தூண்டல் உணரி
Appearance
தூண்டல் உணரி (Inductive Sensor) என்பது ஒரு மின்னணு அண்மை உணரி ஆகும். இது உலோகம் சார்ந்த பொருட்களை அதை தொடாமலேயே கண்டறிய உதவுகிறது. இந்த உணரி ஒரு தூண்டல் வளையத்தை கொண்டுள்ளது. மின்னோட்டம் உணரியில் பாயும்போது அதைச்சுற்றி ஒரு காந்தப்புலம் உருவாக்கபடுகிறது. இதன் வளையத்தின் தூண்டம் ஆனது அதனுள் உள்ள பொருளை பொறுத்து மாறுபடும். உலோகம் சார்ந்த பொருள்கள் சிறந்த மின் தூண்டிகள் ஆதலால் இந்த வளையத்தில் உள்ள மின்னோட்டத்தின் அளவு அதிகரிக்கிறது. இந்த மாறுபாட்டை ஒரு உணரும் சுற்றின் மூலம் கணக்கிடலாம். பிறகு இது மற்ற கருவிகளுக்கு பொருள் உள்ளதை அறிவிப்பதற்காக அனுப்படுகிறது. உலோக கண்டறிவான்கள், போக்குவரத்து விளக்குகள், கார் சுத்தம் செய்யும் இடங்கள் மற்றும் தானியங்கும் தொழிற்சாலை பயன்பாடுகள் ஆகியவற்றில் இந்த உணரிகள் பயன்படுகின்றன.