தூத்துக்குடி அனல் மின் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூத்துக்குடி அனல்மின் நிலையம்
நாடுஇந்தியா
இடம்தூத்துக்குடி (மாவட்டம்), தமிழ்நாடு (மாநிலம்).
நிலைசெயல்பாட்டிலுள்ளது
இயக்குபவர்தமிழ்நாடு மின்சார வாரியம்
மின் நிலைய தகவல்
முதன்மை எரிபொருள்நிலக்கரி
உற்பத்தி பிரிவுகள்5
மின் உற்பத்தி விவரம்
நிறுவப்பட்ட ஆற்றலளவு1050 மெகாவாட்

தூத்துக்குடி அனல்மின் நிலையம் தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலக்கரி அடிப்படையிலான அனல்மின் நிலையம் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் நிர்வகிக்கப்பட்டுவருகிறது. ஒவ்வொன்றும் 210 மெகா வாட் உற்பத்தித்திறன் கொண்ட 5 அலகுகளைக் கொண்ட இதன் மொத்த உற்பத்தித்திறன் 1050 மெகா வாட் ஆகும்.

2013ல் இதன் 1, 3 மற்றும் 4-ஆம் அலகுகளில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருந்தது. பிறகு நவம்பர் 2013 தொடக்கத்தில், 1 மற்றும் 4-ஆவது கொதிகலன் அலகுகள் மட்டும் கோளாறு சரி செய்யப்பட்டு தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2 அலகுகளில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. [1]

கப்பல் மூலமாகக் கொண்டு வரப்படும் நிலக்கரி முதலில் நொறுக்கும் இயந்திரங்களில் இடப்பட்டு 10 முதல் 20 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட துண்டுகளாக நொறுக்கப்படுகிறது. இவ்வாறு நொறுக்கப்பட்ட சிறுதுண்டுகள் நிலக்கரி அரவை இயந்திரங்களில் செலுத்தப்பட்டு தூளாக்கப்படுகிறது. தூளாக்கப்பட்ட நிலக்கரி நன்கு பொடியாக்கப்பட்டு செலுத்து விசிறிகள் மூலமாக உலைக்குள் வேகமாகச் செலுத்தப்படுகிறது. எண்ணெய் கிடங்கிலிருந்து தொடுகோட்டு எரித்தலுக்காக வரும் உலை மற்றும் எண்ணெய் தெளிகுழலைச் சுற்றிலும் ஆல்தியா, பாரதீப், விசாகப்பட்டினம் துறைமுகம் போன்ற இடங்களில் ஆலைகள் உள்ளன. [2][3]

காற்று மாசு[தொகு]

தூத்துக்குடியில் இந்த அனல் மின் நிலையம் ஏறத்தாழ 25 சதவீத அளவிற்கு சல்பர் டை ஆக்சைடு என்னும் மனிதர்களுக்குத் தீங்கு செய்யக் கூடிய மாசினை வெளியிடுகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. தினமணி, நவம்பர் 04, 2013
  2. "Tuticorin Power Station" (PDF). tangedco.gov.in.
  3. "TTTPS". infraline.com.
  4. "சல்பர் டை ஆக்சைடு ஸ்டெர்லைட் தகவல்". பார்க்கப்பட்ட நாள் 1 January 2019.

புற இணைப்புகள்[தொகு]