக்கினீசியத்தைப் பிரிக்கப் பயன்படுகிறது.[1][4][5]தற்போது தெக்கினீசியம்(IV) ஆக்சைடை உற்பத்தி செய்வதற்கு மிகவும் திறமையான தயாரிப்பு வழிகள் உள்ளன. அம்மோனியம் பெர்டெக்னிடேட்டை துத்தநாக உலோகம் ஐதரோகுளோரிக் அமிலம், வெள்ளீய(II) குளோரைடு, ஐதரசீன், ஐதராக்சிலமீன், அசுகார்பிக் அமிலம் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒடுக்கவினை மூலம் இதை தயாரிக்கலாம்.[4] பொட்டாசியம் அறுகுளோரோடெக்னினேட்டின் நீராற்பகுப்பு மூலம் [3] அல்லது ஒரு மந்த வளிமண்டலத்தில் 700 °செல்சியசு வெப்பநிலையில் அம்மோனியம் பெர்டெக்னிட்டேட்டின் சிதைவு மூலம் தயாரிக்கலாம்:[1][6]
- 2 NH4TcO4 → 2 TcO2 + 4 H2O + N2
கடைசி முறையைத் தவிர மற்ற அனைத்து முறைகளும் இருநீரேற்றை உருவாக்குவதற்கு வழிவகுத்தன. இந்த சேர்மத்தை உற்பத்தி செய்வதற்கான மிக நவீன முறை அம்மோனியம் பெர்டெக்னிடேட்டை சோடியம் டைதயோனைட்டுடன் வினைபுரியச் செய்வதாகும்.[7]
பண்புகள்
[தொகு]இருநீரேற்றின் 300 °செல்சியசில் நீரிழப்பு தெக்னீசியம் டை ஆக்சைடாக மாறுகிறது, மேலும் மந்த வளிமண்டலத்தில் 1,100 °செல்சியசு வெப்பநிலையில் பதங்கமாகும். ஆக்சிசன் இருந்தால், இது ஆக்சினுடன் வினைபுரிந்து 450 °செல்சியசு வெப்பநிலையில் தெக்கினீசியம்(VII) ஆக்சைடை உருவாக்கும். தண்ணீர் இருந்தால், தெக்கினீசியம்(VII) ஆக்சைடு தண்ணீருடன் வினைபுரிவதன் மூலம் பெர்டெக்னீடிக் அமிலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
தெக்கினீசியம் டை ஆக்சைடை சோடியம் ஐதராக்சைடு போன்ற ஒரு காரத்துடன் வினைபுரியச் செய்தால், அது ஐதராக்சோடெக்னீடேட்(IV) அயனியை உருவாக்குகிறது. இது கார ஐதரசன் பெராக்சைடு, செறிவூட்டப்பட்ட நைட்ரிக் அமிலம், புரோமின் அல்லது நாஅன்கிணைய சீரியம் போன்ற பல வழிகளில் பெர்டெக்னீடிக் அமிலமாக எளிதில் ஆக்சிசனேற்றப்படுகிறது.
தெக்கினீசியம்(IV) ஆக்சைடின் கரைதிறன் மிகக் குறைவாகும். கரைதிறன் 3.9 μகிராம்/லிட்டர் என கணக்கிடப்பட்டுள்ளது. தெக்கினீசியம் டை ஆக்சைடு நீரில் கரைக்கப்படும் போது 1.5 அளவுக்கு கீழான காரகாடித்தன்மைச் சுட்டெண் அளவில் TcO2+ சேர்மமும், TcO(OH)+ சேர்மம் 1.5 முதல் 2.5 என்ற காரகாடித்தன்மைச் சுட்டெண் அளவிலும், TcO(OH)2 சேர்மம் 2.5 முதல் 10.9 என்ற காரகாடித்தன்மைச் சுட்டெண் அளவிலும், TcO(OH)–3 அளவுக்கு மேலும் காணப்படுகின்றன. இயூமிக் அமிலம் மற்றும் எத்திலீன் டையமீன் டெட்ரா அசிட்டிக் அமிலம் போன்ற பல்வேறு கரிம ஈந்தணைவிகளைச் சேர்ப்பதன் மூலமோ அல்லது ஐதரோகுளோரிக் அமிலத்தைச் சேர்ப்பதன் மூலமோ கரைதிறன் பாதிக்கப்படும். தெக்கினீசியம்(IV) ஆக்சைடு மண்ணில் வெளியிடப்பட்டால் இது ஒரு பிரச்சனையாக இருக்கலாம், ஏனெனில் மண்ணின் கரைதிறனும் அதிகரிக்கும்.[8]
அமில நிலைகளில் தெக்கினீசியம் டை ஆக்சைடு மின்னாற்பகுப்பு செய்யப்பட்டால், பின்வரும் வினை நிகழ்கிறது:
TcO2·2H2O → TcO–
4 + 4 H+ + 3 e–
இந்த வினைக்கு அளவிடப்படும் மின்முனை ஆற்றல் −837.2±10.0 கிலோயூல்/மோல் ஆகும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 A. G. Sharpe; H. J. Emeléus (1968). Advances in Inorganic Chemistry and Radiochemistry. Elsevier Science. p. 21. ISBN 9780080578606.
- ↑ 2.0 2.1 J. A. Rard (1983) (in en). Critical review of the chemistry and thermodynamics of technetium and some of its inorganic compounds and aqueous species. U.S. Department of Energy Office of Scientific and Technical Information. doi:10.2172/5580852. https://www.osti.gov/biblio/5580852. பார்த்த நாள்: 4 November 2022.
- ↑ 3.0 3.1 C. M. Nelson; G. E. Boyd; Wm. T. Smith Jr. (1954). "Magnetochemistry of Technetium and Rhenium" (in en). Journal of the American Chemical Society (ACS Publications) 76 (2): 348–352. doi:10.1021/ja01631a009.
- ↑ 4.0 4.1 4.2 Edward Anders (1960). THE RADIOCHEMISTRY OF TECHNETIUM. U.S. Department of Energy Office of Scientific and Technical Information. p. 8. doi:10.2172/4073069. https://www.osti.gov/biblio/4073069. பார்த்த நாள்: 4 November 2022.
- ↑ L. B. Rogers (1949). "Electroseparation of Technetium from Rhenium and Molybdenum" (in en). Journal of the American Chemical Society 71 (4): 1507–1508. doi:10.1021/ja01172a520.
- ↑ Bradley Covington Childs (2017). Volatile Technetium Oxides: Implications for Nuclear Waste Vitrification. UNLV Theses, Dissertations, Professional Papers, and Capstones (Thesis). doi:10.34917/10985836.
- ↑ Nancy J. Hess; Yuanxian Xia; Dhanpat Rai; Steven D. Conradson (2004). "Thermodynamic Model for the Solubility of TcO2·xH2O(am) in the Aqueous Tc(IV) – Na+ – Cl− – H+ – OH− – H2O System" (in en). Journal of Solution Chemistry 33 (2): 199–226. doi:10.1023/B:JOSL.0000030285.11512.1f. https://archive.org/details/sim_journal-of-solution-chemistry_2004-02_33_2/page/n102.
- ↑ Baohua Gu; Wenming Dong; Liyuan Liang; Nathalie A. Wall (2011). "Dissolution of Technetium(IV) Oxide by Natural and Synthetic Organic Ligands under both Reducing and Oxidizing Conditions" (in en). Environmental Science & Technology 45 (11): 4771–4777. doi:10.1021/es200110y. பப்மெட்:21539349. Bibcode: 2011EnST...45.4771G.