துவாங்கு அப்துல் அலீம் சாலை
| டூத்தா சாலை (துவாங்கு அப்துல் அலீம் சாலை) Jalan Duta Jalan Tuanku Abdul Halim | |
|---|---|
| முக்கிய சந்திப்புகள் | |
| தொடக்கம்: | சிகாம்புட் |
| சுல்தான் அசுலான் சா சாலை; (ஈப்போ சாலை); சிகாம்புட் சாலை
சுல்தான் அஜி அகமது சா சாலை | |
| தெற்கு முடிவு: | மலேசிய நாடாளுமன்றம் |
| அமைவிடம் | |
| முதன்மை இலக்குகள்: | குவாந்தான்; டூத்தா சாலை; ஈப்போ; டாமன்சாரா |
| நெடுஞ்சாலை அமைப்பு | |
டூத்தா சாலை அல்லது துவாங்கு அப்துல் அலீம் சாலை (மலாய்; ஆங்கிலம்: Jalan Duta அல்லது Jalan Tuanku Abdul Halim; சீனம்: 阿卜杜勒哈利姆国王街); என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரில் அமைந்துள்ள ஒரு முக்கியமான நெடுஞ்சாலை ஆகும். இந்தச் சாலை கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 1- இல் உள்ள மலேசிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கான மாற்றுச் சாலையுடன் சிகாம்புட் நகர்ப் பகுதிகளை இணைக்கிறது.
மலேசியாவின் 5-ஆவது; மற்றும் 14-ஆவது பேரரசர், துவாங்கு அப்துல் அலிம் முவாட்சம் சா (ஆட்சிக்காலம்: 1970-1975 மற்றும் 2011-2016) அவர்களின் பெயரால் இந்தச் சாலைக்குப் பெயரிடப்பட்டது.
வரலாறு
[தொகு]இந்தச் சாலை 1960-களின் முற்பகுதியில் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் பிரித்தானிய காலனித்துவ அதிகாரியான லாரன்ஸ் கில்லெமார்ட்டின் நினைவாக கில்லெமார்ட் சாலை (Guillemard Road) என்று பெயரிடப்பட்டது.[1]
நவம்பர் 26, 2014 அன்று, கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) ஜாலான் டூத்தா எனும் பெயரை ஜாலான் துவாங்கு அப்துல் அலீம் என்று மாற்றியது. ஜாலான் டூத்தா என்பது நன்கு நிறுவப்பட்ட பெயர் என்பதாலும், சாலைகளுக்கு உயிருள்ள பொது நபர்களின் பெயரை வைக்கக் கூடாது என்ற பொதுவான கொள்கைக்கு எதிரானது என்பதாலும், பெயர் மாற்றத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதையும் மீறி அரசாங்கம் மறுபெயரிடுதலைத் தொடர்ந்தது.
சிகாம்புட் வட்டச்சுற்று மாற்றுச் சாலை
[தொகு]சிகாம்புட் வட்டச்சுற்றுவழி நான்கு நிலை மாற்றுச் சாலையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இது 2004 மற்றும் 2006-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மேம்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை மலேசிய பொதுப்பணித் துறை (JKR), கோலாலம்பூர் மாநகராட்சி மற்றும் முக்கிய ஒப்பந்ததாரர் அகமத் ஜாக்கி ரிசோர்சஸ் பெர்காட் (Ahmad Zaki Resources Berhad) ஆகியோர் வழிநடத்தினர். இந்த நான்கு நிலை பரிமாற்றுச் சாலை பிப்ரவரி 26, 2007 அன்று போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது.
புதிய மாற்றுச் சாலை
[தொகு]இதற்கிடையில், புதிய இசுதானா நெகாரா மலேசியாவுக்கான மாற்றுச் சாலை; 2007-இல் கட்டப்பட்டு 2011-இல் நிறைவடைந்தது.
சாலை மாற்றுவழிகளின் பட்டியல்
[தொகு]| கிமீ | வெளிவழி | மாற்றுச் சாலை | இலக்கு | குறிப்புகள் | |
|---|---|---|---|---|---|
| சிகாம்புட் | வடக்கு ஈப்போ சாலை கெப்போங் வட்டச்சுற்று வழி தென்கிழக்கு |
மாற்றுச் சாலை | |||
| துவாங்கு அப்துல் அலீம் சாலை (டூத்தா சாலை) சிகாம்புட் சாலை நெடுஞ்சாலையின் தொடக்கம்/முடிவு | |||||
| சிகாம்புட் மேம்பாலம் | மேம்பாலத்தின் தொடக்கம்/முடிவு | ||||
| சிகாம்புட் மேம்பாலம் சிகாம்புட் சந்திப்பு சாலை |
மேம்பாலத்திற்கு கீழே வடமேற்கு சிகாம்புட் சாலை கம்போ பாரு சிகாம்புட் |
டி-சாலைச் சந்திப்புகள் | |||
| சிகாம்புட் மேம்பாலம் சுங்கை கெரு பாலம் |
|||||
| சிகாம்புட் மேம்பாலம் தொடருந்து கடக்கும் பாலம் |
|||||
| சிகாம்புட் சாலை | |||||
| துவாங்கு அப்துல் அலீம் சாலை (டூத்தா சாலை) | |||||
| சிகாம்புட் மேம்பாலம் சிகாம்புட் வட்டச்சுற்று மாற்றுச் சாலை |
மேம்பாலத்திற்கு கீழே வடக்கு ஈப்போ குவாந்தான் கெப்போங் தெற்கு கோலாலம்பூர் செராஸ் சிரம்பான் |
பல நிலை அடுக்கப்பட்ட வட்டச்சுற்று மாற்றுச் சாலை | |||
| சிகாம்புட் மேம்பாலம் புலாத்தான் ஆர்க்கிப் நெகாரா வட்டச்சுற்று வழி |
மேற்கு சுல்தான் மிசான் சைனல் அபிதீன் சாலை (ஜாலான் கிட்மாட் செத்தியா) தேசிய ஆவணக் காப்பகம் கோலாலம்பூர் நீதிமன்ற வளாகம் டூத்தா சாலை மத்திய அரசு வளாகம் தெற்கு லங்காக் துங்கு புக்கிட் துங்கு மலேசிய இஸ்லாமிய புரிதல் நிறுவனம் (IKIM) |
வட்டச்சுற்று மாற்றுச் சாலை | |||
| சிகாம்புட் மேம்பாலம் | மேம்பால தொடக்கம்/முடிவு | ||||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Historic roads among some 500 renamed in KL". Daily Express. 2 December 2014. https://www.dailyexpress.com.my/news.cfm?NewsID=94378.
