தூண்டுதல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிமுகம்[தொகு]

மாணவப் பருவத்தில் அனைவரும் ஒரே மாதிரியான உணர்வில் இருப்பதில்லை. ஒரே நிகழ்ச்சி மாணவப் பருவத்தின் வெவ்வேறு காலகட்டத்தில் மனதில் வெவ்வேறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

மூவகை மாணவப் பருவம்[தொகு]

1.குழந்தைப்பருவம்(12 வயது வரை) 2. விடலைப்பருவம்(13-19 வயது வரை) 3. வளர்ச்சியடைந்த பருவம்(20 வயது அதற்கு மேலும்) இதில் இரண்டாவதாக கூறப்பட்டிருக்கும் வளர் இளம் பருவம், மாணவப்பருவத்தில் மிகுந்த இன்பத்தை விரும்புகிற தர்மசங்கடமான பருவம். ஏனென்றால் குழந்தைப் பருவத்தில் மாணவர்கள் பெரியவர்களின் சொல் கேட்டு நடப்பர். அவர்களுக்கு செய்யக்கூடாதவற்றைச் செய்யும் துணிவு அப்பொழுது வருவதில்லை. அந்த வயதில் மனம் குழந்தைத்தனமாகவே இருப்பதால் எதையும் கற்றுக்கொள்ளத் தயாராகவே இருப்பர். அதே போல் முழுவளர்ச்சியுற்ற பருவத்தில் மாணவன் தான் "கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு" என்பதை உணர்கின்றான். மேலும் அவன் நல்லது கெட்டது எது என்பதை பகுத்தறிந்து சில அனுபவத்தையும் பெறுகின்றான். இருந்தபோதிலும் வளர் இளம் பருவத்தில் அவன் தன்னிச்சையாகச் சிந்திக்கின்றான். பெரியவர்களின் பெரும்பாலான அறிவுரைகளைப் புறக்கணிக்கிறான். உடம்பில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால் எதிர்பாலரால் ஈர்க்கப்பட்டு அவர்கள் மீது மோகம் கொள்கிறான். அந்த வயதில் தன் மோகத்திற்கு மேல் வாழ்க்கையில் ஒன்றுமில்லை என்பதாக நினைத்துக் கொள்கிறான். சில மாணவர்கள் இத்கையும் மிஞ்சி தீய பழக்கங்களால் கவரப்படுகிறார்கள். வேறு சிலர் தொலைக்காட்சி, திரைப்படம், இணையத்தளம் போன்றவற்றில் வீழ்ந்து விடுகிறார்கள். எனவே இத்தகைய எந்த தூண்டுதல்களும் மாணவர்களை பிடித்து விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

தூண்டுதல்கள்[தொகு]

எதிர்பாலின ஈர்ப்பு[தொகு]

கட்டுப்படுத்தும் முறை உடற்கட்டுப்பாட்டு முறை உளக்கட்டுப்பாட்டு முறை

தொலைக்காட்சியும் திரைப்படமும்[தொகு]

கட்டுப்படுத்தும் முறை மேலும் ஒரு முன்னறிவிப்பு, டி.வியின் பின்புறம் சுவற்றில் பார்வையில் படும்படி "டி.வி.-முன்னேற்றத்தின் எதிரி" என்று எழுதி உறுதி முத்திரையை ஒட்டிக்கொள்ளலாம். முத்திரை முத்திரை என்பது ஒரு கூற்ரை அடையாளம் காண்பிப்பதாகும்.

பிற கவர்ச்சிகள்[தொகு]

உங்கள் எதிர்காலம் 10-15 வருடங்களுக்குப் பிறகு எப்படி இருக்கும் என்று ஆழமாக மனதில் கற்பனை மாணவர்கள் செய்து பிற கவர்ச்சிகளை எதிர்மறை சுழற்சி முறையையும் பயன்படுத்தி ஈர்ப்பும் கவர்ச்சியும் பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

தீய பழக்கங்களை முறியடிப்பது எப்படி?[தொகு]

தீய பழக்கங்கள் உடையவர்களின் நட்பை தவிர்த்து பழக்கம் இல்லாத செயல்களின் மூலம் உங்கள் கவனத்தை தீய பழக்கங்களிலிருந்து மாற்றி விடலாம்.

புகைப்பழக்கம்[தொகு]

புகைப்பிடிப்பவர்கள் அந்த பழக்கத்திலிருந்து வெளிவர அவர்கள் பார்வையில் படும் படி "புற்றுநோயே புகைப்பிடிப்பதை நிறுத்தும்;புகைப்பிடித்தல் உன்னையும் உன்னைச் சார்ந்தவரையும் கொல்கிறது" என்று தெளிவாக ஒட்டினால் புகைப்பழக்கத்தை மீண்டு விடலாம்.

சான்றாதாரம்[தொகு]

படிப்பில் சிறந்து அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி? பகுதி-1(2007).டாக்டர் ஜெ.என்.ரெட்டி(ஆசிரியர்).பக்.177-184.மேக்ஸ் அகடமி ஃபார் எக்ஸலன்ஸ், சென்னை-600 094.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூண்டுதல்கள்&oldid=2398941" இருந்து மீள்விக்கப்பட்டது