தூவல் பாசனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாசன நீரினைப் பயிர்கள் மீது ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இருந்து தூவும் முறைக்கு தூவல் பாசனம் என்று பெயர். உலோகக் குழாய்களுடன் சுழலும் தெளிப்புக் குழாய்கள் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் அமைக்கப்பட்டு நீரை மிகுந்த அழுத்தத்துடன் செலுத்தும்போது தெளிப்பான்கள் சுழன்று நீரை பனிபோலவோ அல்லது மழைத்துளி போலவோ ஒரே சீராக தூவி நிலத்தை நனைக்கிறது.

 இப்பாசன முறை காப்பி, தேயிலைத் தோட்டங்கள் மற்றும் புல் தரைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தூவல் பாசனத்தின் முக்கியத்துவம்:

1) காப்பி பூக்கும் பருவத்தில் கூடுதல் பாசனமாக பயன்படுகிறது. 2) நிலச்சரிவு, வெப்பம், உறைபனி உள்ள பகுதிகளில் இம்முறை ஏற்றது.

 எந்த பயிர்கள் அடிக்கடி மழையை விரும்புகிறதோ அப்பயிர்களு்ககு திடீரென் ஏற்படும் வறட்சியிலிருந்து காப்பாற்ற இம்முறை உதவுகிறது. எனவே இதனை 'கூடுதல் பாசனம்' என்றும் அழைக்கப்படுகிறது.

தூவல் பாசனத்தின் நிறைகள்:

1) நாற்றங்கால்களுக்கு இது மிகச் சிறந்த பாசன முறையாகும் 2) எவ்வித நிலச்சரிவான பகுதிக்கும் இப்பாசன முறை ஏற்றது. 3) உறைபனி, கடும் வெப்பம் போன்றவற்றிலிருந்து பயிரைக் காக்க உதவுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூவல்_பாசனம்&oldid=2376405" இருந்து மீள்விக்கப்பட்டது