தூய சவேரியார் மகளிர் கல்லூரி, ஆலுவா
| வகை | அரசு உதவி பெறும் தன்னாட்சி பெற்ற மகளிர் கல்லூரி |
|---|---|
| உருவாக்கம் | 1964 |
| சார்பு | மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் |
மதச் சார்பு | தெரேசியன் கார்மெலைட்ஸ் சபை |
| தரநிர்ணயம் | தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை , பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) |
| தலைவர் | அருட்திரு.சூசம்மா கவும்புரத் |
| முதல்வர் | பேராசிரியர் முனைவர். மிலோன் ஃபிரான்ஸ் |
| அமைவிடம் | , , 683101 , 10°06′42″N 76°21′22″E / 10.11158°N 76.3560882°E |
| வளாகம் | நகர்ப்புறம் |
| மொழி | ஆங்கிலம், மலையாளம் |
| இணையதளம் | கல்லூரி இணையதளம் |
தூய சவேரியார் மகளிர் கல்லூரி, ஆலுவா என்பது, கேரளாவின் ஆலுவாவில் 1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்டஒரு மகளிர் பட்டக் கல்லூரியாகும். கலை, வணிகம் மற்றும் அறிவியல் பிரிவுகளில் இளங்கலைப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படும் இக்கல்லூரி மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1]
பெண்களுக்கு தரமான உயர்கல்வியை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி, கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், விலங்கியல்- தொழிற்கல்வி, பொருளாதாரம், மலையாளம், ஆங்கில இலக்கியம், கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம் மற்றும் வணிகவியல் ஆகிய பிரிவுகளில் இளங்கலைப் பட்டங்களையும் வணிகவியல், இயற்பியல், ஆங்கிலம் மற்றும் நுண்ணுயிரியல் ஆகியப்பிரிவுகளில் முதுகலை பட்டங்களையும் பயிற்றுவிக்கிறது.[2]
துறைகள்
[தொகு]அறிவியல் பிரிவு
[தொகு]கலை மற்றும் வணிகப்பிரிவு
[தொகு]- மலையாளம்
- ஆங்கிலம்
- இந்தி
- சமஸ்கிருதம்
- அரசியல் அறிவியல்
- பொருளாதாரம்
- உடற்கல்வி
- வர்த்தகம்
அங்கீகாரம்
[தொகு]இக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவால் (UGC) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 2022 ஆம் ஆண்டில் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் ஐந்தாவது சுழற்சியில் ஏ++ தகுதி (CGPA 3.68) வழங்கப்பட்டுள்ளது .
குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்
[தொகு]- அனன்யா (நடிகை), மலையாளத் திரைப்பட நடிகை.
- ஹனி ரோஸ், மலையாளத் திரைப்பட நடிகை.
- MC ஜோசபின், இந்திய அரசியல்வாதி
- ஆர்ஜே.நீனா, வானொலி தொகுப்பாளினி