உள்ளடக்கத்துக்குச் செல்

தூல் கா பூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூல் கா பூல்
இயக்கம்யஷ் சோப்ரா
தயாரிப்புபி. ஆர். சோப்ரா
கதைமுக்ராம் சர்மா
இசைஎன். தத்தா
சாகிர் லூதியான்வி (பாடல்கள்)
நடிப்புமாலா சின்ஹா
இராஜேந்திர குமார்
நந்தா
மன்மோகன் கிருஷ்ணா
அசோக் குமார்
ஒளிப்பதிவுதரம் சோப்ரா
படத்தொகுப்புபிராண் மெஹ்ரா
விநியோகம்பி. ஆர். ஃபிலிம்ஸ்
வெளியீடு4 டிசம்பர் 1959 (1959-12-04)
ஓட்டம்153 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தி

தூள் கா பூல் (Dhool Ka Phool; மொ.பெ.*தூசியின் மலர்*) என்பது 1959 ஆம் ஆண்டில் வெளியான ஓர் இந்திய இந்தி மொழிக் காதல் நாடகத் திரைப்படமாகும். பி. ஆர். சோப்ரா தயாரிப்பில் வெளியான இத்திரைப்படம், அவருடைய தம்பியான யஷ் சோப்ரா இயக்குநராக அறிமுகமான முதல் திரைப்படமாகும். இதற்கு முன்பு பி. ஆர். சோப்ராவின் *நயா தவ்ர்* திரைப்படத்தில் அவர் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். இத்திரைப்படத்தில் மாலா சின்ஹா, இராஜேந்திர குமார், நந்தா, மன்மோகன் கிருஷ்ணா மற்றும் அசோக் குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1]

இப்படத்தில் திருமணத்திற்கு புறம்பாகப் பிறந்த குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கும் அப்துல் ரஷீத் என்ற முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக, மன்மோகன் கிருஷ்ணா சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றார். 7-ஆவது பிலிம்பேர் விருதுகள் விழாவில் மாலா சின்கா சிறந்த நடிகைக்கான பிரிவிலும், முக்ராம் சர்மா சிறந்த கதைக்கான பிரிவிலும் பரிந்துரைகளைப் பெற்றனர். இத்திரைப்படம் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் அதன் புகழ்பெற்ற "து கான் இன்கான் பனேகா" என்ற பாடலுக்காக இன்றும் பெரிதும் அறியப்படுகிறது.[2][3][4]

கருப்பொருள்

[தொகு]

இதற்கடுத்து யஷ் சோப்ரா இயக்கிய *தர்மபுத்ரா* (1961) திரைப்படத்தில் இக்கருப்பொருள் தலைகீழாக மாற்றியமைக்கப்பட்டது. அதில் ஒரு இந்து குடும்பம் முஸ்லிம் குழந்தையை வளர்ப்பதாகக் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது.[5]

விருதுகளும் பரிந்துரைகளும்

[தொகு]

7-ஆவது பிலிம்பேர் விருதுகள் விழாவில் இத்திரைப்படம் ஒரு விருதை வென்றதுடன், இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது:[6]

ஆண்டுபரிந்துரைக்கப்பட்டவர்விருதுமுடிவு
1960 தன்மோகன் கிருஷ்ணா சிறந்த துணை நடிகர் வெற்றி
மாலா சின்ஹா சிறந்த நடிகை பரிந்துரை
முக்ராம் சர்மா பிலிம்பேர் சிறந்த கதை விருது பரிந்துரை

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rajadhyaksha, Ashish; Willemen, Paul (1999). Encyclopedia of Indian Cinema. Routledge. p. 358. ISBN 978-1-135-94325-7.
  2. "Just a moment…". theprint.in. Retrieved 2026-07-30.
  3. "4 டிசம்பர் 1959 அன்று வெளியான திரைப்படம் 50 லட்சத்தில் இரண்டு கோடி வசூலித்தது; திருமணமாகாத தாய் மற்றும் முஸ்லிம் தந்தையின் கதை சாதனைகளை முறியடித்தது". என்டிடிவி இந்தியா (in இந்தி). 4 December 2025. Retrieved 30 July 2026.
  4. "தூல் கா பூல் (1959) - செய்திகள்". ஐஎம்டிபி (in ஆங்கிலம்). Retrieved 30 July 2026.
  5. "Nehru's vision shaped many Bollywood golden oldies". The Times of India. 16 November 2009 இம் மூலத்தில் இருந்து 13 May 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130513230400/http://articles.timesofindia.indiatimes.com/2009-11-16/delhi/28068204_1_secularism-yash-chopra-big-dams.
  6. "The Nominations - 1959". Filmfare (The Times Group) இம் மூலத்தில் இருந்து 29 Oct 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071029231224/http://filmfareawards.indiatimes.com/articleshow/articleshow/366382.cms.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூல்_கா_பூல்&oldid=4615958" இலிருந்து மீள்விக்கப்பட்டது