தூத்துக்குடி- ஓக்கா விவேக் அதிவிரைவு தொடருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


தூத்துக்குடி- ஓக்கா விவேக் அதிவிரைவு தொடருந்து
கண்ணோட்டம்
வகைஅதிவிரைவு தொடருந்து
முதல் சேவை18 நவம்பர் 2011; 12 ஆண்டுகள் முன்னர் (2011-11-18)
நடத்துனர்(கள்)மேற்கிந்திய ரயில்வே துறை
வழி
தொடக்கம் தூத்துக்குடி (TN)
இடைநிறுத்தங்கள்40
முடிவு ஓக்கா (OKHA)
ஓடும் தூரம்2,720 km (1,690 mi)
சேவைகளின் காலஅளவுவாரம் ஒரு முறை முறை
தொடருந்தின் இலக்கம்19567 / 19568
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)ஈரடுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் முன்பதிவில்லாத பொது பெட்டிகள்
இருக்கை வசதிவசதி உண்டு
படுக்கை வசதிவசதி உண்டு
உணவு வசதிகள்வசதியில்லை
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புStandard Indian Railways Coaches
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்) Provincial gauge
வேகம்51 km/h (32 mph)
வழிகாட்டுக் குறிப்புப் படம்

இந்தியாவின் இரு கடற்கரை நகரங்களான தமிழகத்தின் தூத்துக்குடி மற்றும் குஜராத் மாநிலம் துவாரகை மாவட்டத்திலுள்ள ஓக்கா என்ற இரு நகரங்களுக்கு இடையே இந்திய ரயில்வே துறையினரால் இயக்கப்படும் அதிவிரைவு தொடருந்து, தூத்துக்குடி - ஓக்கா விவேக் அதிவிரைவு தொடருந்து ஆகும். இந்த தொடருந்து 19567 மற்றும் 19568 என்ற எண்களில் இயங்கி வருகிறது. தூத்துக்குடி முதல் ஓக்கா வரை 19567 என்ற எண்ணிலும் ஓக்கா முதல் தூத்துக்குடி வரை 19568 என்ற எண்ணிலும் இயங்கி வருகிறது. தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களின் வழியாக இந்த தொடருந்து பயணிக்கிறது.[1]

பெயர்க்காரணம்[தொகு]

2011- 12 ஆண்டு நிதிநிலை அறிக்கை அறிக்கையின் போது அப்போதைய ரயில்வே துறை மத்திய மந்திரி அவர்களால் 2013 ஆம் ஆண்டு கொண்டாடப்படும் சுவாமி விவேகானந்தர் அவர்களின் 150ஆவது ஆண்டு ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் காரணமாக விவேக் அதி விரைவு தொடருந்துகள் என்ற பெயரில் பல்வேறு தொடருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் இந்த அதிவிரைவு தொடருந்து ஆகும்.

பயணப் பெட்டிகளின் வடிவமைப்பு[தொகு]

தூத்துக்குடி - ஓக்கா அதிவிரைவு தொடருந்து, ஈரடுக்கு குளிர்சாதனப்பெட்டி ஒன்று, மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டி இரண்டு, படுக்கை வசதி கொண்ட முன்பதிவு பெட்டிகள் ஒன்பது, முன்பதிவு இல்லாத பொது பெட்டிகள் ஆறு, ஆறு அமரும் வசதி கொண்டவையும், சரக்கு பெட்டிகள் இரண்டு என மொத்தம் இருபது பெட்டிகளைக் கொண்டு இயங்கி கொண்டு இயங்கி வருகிறது. அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தை தாங்கும் அளவு இந்தப் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பயணிகளின் எண்ணிக்கை, திருவிழா காலம் மற்றும் நிர்வாக காரணங்களுக்காக ரயில்வே துறையினரால் பெட்டிகளின் எண்ணிக்கை மாற்றப்படலாம்.

வழித்தடமும் நிறுத்தங்களும்[தொகு]

இந்த தூத்துக்குடி - ஓக்கா அதிவிரைவு தொடருந்து, தூத்துக்குடி நிலையத்தில் இருந்து புறப்பட்டு விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, கரூர் சந்திப்பு, ஈரோடு சந்திப்பு, சேலம் சந்திப்பு, பங்காருபேட்டை, தர்மாவரம் சந்திப்பு, குண்டக்கல் சந்திப்பு, வாடி சந்திப்பு, சோலாப்பூர், புனே சந்திப்பு, லோனாவாலா, கல்யாண் சந்திப்பு, வாசி சாலை, சூரத், வடோதரா சந்திப்பு, அகமதாபாத் சந்திப்பு, ராஜ்கோட், துவாரகா நிலையங்களின் வழியாக இயக்கப்பட்டு ஓக்கா சந்திப்பு நிலையத்தை வந்தடைகிறது. மறு மார்க்கமாகவும் இதே வழித்தடத்தில் இயக்கப்பட்டு தூத்துக்குடியை வந்தடைகிறது.

பயண அட்டவணை[தொகு]

வண்டி எண் நிலையக் குறியீடு புறப்படும் நிலையம் புறப்படும் நேரம் புறப்படும் நாள் சேரும் நிலையம் சேரும் நேரம் சேரும் நாள்
19567 TN தூத்துக்குடி தொடருந்து நிலையம் 22.00 PM ஞாயிற்றுக்கிழமை ஓக்கா தொடருந்து நிலையம் 01.35 AM புதன்கிழமை
19568 OKHA ஓக்கா தொடருந்து நிலையம் 23.55 PM வியாழக்கிழமை தூத்துக்குடி தொடருந்து நிலையம் 07.10 AM ஞாயிற்றுக்கிழமை

வண்டி எண் 19567[தொகு]

தூத்துக்குடி - ஓக்கா அதிவிரைவு தொடருந்து வண்டியானது தூத்துக்குடி தொடருந்து நிலையத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.00 மணிக்கு புறப்பட்டு விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, கரூர் சந்திப்பு, ஈரோடு சந்திப்பு, சேலம் சந்திப்பு, பங்காருபேட்டை, தர்மாவரம் சந்திப்பு, குண்டக்கல் சந்திப்பு, வாடி சந்திப்பு, சோலாப்பூர், புனே சந்திப்பு, லோனாவாலா, கல்யாண் சந்திப்பு, வாசி சாலை, சூரத், வடோதரா சந்திப்பு, அகமதாபாத் சந்திப்பு, ராஜ்கோட், துவாரகா வழியாக இயக்கப்பட்டு 40 நிறுத்தங்களையும் 425 நிலையங்களையும் கடக்க சராசரியாக மணிக்கு 52 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 51 மணி 35 நிமிடங்கள் பயணித்து ஓக்கா தொடருந்து நிலையத்தை மூன்றாம் நாள் (புதன்கிழமை) அதிகாலை 01.35 மணிக்கு சென்றடைகிறது. இதன் மொத்த பயண தூரம் 2711 கிலோ மீட்டர் ஆகும். இந்த தொடருந்து தனது பயணத்தில் பங்காருபேட்டை சந்திப்பு மற்றும் நடியாட் நிலையங்களுக்கு இடையிலான வழித்தடத்தில் அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. இந்த தொடருந்திற்கு 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி இந்திய ரெயில்வேயினால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டியானது அகல இரயில் பாதைகளில் இயக்கப்படக்கூடியதாகும்.[2]

வண்டி எண் 19568[தொகு]

மறுமார்க்கமாக 19568 என்ற எண்ணைக் கொண்ட இந்த தொடருந்து வண்டியானது ஓக்கா தொடருந்து நிலையத்திலிருந்து ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை இரவு 11.55 மணிக்கு இயக்கப்பட்டு 40 நிறுத்தங்களையும் 425 நிலையங்களையும் கடக்க சராசரியாக மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 51 மணி 35 நிமிடங்கள் பயணித்து தூத்துக்குடி தொடருந்து நிலையத்தை நான்காம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 07.10 மணிக்கு சென்றடைகிறது. இதன் மொத்த பயண தூரம் 2711 கிலோ மீட்டர் ஆகும். அதிகபட்சமாக மணி நகர் மற்றும் பங்காருபேட்டை சந்திப்பு நிலையம் வரை மணிக்கு 110 கிலோமீட்டர் வரை இந்தத் தொடருந்து இயக்கப்படுகிறது. இந்த தொடருந்திற்கு 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி தென்னிந்திய ரெயில்வேயினால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டியானது அகல இரயில் பாதைகளில் இயக்கப்படக்கூடியதாகும்.[3]

இந்த தொடருந்தின் வேகம் சராசரியாக மணிக்கு 55 கிலோ மீட்டர்களுக்கு மேல் இருப்பதால் இந்திய ரயில்வே சட்டத்தின்படி அதிவிரைவுக்கான கூடுதல் கட்டணம் பயண கட்டணத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. [1], South Central Railway, 17 February 2014
  2. http://amp.indiarailinfo.com/train/-train-tuticorin-okha-vivek-express-19567/15700/2548/1757. {{cite web}}: Missing or empty |title= (help)
  3. https://indiarailinfo.com/train/-train-okha-tuticorin-vivek-express-19568/15584/1757/790. {{cite web}}: Missing or empty |title= (help)