துவாரகா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
துவாரகா ஆறு
Dwarka River (দ্বারকা)
Babla River
River
Tarapith.JPG
நாடு இந்தியா
மாநிலங்கள் ஜார்கண்ட், மேற்கு வங்கம்
மாவட்டங்கள் பிர்பூம் மாவட்டம், முர்சிதாபாத் மாவட்டம்
கிளையாறுகள்
 - வலம் பிரம்மணி ஆறு
நகரங்கள் சந்திரபூர், டெச்சா, தாரபீத்
அடையாளச்
சின்னம்
சோந்த்ரபூர்
நீளம் 156.5 கிமீ (97 மைல்)

துவாரகா ஆறு (Dwarka River) (பாபலா என்றும் அழைக்கப்படுகிறது) பாகிரதி ஆற்றின் துணை ஆறாகும்.

விளக்கம்[தொகு]

துவாரகா ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள சாந்தல் பர்கானாஸ் என்ற பகுதியில் தோன்றுகிறது. இது அங்கிருந்து மேற்கு வங்க மாநிலம், பிர்பூம் மாவட்டத்தின் டௌஸா வழியாக பாய்ந்து, பின்னர் மிரெர்ஷ்வர் மற்றும் ராம்பூர்ஹாட் காவல் நிலையப் பகுதிகள் வழியாகப் பாய்கிறது. இது இறுதியாக முர்சிதாபாத் மாவட்டத்தின் வழியாக பாய்ந்து பாகிரதி ஆற்றில் கலக்கிறது.[1] துவாரகா ஆற்றின் மொத்த நீளம் 156.5 கி.மீ.

முர்சிதாபாத் மாவட்டத்தில் துவாரகா ஆறு

இந்த ஆற்றின் கரையில் சில பெரிய சக்தி கோயில்கள் அமைந்துள்ளன அவை, தண்டோபீடம், மவுலகுசியா கோவில், மல்லாக்சியா கோவிலில் ஆகியவை ஆகும். இது ஒரு மிதமான அளவுள்ள ஆறு என்றாலும், இது பல பெயர்கள் மற்றும் பல சிறு கிளையாறுகையும் கொண்டு உள்ளது. இது பிஷ்ணுபூரில் இரண்டு ஆறாக பிரிகிறது. கண்டி கிளையானது கல்யாண்புர் (முர்ஷிதாபாத்) அருகே பகவதிவுடன் கலக்கிறது.[2] அதன் பல கிளைகள் மற்றும் கால்வாய்களாக பகவதிவுடன் கலக்கிறது.

டெச்சா அணை[தொகு]

துவாரகா ஆற்றின் குறுக்கே டௌஸாவில் உள்ள ஒரு அணை 1,700,000 கன சதுர மீட்டர்கள் (1,400 acre⋅ft).[3] நீரைத் தேக்கும் திறன் கொண்டது. இது பிர்பூம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 60 இன் மேற்கில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. O'Malley, L.S.S., ICS, Birbhum, Bengal District Gazetteers, p. 5, 1995 reprint, Government of West Bengal
  2. Anandabazar Patrika, www.anandabazar.com/district/nodia-murshidabbad/river-water-and-their-mingling-eyes-for-present-condition-1.418674
  3. "Poverty and Vulnerability". Vulnerability due to flood. Human Development Report: Birbhum. பார்த்த நாள் 2010-06-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துவாரகா_ஆறு&oldid=2427197" இருந்து மீள்விக்கப்பட்டது