உள்ளடக்கத்துக்குச் செல்

தூண்டில் கதைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூண்டில் கதைகள்
நூலாசிரியர்சுஜாதா
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வெளியீட்டாளர்கிழக்கு பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
2013
பக்கங்கள்232
ISBN9788184936520


தூண்டில் கதைகள் என்ற நூலை சுஜாதா எழுதினார். இது குமுதத்தில் இவர் எழுதிய பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பாகும்.

பொருளடக்கம்

[தொகு]

இந்நூலில் வரும் சிறுகதைகளின் பட்டியல் பின்வருமாறு:

  1. அனுபாவின் தீர்மானம்
  2. நான்கு விரல்கள்
  3. ஒருநாள் மட்டும்
  4. மறக்க முடியாத் சிரிப்பு!
  5. மற்றொரு பாலு
  6. குந்தவையின் காதல்
  7. தண்டையும் குற்றமும்
  8. சுயம்வரம்
  9. யாருக்கு?
  10. பெய்ரூட்
  11. வானில் ஒரு..
  12. க்ளாக் ஹவுஸில் ஒரு புதையல்!

நூலைப்பற்றி ஆசிரியர்

[தொகு]

இந்நூலைப் பற்றி ஆசிரியர் நூலின் முன்னுரையில் சில வரிகள்:

"..சம்பிரதாயமான பழைய காலச் சிறுகதை வடிவம். முடிவில் ஒரு சொடக்கு அல்லது துடுப்பு இவைதான் இந்தக் கதைகளின் பொது அம்சம். இதைப் படிப்பவர்கள் இவை இலக்கியமா, இல்லையா என்று கவலைப்பட வேண்டியதில்லை. உற்சாகமாக, சுலபமாகப் படிக்க இயலும். இந்தக் கதைகளைக் குமுதத்தில் திருத்தாமல் வெளியிட்டாலும், ஒரு கதை முடிய மற்றொரு கதை தொடங்கும்படியாகப் பகுதி பகுதியாகப் பிரித்துத்தான் வெளியிட்டார்கள். அதற்குக் காரணம் தொடர்கதை தோஷம் என்றுதான் சொல்வேன். இப்படி ஒரு கதை மூலம் மற்றொரு கதைக்கு இழுத்ததாலோ என்னவோ இவற்றுக்குத் "தூண்டில் கதைகள்" என்று குமுதம் பெயரிட்டது.புத்தக வடிவில் இப்போது வந்து விட்டதால், நீங்கள் விரும்பிய கதையைத் தேர்ந்தெடுத்து விரும்பிய நேரத்தில் படிக்கலாம்."

நூலைப்பற்றி கிழக்குப் பதிப்பகம்

[தொகு]

அனுபமாவின் தீர்மானம், ஒருநாள் மட்டும், மற்றொரு பாலு, குந்தவையின் காதல், க்ளாக் ஹவுஸில் ஒரு புதையல், தண்டையும் குற்றமும் என்று இந்தத் தொகுப்பில் மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. த்ரில், காதல், க்ரைம், விஞ்ஞானம் என்று ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு வித்ததில் எழுதியிருக்கிறார். விறுவிறுவென்று கதைகளைப் படிக்க வைத்து, இறுதியில் ஓர் ஆச்சரியம், அதிர்ச்சியைக் கொடுத்து அசத்திவிடுகிறார், சுஜாதா. குமுதம் இதழில் 'தூண்டில் கதைகள்' வெளிவந்தபோது வாசகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூண்டில்_கதைகள்&oldid=1770607" இலிருந்து மீள்விக்கப்பட்டது