தூவானத் தும்பிகள்
| தூவானத் தும்பிகள் | |
|---|---|
சந்தோஷசு வடிவமைத்த சுவரொட்டி | |
| இயக்கம் | பி. பத்மராசன் |
| தயாரிப்பு | பி. ஸ்டான்லி |
| கதை | பி. பத்மராசன் |
| இசை | பி. பத்மராசன் |
| நடிப்பு | மோகன் லால் சுமலதா பார்வதி செயராம் |
| ஒளிப்பதிவு | அசயன் வின்சன்ட் செயனன் வின்சன்ட் |
| படத்தொகுப்பு | பி.லால் வி. டி. விசயன் (இணை) |
| கலையகம் | சித்தாரா பிக்சர்சு |
| விநியோகம் | காந்திமதி பில்ம்சு |
| வெளியீடு | 31 சூலை 1987 |
| ஓட்டம் | 151 minutes |
| நாடு | இந்தியா |
| மொழி | மலையாளம் |
தூவானத் தும்பிகள் என்பது 1987-ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழி காதல் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை பி. பத்மராஜன் எழுதி இயக்கினார். இது அவர் எழுதிய புதினமான உதகப்போலயே என்பதை அடிப்படையாகக் கொண்டது. இத்திரைப்படம் வணிக அடிப்படையில் தோல்வியடைந்த போதிலும், இன்றும் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. இது ஐ. பி. என் லைவ் வெளியிட்ட என்றும் சிறந்த இந்திய திரைப்படங்களின் பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்தது. இத்திரைப்படமானது சிறந்த இசை, பாடல்கள், உரையாடல்கள், கதாபாத்திரங்கள், விரிவான திரைக்கதை, மோகன்லால் மற்றும் சுமலதாவின் நடிப்பு ஆகியவைகளுக்காகப் பரவலாக அறியப்படுகிறது. இத்திரைப்படத்தில் மழை என்பது ஒரு முக்கிய கருப்பொருளாகவும் கிட்டத்தட்ட ஒரு கதாபாத்திரமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.[1][2][3][4][5][6][7][8][9]
கதைச்சுருக்கம்
[தொகு]ஜெயகிருஷ்ணன் மணமாகாத ஒரு இளைஞர். அவர் ஒன்றுக்கொன்று முரணான இரட்டை வாழ்க்கையை வாழ்கிறார். ஒரு புறம் நகரத்தில் உள்ள தனது நண்பர்களுடன் வாழ்க்கையை கொண்டாடும் ஒரு துணிச்சலான பையனாக வாழ்கிறார். இன்னொரு புறம் தனது தாயுடனும் சகோதரியுடனும் அவர்களின் கிராமத்தில் சிக்கனமான, குடும்பப் பொறுப்புள்ள ஒரு மனிதனாக வாழ்கிறார் . அவரது இரட்டை வாழ்க்கை, கிளாரா, ராதா ஆகிய இரண்டு பெண்களை எப்படி காதலிக்கிறார், அவர்களுக்கு இடையே முடிவெடுப்பதில் அவருக்கு ஏற்படும் சிரமம் ஆகியவற்றைப் பற்றிய படம் இது.
கதாப்பாத்திரங்கள்
[தொகு]- மன்னாரத்தோடி ஜெயகிருஷ்ணனனாக மோகன்லால்
- கிளாராவாக சுமலதா
- ராதாவாக பார்வதி
- ரிஷி (ஜெயகிருஷ்ணனின் நண்பர்) வேடத்தில் அசோகன்
- தங்கலாக பாபு நம்பூதிரி
- ராதாவின் சகோதரர் மாதவனாக சிறீநாத்
- ஜெயகிருஷ்ணனின் தாயார் லட்சுமியாக சுகுமாரி
- ரவுன்னி அல்லது ராமனுன்னி நாயராக செகதி சிறீகுமார்
- ராதாவின் தந்தையாக சுகுமாரனாக சங்கரதி
- மேத்யூ சோசப்பாக எம். ஜி. சோமன் (கிளாராவின் கணவராக கேமியோ)
- ஜெயகிருஷ்ணனின் சகோதரியான மாலினியாக சுலக்சனா
- ராதாவின் உறவினரான ரஞ்சினியாக செயலிலிதா.
- சாந்தகுமாரி
- பாபுவாக அலெக்சு மேத்யூ (தேவமாதா பேருந்து நிறுவனத்தின் உரிமையாளர்)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Experiments in Malayalam cinema". 29 August 2018. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/photo-features/experiments-in-malayalam-cinema/photostory/29715180.cms.
- ↑ "Wants to find out anything on Malayalam movies? cinema@weblokam.com". www.weblokam.com. Retrieved 2025-05-22.
- ↑ "നിർമാണം പാതിവഴിയിൽ നിലച്ച 'തൂവാനത്തുമ്പികൾ'; സഹായമെത്തിച്ചത് മോഹൻലാൽ".
- ↑ "'ബഹളക്കാർക്കിടയിൽ നിന്ന് അയാൾ ഓടി വന്ന് ഷർട്ടിൽ കയറിപിടിച്ചതോടെ മോഹൻലാൽ ഞെട്ടിപ്പോയി'".
- ↑ "ജയകൃഷ്ണനും ക്ലാരയും @ 30".
- ↑ "Hotstar, Netflix, Amazon: Here are 10 movies to check out this Valentine's Day". 14 February 2020.
- ↑ . 24 January 2020. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/remembering-mastero-filmmaker-padmarajan-with-his-popular-love-stories/articleshow/73554198.cms.
- ↑ "ആ അനുഭവത്തെ ക്ലാരയെന്നു വിളിച്ച് അവർ ഒരുപാട് മഴകൾ നനഞ്ഞു; പത്മരാജനെ ഓർക്കുമ്പോൾ".
- ↑ "ക്ലാരയുടെ ഓർമ്മകൾക്കൊപ്പം ഇന്നും മഴ പെയ്യുന്നുണ്ട്, തൂവാനത്തുമ്പികൾക്ക് ഇന്ന് 33 വയസ്".