துவிங்கிள் கலியா
துவிங்கிள் கலியா Twinkle Kalia | |
---|---|
பிறப்பு | 1982 |
தேசியம் | இந்தியா |
பணி | ஆயுள் காப்பீட்டு முகவர் |
அறியப்படுவது | இலவச அவசர ஊர்தி சேவை |
வாழ்க்கைத் துணை | இமாங்சு கலியா |
துவிங்கிள் கலியா (Twinkle Kalia)(பிறப்பு 1982) இந்தியாவைச் சேர்ந்த ஒரு சமூகச் செயற்பாட்டாளர் ஆவார். 1982 ஆம் ஆண்டு பிறந்த இவர் புது தில்லியில் வசித்து வருகிறார். அவசர ஊர்திகளுக்காக நிதியளித்தும் இயக்கியும் வருகிறார். இவருக்கு 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் பெண்களுக்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான நாரி சக்தி விருது வழங்கப்பட்டது .
வாழ்க்கை
[தொகு]கலியா 1982 ஆம் ஆண்டில் பிறந்தார். 2002 ஆம் ஆண்டு இவர் தனது கணவர் இமாங்சுவை திருமணம் செய்து கொண்ட போது கணவர் வரதட்சணை வேண்டாம் என்று கூறினார். வாடகைக்கு அவசர ஊர்தியை ஓட்டி வந்த அவர் சொந்தமாக ஓர் அவசர ஊர்தியை வாங்க விரும்பினார். இமாங்சுவின் தந்தை ஆறு வருடங்கள் கோமா நிலைக்குச் சென்றதால், 14 வயதில் அவர் வேலைக்குச் செல்ல வேண்டியிருந்தது. தந்தைக்கு கோமா ஏற்படாமலிருந்தால் குடும்பம் அவசர ஊர்தியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல மணிநேரங்களை வீணாக்காமல் இருந்திருக்கும்.[1]
கலியாவுக்கு கல்லீரல் புற்றுநோய் வந்ததால் அவசர ஊர்தி மற்றும் கவனிப்பின் மதிப்பை இவரும் உணர்ந்தார். இவரும் இவருடைய கணவரும் வாழ்வாதாரத்திற்காக ஆயுள் காப்பீட்டு முகவர்களாக பணியில் ஈடுபடுகிறார்கள். ஆனால் இவர்கள் தாங்கள் சேமிக்கும் பணத்தை எல்லாம் அவசர ஊர்தி வாங்குவதற்கும் இயக்குவதற்கும் செலவிட்டுள்ளனர். [1] கலியாவும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டார். மூடப்படாத கழிவுநீர் வடிகால்களால் இந்நோய் ஏற்பட்டதாக கலியா நம்பினார். இச்சிக்கல் குறித்து கலியா பல்வேறு புகார் செய்தாலும் நேர்மறையாக எதுவும் நடக்கவில்லை. ஓர் அரசியல்வாதியாக மாறுவதுதான் ஒரே வழி என்பதை கலியா உணர்ந்தார். 2017 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத்தில் போட்டியிட்டார் [2] .
துவிங்கிள் கலியாவுக்கு 2019 ஆம் ஆண்டு நாரி சக்தி விருது வழங்கப்பட்டது. "2018" ஆம் ஆண்டுக்கான இவ்விருது இந்திய குடியரசுத் தலைவரால் அவரது இல்லத்தில் வழங்கப்பட்டது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். [3]
2019 ஆம் ஆண்டில் இவர்கள் மற்ற நகரங்களிலும் அவசர ஊர்தி சேவையில் செயல்பட்டனர். இவரும் இமாங்சுவும் மம்தா பானர்ச்சி மற்றும் நகரத் தந்தை பிர்காத் அக்கீம் ஆகியோரை சந்தித்து கொல்கத்தாவில் அவசர ஊர்தி குழுவை அமைப்பது குறித்து விவாதித்தனர். [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ Banka, Richa (2017-03-21). "City's 'first woman ambulance driver' joins civic poll fray". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-25.
- ↑ "Nari Shakti Puraskar - Gallery". narishaktipuraskar.wcd.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-04-11.
- ↑ "Free ambulance service provider to come to Kolkata". The Statesman (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-11-13. பார்க்கப்பட்ட நாள் 2020-04-25.