தூந்தாஜி வாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தூந்தாஜி வாக் (1740-1800) மைசூர் பேரரசர் ஹைதர் அலியின் குதிரைப் படைகளின் தளபதியாக இருந்தவர். இவர் கர்நாடகத்தின் ஷிமோகா பகுதியைப் பிரித்தானியரிடமிருந்து கைப்பற்றினார். இவருடைய தலைமையில் திப்புவின் படைவீரர்களும் இணைந்து பங்கேற்க, கன்னட மற்றும் மராட்டியத்தின் பல பகுதிகளைத் தூந்தாஜி வாக் மீட்டார். மராட்டியத் தலைவர் தூந்தாஜி வாக் தக்காணத்தில் தனக்கென ஒர் அரசை உருவாக்கிக்கொண்டு, ’இரு பேருலகுகளின் சக்கரவர்த்தி’ எனத் தம்மை அறிவித்துக் கொண்டு, பிரித்தானியர்களுடன் தொடர்ந்து போரிட்டு வந்தார்

1800ம் ஆண்டில் மிகப்பெரும் படையுடன் கிருஷ்ணா நதிக்கரையில் வெல்லிஸ்லீயின் தலைமையிலான பிரித்தானியப் படைகளுடன் தூந்தாஜிவாக் மோதினார். நீண்ட நாட்கள் நடந்த இப்போரில் பிரித்தானியருக்கு ஆதரவாக மராட்டியப் பேஷ்வாக்களும், ஹைதராபாத் நிஜாம், மைசூர் உடையார் முதலியோரின் படைகளும் தூந்தாஜியின் படைகளுடன் மோதின. இப்போரில் 1800, செப்டம்பர் 10 ஆம் நாள் தூந்தாஜி வாக் கொல்லப்பட்டார்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூந்தாஜி_வாக்&oldid=2717554" இலிருந்து மீள்விக்கப்பட்டது