தூக்கமருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தூக்கமருந்து (Sleeping tablet / Sleeping pill / Hypnotic) என்பது முக்கியமாக தூக்கத்தைத் தூண்டும் தன்மை கொண்ட, தூக்கமின்மைக்கான சிகிச்சைக்காகவும், அறுவைச் சிகிச்சையின்போது உணர்வறுநிலையை ஏற்படுத்துவதற்காகவும் பயன்படக்கூடிய ஒரு மருந்தாகும். இந்த தூக்கமருந்தை உட்கொள்பவர்களில் சில பக்க விளைவுகள் ஏற்படும். தூக்க மருந்தை இரவில் உட்கொண்டாலும், பகலிலும் களைப்பை உணரத் தலைப்படுவர். அத்துடன் வாகனம் ஓட்ட முடியாத நிலை ஏற்படுவதனால், தூக்கமருந்தை உட்கொண்ட ஒருவர் வாகனம் ஓட்டினால் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும் என்பதனால், அம்மருன்தை உட்கொள்பவர் வாகனம் ஓட்டுதல் தடுக்கப்படும். இவ்வகையான மருந்துகள் பொதுவாக நரம்புத் தொகுதியில் மாற்றங்களை ஏற்படுத்தும் தன்மை கொண்டமையால் உறுதியற்ற ஒரு தளம்பல் நிலையைக் கொண்டிருப்பர்.

தூக்கமருந்தானது மைய நரம்பு மண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதனால், அளவுக்கதிகமாக உட்கொள்ளப்படின் அது மூளையையும் செயலிழக்கச் செய்து பாரதூரமான விளைவை ஏற்படுத்துவதுடன், இறப்பை ஏற்படுத்தலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூக்கமருந்து&oldid=1363663" இருந்து மீள்விக்கப்பட்டது