தூய்மையின்மை அச்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தூய்மையின்மை அச்சம்
Mysophobia
Germophobia
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஉளவியல்

தூய்மையின்மை அச்சம் அல்லது மைசோபோபியா (Mysophobia, அல்லது verminophobia, germophobia, germaphobia, bacillophobia, bacteriophobia) என்பது மாசு மற்றும் நுண்ணுயிரிகள் குறித்த அச்சக் கோளாறு ஆகும். 1879 ஆம் ஆண்டில் வில்லியம் ஏ. ஹம்மண்ட் என்பவரால் இந்த சொல் உருவாக்கப்பட்டது. ஒருவர் தனது கைகளை மீண்டும் மீண்டும் கழுவுவதாகக் காட்சிப்படுத்தப்பட்ட பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வு (OCD) ஒன்றை விளக்குவதற்கு அவர் இச்சொல்லைப் பயன்படுத்தினார்.[1] மைசோபோபியா என்ற சொல் மிக நீண்ட காலமாகக் கட்டாயமாகக் கை கழுவுதலுடன் தொடர்புடையது.[2] அழுக்கு, அசுத்தம் ஆகியவற்றின் காரணமான அசாதாரண பயத்துடன் நேரடியாக தொடர்புடைய பெயர்களில் மோலிஸ்மோபோபியா (molysmophobia) அல்லது மோலிசோமோபோபியா (molysomophobia), ரைபோபோபியா (rhypophobia), ரூபோபோபியா (rupophobia) ஆகியவையும் அடங்கும். அதேசமயம் பேசிலோபோபியா (bacillophobia), மற்றும் பாக்டீரியோபோபியா (bacteriophobia) ஆகிய சொற்கள் பொதுவாக பாக்டீரியா மற்றும் நுண்ணுயிரிகள் குறித்த பயத்தைக் குறிக்கின்றன.[3]

மைசோபோபியா என்ற சொல் பண்டைய கிரேக்க சொற்களான μύσος (மியூசோஸ்), "அசுத்தமானது"[4] மற்றும் φόβος (போபோஸ்), "பயம்" ஆகியவற்றிலிருந்து உருவானது.[5]

அறிகுறிகள்[தொகு]

மைசோபோபியாவால் பாதிக்கப்படுபவர்கள் பொதுவாக பின்வரும் அறிகுறிகளை அதிகமாகக் காண்பிப்பார்கள்:[6]

 • அதிகப்படியான கை கழுவுதல்
 • கிருமிகளின் அதிக இருப்பைக் கொண்டிருக்கும் இடங்களைத் தவிர்ப்பது
 • உடல் தொடர்பு குறித்த பயம், குறிப்பாக அந்நியர்களுடன்
 • தமது சூழலை சுத்தம் செய்வதற்கும் சுத்தப்படுத்துவதற்கும் அதிகப்படியான முயற்சி
 • தனிப்பட்ட பொருட்களை மற்றவர்களுடன் பகிர மறுப்பது
 • நோய்வாய்ப்படும் ஒரு பயம்

மைசோபோபியா தனிநபர்களின் அன்றாட வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கிறது. கிருமிகளால் அதிகப்படியான தொற்றுகளுக்கு ஆளாகும்போது கடினமான சுவாசம், அதிகப்படியான வியர்வை, அதிகரித்த இதயத் துடிப்பு, திகில் நிலை போன்ற நோய் உணர்குறிகள் தீவிரத்தன்மையை ஏற்படுத்தும்.[7]

காரணிகள்[தொகு]

ஒரு நபர் கவலை, மனச்சோர்வு அல்லது அதிர்ச்சிகரமான சூழ்நிலை போன்ற மைசோபோபியாவை உருவாக்க பல அடிப்படைக் காரணிகள் உள்ளன.[8] சுகாதாரம் பெரிதும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு கலாச்சாரத்தில் வளர்வது (கை சுத்திகரிப்பிகள், கழிப்பறை இருக்கை மூடிகள் மற்றும் மளிகை வண்டிகளுக்குப் பயன்படுத்தப்படும் நுண்ணுயிரித் தடுப்பித் துடைப்பான்கள் போன்ற பொதுவாகப் பயன்படுத்தப்படும் சமூகங்களில்), மைசோபோபியாவின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய உந்து சக்தியாகவும் இருக்கலாம்.[9]

சமூகம்[தொகு]

மைசோபோபியாவால் பாதிக்கப்பட்ட சில பிரபலமான நபர்களில் நிக்கோலா தெஸ்லா, ஹோவார்ட் ஹியூஸ், சதாம் உசேன் ஆகியோர் அடங்குவர்.[10]

மேற்கோள்கள்[தொகு]

 1. Hammond, William Alexander (1879). Neurological Contributions. Putnam. பக். 40. https://archive.org/details/bub_gb_RrbqCbV5xvMC. 
 2. "Cleanliness Rules Germaphobes' Lives". பார்த்த நாள் September 10, 2017.
 3. "Bacillophobia – Fear of microbes". பார்த்த நாள் September 3, 2014.
 4. μύσος, Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, on Perseus
 5. φόβος, Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, on Perseus
 6. "Mysophobia (Germophobia): Are You a Germaphobe?" (en-US).
 7. "Mysophobia (Germophobia): Are You a Germaphobe?" (en-US).
 8. "Mysophobia (Germophobia): Are You a Germaphobe?" (en-US).
 9. "Mysophobia (Germophobia): Are You a Germaphobe?" (en-US).
 10. Thomas, Sarah. "Famous Germaphobes" (en).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூய்மையின்மை_அச்சம்&oldid=2954141" இருந்து மீள்விக்கப்பட்டது