துவைத வனம்
துவைத வனம் (Dvaitavana) (சமசுகிருதம்:|द्वैतवन), மகாபாரத இதிகாசத்தில் வன பருவத்தின் தொடக்கத்தில் கூறப்படும் ஒரு காடு ஆகும். குரு நாட்டின் தென்மேற்கில் அமைந்த துவைத வனம், காம்யக வனத்திற்கு தெற்கில் சரசுவதி ஆற்றின் கரையில் இருந்ததாக மகாபாரதம் கூறுகிறது. சூதாட்டத்தில் துரியோதனனிடம் நாடு மற்றும் மற்றும் அனைத்து செல்வங்கள் இழந்த தருமன் உள்ளிட்ட பாண்டவர்கள் திரௌபதியுடன், 12 ஆண்டுகள் வன வாசம் மேற்கொள்ள துவைத வனத்தில் தங்கினர்.[1]
துவைத வனத்தில் பாண்டவர்கள்
[தொகு]12 ஆண்டுகால வன வாச காலத்தை கழிக்க துவைத வனத்தில் தங்கியிருந்த பாண்டவர்களுக்கு மார்க்கண்டேயர், நளன்-தமயந்தியின் துயரமான கதையை எடுத்துக் கூறி ஆறுதல்படுத்தினார். மேலும் துவைத வனத்திற்கு வருகை புரிந்த வியாசர், பாண்டவர்களை குறிப்பாக அருச்சுனனை தவமியற்றி தெய்வீக அஸ்திரங்களை பெற்றுக் கொள்ள ஆலோசனை கூறினார்.[2] அருச்சுனன் சிவபெருமானை நோக்கி தவமிருந்து தெய்வீக ஆயுதங்கள் பெற கயிலை மலை சென்றான்.
துவைத வனம் வந்த முனிவர் லோமசர் தருமரை சந்தித்து அகத்தியர், இராமர், பரசுராமர் மற்றும் ரிஷ்யசிருங்கர் மற்றும் தேவ-அசுரப் போர் போன்ற வரலாறுகளை கூறினார்.பாண்டவர்களுடன் லோமச முனிவரும் சேர்ந்து நைமிசாரண்யம், கயை மற்றும் கங்கை ஆறு போன்ற இடங்களுக்கு தீர்த்த யாத்திரை மேற்கொண்டு, மீண்டும் துவைத வனத்தில் தங்கினர்.
துவைத வனத்தில் பாண்டவர்கள் இருக்கும் போது, ஒருமுறை துரியோதனன் தனது கூட்டாளிகளான துச்சாதனன் மற்றும் கர்ணனுடன் துவைத வனத்திற்குச் சென்று அங்குள்ள குளத்தில் குளித்தனர். அப்போது அக்குளத்தில் குளித்துக் கொண்டிருந்த கந்தர்வர்களின் தலைவன் சித்திரசேனனால் துரியோதனாதிகள் சிறைபிடிக்கப்பட்டனர். இதனை அறிந்த வீமன் உள்ளிட்ட பாண்டவர்கள் கந்தர்வனை வென்று, துரியோதனாதிகளை மீட்டனர்.[3]
சிறிது காலம் காம்யக வனத்திற்குச் சென்று தங்கிய பாண்டவர்கள், வன வாசத்தின் 12ஆம் ஆண்டின் தொடக்கத்தின் போது மீண்டும் பாண்டவர்கள் துவைத வனத்திற்கு திரும்பினர். 12 ஆண்டு வன வாசம் முடித்த பாண்டவர்கள் ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை மேற்கொள்ள விராடன் மன்னராக உள்ள மத்சய நாட்டிற்கு சென்றனர்.[4][5]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ SECTION XXIV of Mahabharata
- ↑ Vyasa's Mahabharatam (in ஆங்கிலம்). Academic Publishers. 2008. pp. 197–205. ISBN 978-81-89781-68-2.
- ↑ ADI SANKARCHARYA (1975). 1975 AD OF PURANIC ENCYCLOPEDIA. p. 130.
- ↑ The Mahabharata: Volume 3 (in ஆங்கிலம்). Penguin UK. 2015-06-01. p. 216. ISBN 978-81-8475-293-9.
- ↑ SECTION XXIV of Mahabharata