துவாரகேசுவர் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துவாரகேசுவர் ஆறு
தால்கிசோர் ஆறு
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
நகரம்பாங்குரா, ஆரம்பாக்கு
சிறப்புக்கூறுகள்
மூலம்திபோனி மலை
 ⁃ அமைவுபுருலியா மாவட்டம், சோட்டா நாக்பூர் மேட்டுநிலம், மேற்கு வங்காளம்
வெளியேற்றம் 
 ⁃ அமைவுஉரூப்நாராயணன் ஆறு
வடிநில சிறப்புக்கூறுகள்
துணை ஆறுகள் 
 ⁃ இடதுகாந்தேசுவரி ஆறு, குக்குரா ஆறு, பைரை ஆறு
 ⁃ வலதுசிலபதி ஆறு

துவாரகேசுவர் ஆறு (Dwarakeswar River)(தல்கிசர் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தின் மேற்கு பகுதியின் முக்கிய ஆறாகும்.

ஆற்றோட்டம்[தொகு]

இந்த ஆறு புருலியா மாவட்டத்தின் மாதபூருக்கு அருகில் உருவாகி பாங்குரா மாவட்டத்தில் சாட்னாவில் நுழைகிறது. இது மாவட்ட தலைநகர் வழியே பாய்ந்து கிழக்கு பர்தாமன் மாவட்டத்தின் தென்கிழக்கு முனையில் நுழைகிறது. பின்னர் ஹூக்லி மாவட்டம் வழியாகச் செல்கிறது.[1]

சிலாய் ஆறு துவாரகேசுவர் ஆற்றுடன் கட்டாள் அருகே இணைகிறது. இந்த ஆறுகள் இணைந்து உருவாகும் ஆறு இரப்நாராயண் ஆறு எனப்படுகிறது. இரப்நாராயண் ஆறு ஊக்லி ஆற்றுடன் ஹவுரா மாவட்டத்தில் உள்ள காடியார பகுதியில் இணைகிறது.

துவாரகேசுவர் ஆற்றில் நீர் குறைவாக இருக்கும்போது (எந்த பருவத்திலும்) அதிக வண்டல் மண்ணை கொண்டிருக்கிறது. மழைக்காலங்களில் தண்ணீர் அதிகமாகக் காணப்படும் வண்டல் மண் படிவதால் நீரோட்டம் தடைப்படுகிறது. ஆரம்பாக் அருகே ஆற்றுப் படுகையில் குப்பை மற்றும் மனித செயல்பாடுகளால் ஆற்றுப்பாதையானது ஒடுக்கப்பட்டுள்ளது[தெளிவுபடுத்துக] நடவடிக்கைகள்.

திட்டங்கள்[தொகு]

துவாரகேசுவர் ஆற்றில் அணை கட்டுவதற்கான திட்டம் ஒன்று உள்ளது. துவாரகேசுவர் காந்தேசுவரி நீர்த்தேக்கம் குறித்த பூர்வாங்க திட்ட அறிக்கை ஜனவரி 2004இல் மத்திய நீர் ஆணையத்தால் தயாரிப்பதற்கான "கொள்கை அடிப்படையில்" ஒப்புதல் மார்ச் 2004இல் மாநில அரசுக்குத் தெரிவிக்கப்பட்டது.[2]

மேலும் காண்க[தொகு]

இந்தியாவின் ஆறுகள் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. Chattopadhyay, Akkori, Bardhaman Jelar Itihas O Lok Sanskriti (History and Folk lore of Bardhaman District.), (in வங்காள மொழி), Vol I, pp 33-34, Radical Impression. ISBN 81-85459-36-3
  2. Yadav, Jai Prakash Narayan. "Lok Sabha Unstarred Question No. 1670 to be answered on 2004-7-19". Irrigation Schemes. Ministry of Water Resources. Archived from the original on 2006-02-10. பார்க்கப்பட்ட நாள் 2007-02-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துவாரகேசுவர்_ஆறு&oldid=3183322" இலிருந்து மீள்விக்கப்பட்டது