தூண்டாமணி விளக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


தூண்டாமணி விளக்கு என்பது இந்துக் கோவில்களின் கருவறையில் காணப்பெறுகின்ற ஒரு வகை விளக்காகும். இவ்விளக்கினை தூங்காமணி விளக்கு, நந்தா விளக்கு என்றும் அழைக்கின்றார்கள். இவ்விளக்கினை, திருநுந்தா விளக்கு என்று முதலாம் இராஜேந்திரன் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளார்கள்.

நுந்துதல் என்பதற்கு தூண்டுதல் என்று பொருள். இவ்விளக்கின் சிறப்பு அமைப்பின் காரணமாக திரியை தூண்டுதல் அவசியமற்று இருப்பதால் நுந்தா விளக்கு என்றும் தூண்டாமணி விளக்கு என்றும் அழைக்கப்பெறுகிறது. நுந்தா விளக்கு என்பது திரிந்து நந்தா விளக்கு என்றும், தூண்டாமணி விளக்கு என்பது திரிந்து தூங்காமணி விளக்கு என்றும் அறியப்பெறுகிறது.[1] [2] [3]

காண்க[தொகு]

ஆதாரம்[தொகு]

  1. http://jaybeesmuseumtamil.blogspot.in/2011/08/ancient-tamil-custom.html
  2. http://www.yarl.com/forum3/index.php?showtopic=82984
  3. http://www.yarlmann.lk/viewsingle.php?id=170
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூண்டாமணி_விளக்கு&oldid=2134560" இருந்து மீள்விக்கப்பட்டது