தூய நெஞ்சக் கல்லூரி (Sacred Heart College) தமிழ்நாடு, திருப்பத்தூர் மாவட்டத்தில், இக்கல்லூரி, 'ஜான் போஸ்கோ சலேசிய சபையினரால்' நடத்தப்படும் ஓர் கல்விக் கூடமாகும். இக்கல்லூரியில் கலை, அறிவியல், வணிகம் ஆகியத் துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இக்கல்லூரியின் வீரமாமுனிவர் தமிழ் மன்றத்தின் சார்பில் முத்தமிழ் மன்ற விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இது, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட முதல்தரக் கல்லூரியாகும். எசுப்பானிய பாதிரியார் ஜோசெப் கரீனோ என்பவரால் 1951-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது[1].