துவாமோட்டு மொழி
துவாமோட்டு | |
---|---|
ரெயோ பா‘உமோட்டு ரெக்கோ பா‘உமோட்டு | |
நாடு(கள்) | பிரெஞ்சுப் பொலினீசியா |
பிராந்தியம் | துவாமோட்டசு, தாகிட்டி |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | தெரியவில்லை (14,400 காட்டடப்பட்டது: 1987)[1] |
ஆசுத்திரோனீசியம்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | pmt |
துவாமோட்டு மொழி அல்லது பாவுமோட்டு மொழி என்பது ஒரு தகிட்டிய மொழி ஆகும். துவாமோட்டுத் தீவுகளில் வாழும் 6700 பேரும், தாகிட்டியில் வாழும் மேலும் 2000 பேரும் இம்மொழியைப் பேசுகின்றனர். இதற்கு, பராத்தா, வகித்து, மராகா, ஃபகாத்தாவு, தப்புகோவே, நப்புக்கா, மிகிரோ ஆகிய மொழியியல் பகுதிகளில் வழங்கும் ஏழு கிளைமொழிகள் உள்ளன[2]. இம்மொழி, ஆசுத்திரோனீசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பொலினீசிய மொழிப் பிரிவைச் சேர்ந்தது. இது, அவாய் மொழி, மாவோரி மொழி, குக் தீவு மாவோரி, ஈசுட்டர் தீவுகளில் பேசப்படும் ராப்பா நூயி மொழி ஆகியவற்றை உள்ளடக்கிய கிழக்குப் பொலினீசிய மொழிகளுடன் நெருங்கிய தொடர்புள்ளது.
குறிப்புகள்[தொகு]
- ↑ துவாமோட்டு reference at எத்னொலோக் (16th ed., 2009)
- ↑ Carine Chamfrault (26 December 2008). "L'académie pa'umotu, "reconnaissance d'un peuple"" [The Pa‘umotu Academy , “recognition of a people”]. La Dépêche de Tahiti. 5 செப்டம்பர் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 November 2010 அன்று பார்க்கப்பட்டது. (பிரெஞ்சு)
வெளியிணைப்புக்கள்[தொகு]
- துவாமோட்டு மொழி எக்னோலாக்கில் (16வது பதிப்பு, 2009)