தூ. கோ. ராகவாச்சாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூ. கோ. ராகவாச்சாரி
T. G. Raghavachari
பிறப்புதூத்துக்குடி கோவிந்தாச்சாரி ராகவாச்சாரி
மற்ற பெயர்கள்ஆச்சார்யா
பணி
 • திரைப்பட படைப்பாளி
 • வழக்கறிஞர்
வாழ்க்கைத்
துணை
இராஜலட்சுமி
பிள்ளைகள்T. R. Govindachari

டிஜிஆர் மற்றும் ஆச்சார்யா என்ற புனைபெயர்களால் அறியப்பட்ட தூத்துக்குடி கோவிந்தாச்சாரி ராகவாச்சாரி 1940கள் மற்றும் 1950களில் தமிழகத் திரைப்படத்துறையில் தீவிரமாக இயங்கிய ஒரு இந்திய திரைப்பட படைப்பாளியும் வழக்கறிஞரும் ஆவார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

டிஜிஆர் என்று அழைக்கபட்ட, தூத்துக்குடி கோவிந்தாச்சாரி ராகவாச்சாரி ஒரு ஐயங்கார் குடும்ப்பதில் பிறந்தவர். சமசுகிருதத்திலும், ஆங்கிலத்திலும் அறிஞரான இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார், மேலும் நுண்கலைகளில் ஆழ்ந்த அறிவைப் பெற்றிருந்தார்.[1][2] ராகவாச்சாரி ராஜலட்சுமியை மணந்தார், இந்த இணையருக்கு டி. ஆர். கோவிந்தாச்சாரி என்ற மகன் இருந்தார்.[3][4]

தொழில்[தொகு]

அந்த நேரத்தில் இந்தியாவில் திரைப்படம் விலக்கப்பட்ட ஒன்றாகக் கருதப்பட்டதால், ராகவாச்சாரி அநாமதேயமாகவும், அங்கீகாரம் பெறாமலும் படங்களில் பணியாற்றினார். பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு ரத்னவல்லி (1935) திரைப்படத்திற்கு இவர் திரைக்கதை எழுதினார். ரிஷ்யசிருங்கர் (1941) திரைப்படத்தை எழுதி, இயக்கினார், இருப்பினும் இயக்கிய பெருமை தயாரிப்பாளர் எஸ். சௌந்தரராஜனுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. ராகவாச்சாரி பணிபுரிந்த முதல் திரைப்படம் ஜெமினி ஸ்டூடியோவின் மங்கம்மா சபதம் (1943), எஸ். எஸ். வாசனால் தயாரிக்கப்பட்டது, இதில் இவர் "ஆச்சார்யா" என்ற பெயரால் குறிப்பிடப்பட்டார். [5] பின்னர் இவர் மற்றொரு ஜெமினி திரைப்படமான சந்திரலேகாவை (1948) இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார், ராகவாச்சாரி படத்தின் பெரும்பகுதியை படமாக்கிய நிலையில், வாசனுடனான ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படத்தில் இருந்து விலகினார். இதனால் வாசனே படத்தை முடித்தார். இருந்தபோதிலும், திரைப்படம் வெற்றியடைந்தது, மேலும் இருவரும் அபூர்வ சகோதரர்கள் (1949) படத்திற்காக மீண்டும் இணைந்தனர், அதில் ராகவாச்சாரி மீண்டும் "ஆச்சார்யா" என்ற புனைபெயரில் இயங்கினார். [6] பின்னர் இவர் மாடர்ன் தியேட்டர்சுக்காக கல்யாணி (1952) என்ற படத்தை இயக்கத் தொடங்கினார், ராகவாச்சாரி காசநோயால் பாதிக்கப்பட்டதால் பின்னர் ஒளிப்பதிவாளர் எம். மஸ்தான் இயக்கும் பொறுப்பேற்றார்; இருவரும் இயக்குநர் என்ற பெருமையை அப்படத்தில் பெற்றனர்.[7][8] ராகவாச்சாரி, ஆர் .எம். கிருஷ்ணசாமி இயக்கிய டாக்டர் சாவித்திரி (1955) என்ற படத்தையும் இணைந்து எழுதினார்.[9]

நோயும் இறப்பும்[தொகு]

ராகவாச்சாரி உடல்நலக் குறைவால் திரையுலகில் இருந்து ஒதுங்கினார். இவர் 1960 களின் முற்பகுதியில் காசநோயால் பாதிக்கப்பட்டு அதனால் இறந்தார். [6]

மேற்கோள்கள்[தொகு]

 1. Guy 1997, ப. 159.
 2. Randor Guy (5 October 2013). "The forgotten heroes". தி இந்து இம் மூலத்தில் இருந்து 18 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150918010848/http://www.thehindu.com/features/cinema/the-forgotten-heroes/article5204125.ece. 
 3. Bhatnagar Laureates, 1958–91. Human Resource Development Group, Council of Scientific & Industrial Research. 1992. p. 132.
 4. Guy 1997, ப. 161.
 5. Guy 1997, ப. 160.
 6. 6.0 6.1 Guy 1997, ப. 163.
 7. Randor Guy (21 March 2012). "Kalyani 1952". தி இந்து இம் மூலத்தில் இருந்து 30 March 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200330082203/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/kalyani-1952/article3021203.ece. 
 8. கல்யாணி (PDF) (song book). Modern Theatres. 1952. பார்க்கப்பட்ட நாள் 17 February 2022.
 9. Randor Guy (4 August 2012). "Blast From The Past | Doctor Savithri: 1955". தி இந்து இம் மூலத்தில் இருந்து 26 September 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130926155530/http://www.thehindu.com/news/cities/chennai/chen-columns/doctor-savithri-1955/article3726984.ece. 

நூல்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூ._கோ._ராகவாச்சாரி&oldid=3847926" இலிருந்து மீள்விக்கப்பட்டது