தூய்மையான அறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுண்கருவிகள் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் சதூய்மையான அறை. ஒளி கல்லச்சு வரைவியலுக்கு மஞ்சள் (சிவப்பு-பச்சை) விளக்குகள் அவசியம்.
தூய்மையான அறையின் வெளிப்புறத் தோற்றம்
வளிப்பொழிவு இல்லாத ஒரு சுத்தமான அறையின் நுழைவாயில்
கட்டடத்தின் உட்கூரையில் நிறுவப்பட்ட மின்விசிறி வடிகட்டி அலகுகளுடன் மைக்ரோ எலக்ட்ரானியல் தயாரிப்புக்கான தூய்மையான அறை
துல்லியமான அளவீட்டு கருவிகளுக்கான தூய்மையான அறைக்கான சிற்றறை
தூய்மையான அறையில் பணிபுரிபவர்கள் அணியும் உடல், முகக் கவசம்

தூய்மையான அறை ( cleanroom ) என்பது காற்றில் கூட நுண் தூசுகள் இல்லாமல் பராமரிக்கப்படும் ஒரு அறை ஆகும். இந்த அறை தீவிரமாக தனிமைப்படுத்தப்பட்டு, அறைக்கு செல்லும் காற்றுகூட வடிகட்டப்பட்டு, மிக கவனமாக சுத்தப்படுத்தப்பட்டிருக்கும். இத்தகைய அறைகள் பொதுவாக அறிவியல் ஆய்வு, தொழில்துறையில் நவீன மின்னணு சதனங்கள் தயாரிப்பு போன்றவற்றிற்காக உருவாக்கப்படுகிறது. தூசி, காற்றில் பரவும் உயிரினங்கள் என அனைத்தையும் அறைக்குள் நுழையாமல் தடுத்து, அறைக்குள் கையாளப்படும் எந்தப் பொருளையும் தூய்மையாக வைத்திருக்கும் வகையில் தூய அறை வடிவமைக்கப்படுகிறது.

மறுபுறம், தூய அறையிலுள்ள பொருட்களை காக்க இந்த அறைகள் பயன்படுத்தப்படுகின்றன. தீவிர சிகிச்சைகள் செய்யப்படும் மருத்துவமனைகளிலும், அபாயகரமான வைராலஜி போன்ற உயிரியல் ஆய்வகங்களிலும், அணுக்கருப் பொறியியல் ஆகியவற்றில் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த அறைகளில் உள்ள ஆய்வகங்களில் பணிபுரிபவர்கள் வழியாக தூசு வராமல் இருப்பதற்காக அவர்களுக்கு தனித்துவமான கவச உடைகள் தரப்படும். சளி, இருமல் போன்ற உடல் உபாதைகள் உள்ளவர்கள் வழியாக நீர்த்திவளைகள் உள்ளே பரவும் என்பதால் அவர்கள் இந்த ஆய்வகங்களில் அனுமதிக்கப்படுவதில்லை.[1]

தூய அறைகள் பொதுவாக முன்னரே தீர்மானிக்கப்பட்ட மூலக்கூறு அளவின்படி ஒரு கன மீட்டருக்குள் உள்ள துகள்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தூய்மை நிலையுடன் உருவாக்கப்படுகின்றன. பொதுவாக நகர்ப்புறத்தின் வெளிப்புறக் காற்றில் ஒரு கன மீட்டரில் 35,000,000 துகள்கள் இருக்கும். அது ISO 9 சான்றளிக்கப்பட்ட தூய்மை அறைக்கு சமம். அதை ஒப்பிடுகையில் அதி தீவிரமான தூய்மை அறையாக கருதப்படும் ISO 14644-1 நிலை 1 என்று சான்றளிக்கப்பட்ட அறையில் அந்த அளவுக்கு எந்தத் தூசுகளும் இருக்காது. மேலும் 0.3 மைக்ரோ மீட்டர் மற்றும் அதற்கும் குறைவான அளவிலான துகள்களானது ஒரு கன மீட்டருக்கு 12 மட்டும் இருக்கும். தூய அறைகள் தூய்மைக்கு ஏற்ப வகைபடுத்தப்படுகின்றன. தூய அறையின் வசதிகள் பெரும்பாலும் நிலை 7 என்பதாகவே உருவாக்கப்படுகின்றன. அதே சமயம் நிலை 1 இல் உள்ள வசதிகள் மிகவும் அரிதாகவே உருவாக்கப்படுகின்றன.

வரலாறு[தொகு]

நவீன தூய அறையை அமெரிக்க இயற்பியலறிஞர் வில்லிஸ் விட்ஃபீல்ட் கண்டுபிடித்தார். சாண்டியா தேசிய ஆய்வகத்தின் பணியாளராக இருந்த, விட்ஃபீல்ட் 1960 இல் தூய்மை அறைக்கான ஆரம்பத் திட்டங்களை உருவாக்கினார். [2] விட்ஃபீல்டின் கண்டுபிடிப்புக்கு முன்பு, முந்தைய தூய அறைகளில் தூசுகள் மற்றும் கணிக்க முடியாதபடி காற்றோட்டத்தில் அவ்வப்போது பிரச்சனைகள் இருந்தன. விட்ஃபீல்ட் தனது தூய அறையை நிலையான, அதிகளவில் வடிகட்டப்பட்ட காற்றோட்டத்துடன் அசுத்தங்களை வெளியேற்றும் வகையில் வடிவமைத்தார். [2] 1960களில் கண்டுபிடிக்கப்பட்ட சில ஆண்டுகளுக்குள், விட்ஃபீல்டின் நவீன தூய அறைகள் உலகளவில் 50 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான விற்பனையை ஈட்டியது (இன்று தோராயமாக 411 பில்லியன்). [3]

குறிப்புகள்[தொகு]

  1. "அறிவுக்கு ஆயிரம் கண்கள் 11: மின்னணுக் கருவிகளின் இயக்கத்தை நிறுத்தும் தூசு". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-11-10.
  2. 2.0 2.1 Yardley, William (2012-12-04). "Willis Whitfield, Clean Room Inventor, Dies at 92". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.comm/2012/12/05/business/willis-whitfield-clean-room-inventor-dies-at-92.html. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Willis Whitfield - Father of the Cleanroom" (PDF). Cleanroom online. September 2015. Archived from the original (PDF) on 2021-01-27. பார்க்கப்பட்ட நாள் 2016-05-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூய்மையான_அறை&oldid=3558927" இலிருந்து மீள்விக்கப்பட்டது