தூல உடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தூல உடல் அல்லது பெளதீக உடல் என்று அழைக்கபடுவது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம் ஆகிய ஐம்பூதங்களால் ஆன பெளதீக உடல் ஆகும். இந்திய யோக சாஸ்திரங்களில் மூவுடல்கள் என அழைக்கப்படும் உடல்களில் இதுவும் ஒன்று. முறையே தூல உடல், (Physical Body) , சூக்கும உடல் (Astral Body), காரண உடல் ( (Causal Body) என மூன்று வகைப்படும். இதற்கான ஆதாரங்களை திருமூலரின் திருமந்திரங்களில் பாடல் எண் 2122ல் "காயப்பை யொன்று சரக்கு பலவுள" எனத் தொடங்கும் பாடல் மூலம் அறியலாம்.

தூல உடலை திருமூலர் காயப்பை என உவமை படுத்துகிறார். காயம்= உடல்; பை= கொள்கலம் என்ற இரு வார்த்தைகளை இணைத்து காயப்பை என கூறுகிறார்.

சான்றுகள்[தொகு]

திருமூலர் திருமந்திரம்

மேற்கோள்கள்[தொகு]

காயப்பை ஒன்று சரக்குப் பலவுள மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பையுண்டு காயப்பைக்கு உள்நின்ற கள்வன் புறப்பட்டால் மாயப்பை மண்ணா மயங்கிய வாறே. திருமந்திரம் 2122

இவற்றையும் காண்க[தொகு]

மூவுடல் தத்துவம்

சூக்கும உடல்

காரண உடல்

உசாத்துணை[தொகு]

திருமூலர் திருமந்திரம் பாடல் 2122 ல் தூல உடல் பற்றிய சான்றுகளை காணலாம்

ஆன்மா- தூல உடல் - ஞான சபை விளக்கம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூல_உடல்&oldid=2776987" இருந்து மீள்விக்கப்பட்டது