உள்ளடக்கத்துக்குச் செல்

தூலபத்திரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வார்ப்புரு:Use Indian English

தூலபத்திரர்
கமல்டா, பாட்னாவிலுள்ள தூலபத்திர சமணக் கோவில்
சுய தரவுகள்
சமயம்சமணம்
பெற்றோர்
  • சகடால (தந்தை)
உட்குழுசுவேதாம்பரர்
தூலபத்திரர்

தூலபத்திரர் (பொ.ஊ.மு. 297-198) என்பவர் சமணத்தின் சுவேதாம்பரப் பிரிவை நிறுவியவராவார். பொ.ஊ.மு. நான்காம் அல்லது மூன்றாம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசில் நிலவிய 12-ஆண்டு நீண்ட பஞ்சத்தின் போது இப்பிரிவு நிறுவப்பட்டது. இவர் பத்திரபாகு மற்றும் சம்பூதவிசயர் ஆகியோரின் சீடராவார். இவரது தந்தையான சகடால என்பவர், சந்திர குப்த மௌரியரின் வருகைக்கு முன்னரான நந்தப் பேரரசில் அமைச்சராக இருந்தார். இவரது சகோதரர் அரசின் முதன்மை அமைச்சராக ஆகிய வேளையில், தூலபத்திரர் சமணத் துறவியானார். ஏமச்சந்திரரால் 12-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சமண நூலில் இவரைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

வாழ்வு[தொகு]

தூலபத்திரர், தன நந்தனின் அமைச்சரான சகடாலவின் மகனும், சிறீகயனின் உடன்பிறப்புமாவார்.[1][2] மரபு முறைப்படி இவரது காலம் பொ.ஊ.மு. 297 இலிருந்து 198 வரையாகும்.[1] தன நந்தனின் அரசவை நாட்டியக்காரியான ரூப்கோசாவைக் காதலித்து அவளோடு வாழ்ந்து வந்தார்.[1][2] தனது தந்தையின் இறப்புக்குப் பின் அமைச்சுப் பொறுப்பை மறுதலித்து சமணத் துறவியானார்.[3] இவரது சகோதரர், பிற்காலத்தில் நந்தப் பேரரசின் முதன்மை அமைச்சரானார்.[4][2] இவர் சம்பூதவிசயர் (பொ.ஊ.மு. 347-257) மற்றும் பத்திரபாகு (பொ.ஊ.மு. 322-243) ஆகியோரின் சீடரானார்.[5][2][6] இவர் 12 ஆண்டுகள் துறவு வாழ்க்கை வாழ்ந்தார்.[4] இவர் தனது சாதுர்மாச காலப்பகுதியை ரூபகோசாவின் வீட்டில் கழித்தார். இக்காலப்பகுதியில் ரூபகோசா இவரைத் தமது துறவு வாழ்வினின்றும் வழுவச்செய்து தன்வசப்படுத்த முயன்று தோற்றுப்போனாள்.[4] அதற்கு மாறாக, தூலபத்திரர் அவளை சிராவிகையாக (சமண இல்லறப் பெண்) உறுதிமொழி ஏற்கச்செய்தார்.[4]

இவர் 14 பூர்வங்களையும் (முன்னைப் புனிதநூல்) பத்திரபாகுவிடமிருந்து கற்றதாகக் கூறப்படுகிறது. சுவேதாம்பர மரபின்படி, இறுதி அகநிலைசார் அனைத்துமறிந்தவர் (சுருதகேவலின்) எனக் கருதப்படுகிறார். எனினும், திகம்பர மரபு இதனை மறுக்கின்றது.[4] இவருக்குப் பின்னர், இவரது சீடர்களான மகாகிரி மற்றும் சுகத்தி ஆகியோர் தலைமைப் பொறுப்பேற்றனர்.[4][7] திகம்பர நூல்களில், 12-ஆண்டுப் பஞ்ச காலத்தின்போது தூலபத்திரர் அரையாடை அணிவதை அனுமதித்தாரெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, சுவேதாம்பரர் எனும் புதிய பிரிவு கிளைத்தது.[8][9] ஏமச்சந்திரரால் 12-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சமண நூலில் இவரைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Natubhai Shah 2004, ப. 42.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Hemacandra 1998, ப. 155, 169, 194–200.
  3. Upinder Singh 2016, ப. 273.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 Natubhai Shah 2004, ப. 43.
  5. Natubhai Shah 2004, ப. 42-43.
  6. Arya Sthulibhadra By Vijaya Nityānanda Sūri, Cidānanda Vijaya
  7. Jain Dharma ka Maulik Itihas, Acharya Hastimal, 1974, Part 2, p. 383-440
  8. "Digambara", britannica.com
  9. Sthulabhadra, Ganesh Lalwani, Jain Journal, April 1985, p. 152

மூலங்கள்[தொகு]

வார்ப்புரு:சமணத் துறவிகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூலபத்திரர்&oldid=3269433" இலிருந்து மீள்விக்கப்பட்டது