துவரிமான்

ஆள்கூறுகள்: 9°56′59.6″N 78°03′55.4″E / 9.949889°N 78.065389°E / 9.949889; 78.065389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துவரிமான்
Thuvariman

துவரிமான்
புறநகர்ப் பகுதி
துவரிமான் Thuvariman is located in தமிழ் நாடு
துவரிமான் Thuvariman
துவரிமான்
Thuvariman
துவரிமான், மதுரை (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 9°56′59.6″N 78°03′55.4″E / 9.949889°N 78.065389°E / 9.949889; 78.065389
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
ஏற்றம்168 m (551 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்கள்625019
தொலைபேசி குறியீடு+91452xxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்மதுரை, ஆரப்பாளையம், விளாங்குடி, விராட்டிப்பத்து, கூடல் நகர், தத்தனேரி, காளவாசல், எஸ். எஸ். காலனி, அரசரடி, பழங்காநத்தம், பரவை மற்றும் சமயநல்லூர்
மாநகராட்சிமதுரை மாநகராட்சி
மக்களவைத் தொகுதிமதுரை மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி உறுப்பினர்சு. வெங்கடேசன்
இணையதளம்https://madurai.nic.in

துவரிமான் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில்,[1][2] 9°56′59.6″N 78°03′55.4″E / 9.949889°N 78.065389°E / 9.949889; 78.065389 (அதாவது, 9.949900°N, 78.065400°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கடல் மட்டத்திலிருந்து சுமார் 168 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். மதுரை, ஆரப்பாளையம், விளாங்குடி, விராட்டிப்பத்து, கூடல் நகர், தத்தனேரி, காளவாசல், எஸ். எஸ். காலனி, அரசரடி, பழங்காநத்தம், பரவை மற்றும் சமயநல்லூர் ஆகியவை துவரிமான் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும். மதுரையில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டு, அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் பல பகுதிகளிலும் போட்டிகளாக நடத்தப்படுகின்றன. இவற்றில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்காக துவரிமான் பகுதியிலிருந்தும் மாடுபிடி வீரர்கள் பயிற்சி பெற்று செல்கின்றனர்.[3]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், துவரிமான் பகுதியின் மொத்த மக்கள் தொகை 4,962 ஆகும். இதில் ஆண்கள் 2,507 ஆகவும், பெண்கள் 2,455 ஆகவும் இருந்தனர். இதன் சராசரி பாலின விகிதம் 979/1,000 ஆகும். துவரிமானில், 0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 575 ஆகும், இது மொத்த மக்கள் தொகையில் 12% ஆகும். இதில் 302 ஆண் குழந்தைகள் மற்றும் 273 பெண் குழந்தைகள் அடங்குவர். குழந்தை பாலின விகிதம் 904 ஆக இருந்தது. இது சராசரி குழந்தை பாலின விகிதம் 979-ஐ விடக் குறைவாக இருந்தது. துவரிமான் மக்களின் எழுத்தறிவு விகிதம் 80.2% ஆகும். இது மதுரை மாவட்டத்தின் கல்வியறிவு விகிதமான 74.8% ஐ விட அதிகமாக இருந்தது. இதில், ஆண்களின் கல்வியறிவு விகிதம் 88.25% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 72% ஆகவும் இருந்தது.[4]

மதுரை நகரில் அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோயில் அமைப்பில், அதை விட சிறியதாக, துவரிமானிலும் மீனாட்சியம்மன் கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. மேலும், இங்கு கருப்பண்ணசாமி கோயிலும் அமைந்துள்ளது. இவை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன.[5][6] மற்றும் சக்தி மாரியம்மன் கோயில் ஒன்றும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. ராமநாத், சரஸ்வதி (1995) (in ta). காவேரியின் கதை. கங்கை புத்தக நிலையம். https://books.google.co.in/books?id=WdExAAAAMAAJ&q=%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%258D&dq=%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%258D&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwiS1LbPhrP8AhVScGwGHQQNBsMQ6AF6BAgEEAM#%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%258D. 
  2. நரசய்யா (2009) (in ta). ஆலவாய்: மதுரை மாநகரத்தின் கதை. பழனியப்பா பிரதர்ஸ். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-8379-517-3. https://books.google.co.in/books?id=BhanOQiwrgcC&pg=PA62&dq=%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%258D&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwiS1LbPhrP8AhVScGwGHQQNBsMQ6AF6BAgCEAM#v=onepage&q=%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%258D&f=false. 
  3. "ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தயாராகும் காளைகளும் கலையளர்களும்" இம் மூலத்தில் இருந்து 2023-01-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230106160230/https://www.dinakaran.com/news_detail.asp?Nid=825880. 
  4. "Thuvariman Village Population, Caste - Madurai South Madurai, Tamil Nadu - Census India". www.censusindia.co.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-06.
  5. "Arulmigu Meenatchi Sundaresvarar Temple Thuvariman, Thuvariman - 625016, Madurai District [TM032568].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-01-06.
  6. "Arulmigu Karupanasamy Temple, Thuvariman - 625016, Madurai District [TM032550].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-01-06.
  7. மாலை மலர் (2019-08-21). "துவரிமான் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா: ஆண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்" (in ta). https://www.maalaimalar.com/devotional/worship/2019/08/21101820/1257259/Mariamman-temple-Thiruvizha.vpf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=துவரிமான்&oldid=3732596" இலிருந்து மீள்விக்கப்பட்டது