உள்ளடக்கத்துக்குச் செல்

தூய்மைப் பணியாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்னாப்பிரிக்காவின் டர்பனில், தன் பாதுகாப்பு உபகரணங்களுடன் கைமுறையாக கழிவு நீர்த் தொட்டியில் உள்ள கழிவை அள்ளும் பணியை மேற்கொள்ளும் துப்புரவுப் பணியாளர்கள்.

தூய்மைப் பணியாளர் அல்லது துப்புரவுப் பணியாளர் (Sanitation worker) என்பவர் துப்புரவுப் பணிச் சங்கிலியின் எந்தக் கண்ணியிலும் கைமுறையாகவோ, உபகரணங்கள் அல்லது தொழில்நுட்பத்தை பயன்படுத்தியோ தூய்மைப் பணிசெய்தல், பராமரித்தல், அள்ளுதல் ஆகியவற்றிற்குப் பொறுப்பானவர் ஆவார். :2 இன்னும் விரிவாகச் சொன்னால், துப்புரவுப் பணியாளர்கள் தெருக்கள், பூங்காக்கள், பொது இடங்கள், சாக்கடைகள், மழைநீர் வடிகால், பொது கழிப்பறைகள் போன்வற்றை சுத்தம் செய்வதிலும் ஈடுபடுபவர்களாவர்.[1] சில அமைப்புகள் இந்தச் சொல்லை குறிப்பாக நகராட்சி திடக்கழிவு சேகரிப்பாளர்களுக்குப் பயன்படுத்துகின்றன.

வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பிற அமைப்புகளில் பாதுகாப்பான தூய்மைச் சேவைகளில் ஈடுபடுவதிலும், பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதிலும் துப்புரவுப் பணியாளர்கள் அவசியமானவர்களா உள்ளனர். ஆனால் இந்தப் பணிகளில் ஈடுபடுவதால் பல உடல்நல அபாயங்களை எதிர்கொள்கின்றனர். மேலும், அவர்கள் அதிக உழைப்பு, மோசமான வாழ்நிலை, உளவியல் மன அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்படும் அபாயத்திற்கு உள்ளாகின்றனர். வறுமை, நோய், ஊட்டச்சத்து இன்மை, மோசமான வீட்டுவசதி, குழந்தைத் தொழிலாளர், இடம்பெயர்வு, போதைப்பொருள் மற்றும் மதுப் பழக்கம், பாகுபாடு, சமூக இழுக்கு, சமூக புறக்கணிப்பு போன்ற நிலைமைகளினால் அவர்களுக்கான அபாயங்கள் அதிகரிக்கின்றன. பல வளரும் நாடுகளில், துப்புரவுத் தொழிலாளர்கள் " நடைமுறைப்படுத்தப்படாத சுற்றுச்சூழல், தொழிலாளர் பாதுகாப்பு விதிகள் மற்றும் தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு போன்றவற்றால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர்". [2]

வளரும் நாடுகளில் துப்புரவுத் தொழிலாளர்களின் பணி நிலைமை, சட்டப் பாதுகாப்பு, சமூக அம்சங்கள் போன்றவை, அதிக வருமானம் கொண்ட வளர்ந்த நாடுகளில் உள்ள துப்புரவுத் தொழிலாளர்களின் பணி நிலைமை, அவர்களின் பணிச்சூழல்களும் பெரிதும் வேறுபடுத்துகின்றன. துப்புரவுத் தொழிலாளர்கள் பற்றிய தற்போதைய இலக்கியங்களில் பெரும்பாலானவை வளரும் நாடுகளின் நிலைமைகளை மையமாகக் கொண்டுள்ளவையாக உள்ளன.

குழி கழிவறைகள், கழிவுநீர்த் தொட்டிகள் போன்ற சுகாதார அமைப்புகளைப் பராமரித்து அவற்றைத் தூய்மை செய்யும் தொழிலாளர்கள் மலக் கசடு மேலாண்மையில் பங்களிக்கின்றனர். துப்புரவுப் பணியாளர்கள் இல்லாமல், நிலையான வளர்ச்சி இலக்கு 6, இலக்கு 6.2 ("அனைவருக்கும் பாதுகாப்பாகன சுகாதாரம்") ஆகியவற்றை அடைய முடியாது. துப்புரவுத் தொழிலாளர்களின் கண்ணியத்தையும் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பது முக்கியம்.

இந்தியாவில்

[தொகு]

வரலாறு

[தொகு]

மதராஸ் மாகாணத்தில் 1920 இல் கொண்டுவரப்பட்ட நகராட்சிகள் சட்டமானது கழிப்பறைகளை அமைத்து, அவற்றை பராமரிக்கும் பணியை நகராட்சிகளிடம் ஒப்படைத்தது. அதன்படி உலர் கழிப்பறைகள் அமைக்கபட்டு அவற்றைப் பராமரிக்கும் பணிகளுக்கு தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். உலர் கழிப்பறைகளை தூய்மை செய்த பணியாளர்கள் சமூக புறக்கணிப்பைக் கருத்தில் கொண்டு, தங்கள் சொந்த ஊர்களை ஒட்டி உள்ள நகராட்சிகளில் பணியாற்ற முன்வரவில்லை. இதனால் தெலுங்கு பேசும் ஆந்திரப் பகுதிகளில் உள்ளவர்கள் உள்ளவர்கள் தமிழ்நாட்டுப் பகுதிகளுக்கும், தமிழர்கள் கன்னட, மலையாளப் பிரதேசங்களிலும் பணியாற்றச் சென்றனர்.[3]

நிலை

[தொகு]
manual Scavengers of pondy
புதுச்சேரியில் துப்புரவுப் பணியாளர்கள்

இந்தியாவில் துப்புரவுத் தொழிலாளர்களாக உள்ளவர்கள் "பெரும்பாலான தலித்துகள், பொதுவாக அவர்கள் 'துப்புரவுத் தொழிலாளி சாதிகளைச் ' சேர்ந்தவர்கள்". [4] இந்தியாவில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டைக் குறைக்க ஸ்வச் பாரத் போன்ற திட்டங்கள் உள்ளன. ஆனால் துப்புரவுத் தொழிலாளர்களின் இறப்புகள் அதிகரித்து வருவதால் இதுபோன்ற திட்டங்கள் பயனற்றவை என்று நிரூபணமாகியுள்ளன.

2018 ஆம் ஆண்டய ஒரு மதிப்பீட்டின்படி, இந்தியாவில் "துப்புரவுத் தொழிலாளர்களின்" எண்ணிக்கை 5 மில்லியனாக (2 மில்லியன் பேர் அதிக ஆபத்துள்ள நிலையில் பணிபுரிகின்றனர்), அவர்களில் 50% பேர் பெண்கள். :35பொதுவாக, துப்புறவுப் பணியில் பெண்களுக்கு குறைந்த தொழில்நுட்ப திறன்களும் குறைந்த அளவிலான தொழில்நுட்பமுமே தேவைப்படுகிறது, இதன் விளைவாக பள்ளி கழிப்பறை மற்றும் வடிகால் சுத்தம் செய்பவர்களாக அவர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். [5]

இந்தியாவில் கையால் மல் அள்ளுபவர்கள் என்ற சொல் வரலாற்று ரீதியாக துப்புரவுத் தொழிலாளர்களின் ஒரு துணைப் பிரிவைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நடைமுறை 1993 முதல் அதிகாரப்பூர்வமாக தடைசெய்யப்பட்டது, ஆனால் இன்னும் தொடர்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Akhilesh, Abhinav; Mehta, Meera; Juneja, Zara (10 April 2020). "How can we support sanitation workers during COVID-19?". India Development Review (IDR). Retrieved 23 April 2020.
  2. Oza, Hemali Harish; Lee, Madison Gabriella; Boisson, Sophie; Pega, Frank; Medlicott, Kate; Clasen, Thomas (2022). "Occupational health outcomes among sanitation workers: A systematic review and meta-analysis" (in en). International Journal of Hygiene and Environmental Health 240: 113907. doi:10.1016/j.ijheh.2021.113907. பப்மெட்:34942466. Bibcode: 2022IJHEH.24013907O. 
  3. திடக்கழிவு மேலாண்மை என்ற தில்லுமுல்லு, கட்டுரை, கே. சந்துரு, இந்து தமிழ் திசை, 5 சூன் 2025
  4. "Treat Sanitation Workers Like Health Workers, Pay Them At Least Rs 20,000 Per Month". The Wire. 22 April 2020. Retrieved 23 April 2020.
  5. CS Sharada Prasad and Seema Thomas (29 July 2020). "Technology's impingement on the urban female sanitation worker in India". Harvard's Kennedy School of Government's Gender Policy Journal. https://gpj.hkspublications.org/2020/07/29/technologys-impingement-on-the-urban-female-sanitation-worker-in-india/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூய்மைப்_பணியாளர்&oldid=4288116" இலிருந்து மீள்விக்கப்பட்டது